கடைசி 3 வினாடி தான் ஹைலைட்... வைரலாகும் சிறுமியின் நடனம்

கடைசி 3 வினாடி தான் ஹைலைட்... வைரலாகும் சிறுமியின் நடனம்

வீடியோ காட்சிகள்

Viral Video | கியூட்டாக நடனமாடும் அந்த சிறுமி கடைசியில் செய்வது தான் ஹைலைட்டாக அமைந்திருக்கும்.

 • Share this:
  டிவியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த சினிமா பாடலுக்கு ஏற்ப நடனமாடி கொண்டிருந்த சிறுமி, கடைசியில் டிவியை பிடித்து தொங்கி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  வீட்டில் இருக்கும் குழந்தைகளின் சேட்டையை பார்த்து ரசிக்க கண்கோடி வேண்டும். அப்படிப்பட்ட நிகழ்வுகளை மொபைலில் பதிவு செய்து அதனை பார்த்து பார்த்து மகிழ்வது ஒரு சந்தோஷமாகவே இருக்கும். ஆனால் சில சமயங்களில் குழந்தைகளின் சேட்டை விபரீதத்தில் கொண்டும் முடியும்.

  அதுப்போன்ற வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வேகமாய் வைரலாகி வருகிறது.பிரபுதேவா நடிப்பில் வெளியான லக்ஷ்மி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தித்யா பாண்டே நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் மொரோக்கோ என்னும் பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடி இருப்பார் தித்யா பாண்டே.

  இந்த பாடலை டிவியில் பார்த்த சிறுமி ஒருவர் அதேப் போன்று நடன அசைவுகளை செய்வார். கியூட்டாக நடனமாடும் அந்த சிறுமி கடைசியில் செய்வது தான் ஹைலைட்டாக அமைந்திருக்கும். அந்தப் பாடலில் பேருந்தின் கம்பியை பிடித்து தொங்குவது போல் நடனத்தை பார்த்த சிறுமி உடனே மேசையின் மீது இருக்கும் டிவியை பிடித்து தொங்கி விடுவார். இதனால் டிவி கீழே விழுந்து விடும், நல்வாய்ப்பாக இதில் சிறுமிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. 30 வினாடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோவில் குழந்தைகளின் சேட்டைகளை ரசிப்பது ஒருபுறம் இருந்தாலும் அவர்களை கவனுமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே மேலோங்கி தெரிய வருகிறது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  First published: