நேரலையில் வானிலை அறிக்கை வாசிக்கும் போது குறுக்கே வந்த கைக்குழந்தை: வைரலாகும் கியூட் வீடியோ

நேரலையில் வானிலை அறிக்கை வாசிக்கும் போது குறுக்கே வந்த கைக்குழந்தை: வைரலாகும் கியூட் வீடியோ

Leslie Lopez

செய்தி அறிக்கை வாசித்து கொண்டிருக்கும் போது திடீரென குறுக்கிட்ட குழந்தை தாயின் காலை பற்றிக்கொண்டது. இருப்பினும் அவர் சிரித்தபடியே வானிலை அறிக்கையை வாசித்துள்ளார்.

  • Share this:
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பலர் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வருகின்றனர். மேலை நாடுகளில் ஐடி தவிர, செய்தி சேனல்களில் பணிபுரியும் பல தொகுப்பாளர்களும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது ஊழியர்கள் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. நேரலையில் செய்தி தொகுத்து வழங்கும் போது வீட்டில் உள்ள செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகளை செய்தி தொகுப்பாளரை குறுக்கிடுவது போன்ற பல வேடிக்கையான வீடியோக்கள் கடந்த ஆண்டு இணையத்தில் வலம் வந்தன.

அந்த வகையில், நேரலையில் வானிலை அறிக்கை வாசிக்கும் போது பத்திரிகையாளர் லெஸ்லி லோபஸ் (Leslie Lopez) என்பவருக்கும் இதே நிலை நேர்ந்துள்ளது. நேரலையின் போது பத்திரிகையாளரின் குழந்தை அவரை அரவணைக்கும் காட்சிகள் காண்போரை கவர்ந்திழுத்து வருகிறது. தற்போது அந்த நிகழ்ச்சியின் நட்சத்திரமாகவே குழந்தை மாறியுள்ளது. இந்த சம்பவத்தின் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி மக்கள் முகத்தில் சிரிப்பை கொண்டு வந்துள்ளது.

 இந்த வீடியோ கிளிப்பை அதே செய்தி ஊடகத்தை சேர்ந்த பத்திரிகையாளர் பிராந்தி ஹிட் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தாய் செய்தி அறிக்கை வாசித்து கொண்டிருக்கும் போது திடீரென குறுக்கிட்ட குழந்தை தாயின் காலை பற்றிக்கொண்டது. இருப்பினும் அவர் சிரித்தபடியே வானிலை அறிக்கையை வாசித்துள்ளார். பின்னர், எனது மகன் இனி நடக்க ஆரம்பித்து விடுவார். நான் எனது அனைத்து கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டேன் எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவை இப்போது வரை சுமார் 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

மேலும் இது அனைத்து வகையான கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள மக்களைத் தூண்டியுள்ளது. அவர்கள் லோபஸைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், வீடியோவில் தாய் - சேயின் பிணைப்பு குறித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற பல சம்பவங்கள் வேடிக்கையாகவும் விநோதமானவும் நடந்துள்ளன. சமீபத்தில், நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளரின் பாதிக்கப்பட்ட பல் ஒன்று திடீரென்று உடைந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உக்ரைன் நாட்டை சேர்ந்த அனுபவமுள்ள செய்தி தொகுப்பாளினி மரிச்கா படால்கோ. இவர் நேரலையில் செய்தி வசித்துக்கொண்டிருந்தபோது திடீரென அவரது முன்பல் ஒன்று விழுந்தது. இதனை உணர்ந்த மரிக்சா உடனடியாக தன் கையில், விழுந்த பல்லை எடுத்துக்கொண்டு முக பாவனையில் எந்த வேறுபாடும் இல்லாமல் செய்தியை தொடர்ந்து வாசித்தார். மேலும் உடைந்தது முன்பல் என்பதால் அந்த பல் விழுந்த இடம் வெளியே தெரியாமலும் சமாளித்தார். இந்த வீடியோ பெரிதும் வைரலானது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: