Home /News /trend /

ஆன்லைனில் ரூ.1.4 லட்சத்திற்கு ஆர்டர் செய்த ஒன்றரை வயது குழந்தை... அப்படி என்ன வாங்கினார் தெரியுமா?

ஆன்லைனில் ரூ.1.4 லட்சத்திற்கு ஆர்டர் செய்த ஒன்றரை வயது குழந்தை... அப்படி என்ன வாங்கினார் தெரியுமா?

Ayaansh Kumar

Ayaansh Kumar

Ayaansh Kumar | மேஜைகள், நாற்காலிகள், பூ ஸ்டேண்ட்களில் ஆரம்பித்து அயன்ஷ் குமார் வீட்டிற்குள் நுழையவே முடியாத பெரிய மரச்சாமான்கள் வரை ஆர்டர் செய்துள்ளார். இதன் ஒட்டுமொத்த மதிப்பு 2 ஆயிரம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 1.4 லட்சம் ரூபாயாம்.

மேலும் படிக்கவும் ...
எப்படி வீட்டில் உள்ள டி.வி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்களுக்கு அருகிலோ, சுவிட்ச் பாக்ஸ் பக்கத்திலோ குழந்தைகள் செல்வதை கண்டாலே போதும், வேகமாக ஓடிப்போய் வாரி அணைத்துக் கொள்வோம். ஆனால் நம்மில் பலருக்கும் இதே உஷார் மனநிலை குழந்தைகள் கையில் செல்போனை கொடுக்கும் போது இருப்பது இல்லை. ஸ்மார்ட் போன் மற்றும் லேப் டாப்களில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது சில சமயங்களில் மிகப்பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து விடும்.

நடக்கவே தெரியாத ஒன்றரை வயசு குழந்தை தனது அம்மாவின் செல்போனில் இருந்து 1.4 லட்ச ரூபாய் மதிப்பிலான மரச்சாமான்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.

அமெரிக்காவில் வசித்து வரும் பிரமோத் குமார், அவரது மனைவி மது குமார், தனது 22 மாத குழந்தையான அயன்ஷ் குமார் உடன் சமீபத்தில் நியூஜெர்சியில் உள்ள வீடு ஒன்றிற்கு குடிபெயர்ந்துள்ளனர். எனவே புது வீட்டிற்கான பர்னிச்சர்களை வாங்கும் பணியில் மது குமார் பிசியாக இருந்திருக்கிறார். அதற்காக அமெரிக்காவில் பிரபலமான வால்மார்ட் கடையின் ஆன்லைன் தளத்தில் சில பர்னிச்சர்களை தேர்வு செய்து, தனது ஷாப்பிங் கார்ட்டில் நிறைய பொருட்களை சேர்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். இடையில் போனை வைத்துவிட்டு மது வேறு வேலையை பார்க்க கிளம்பியுள்ளார்.அப்போது அயன்ஷ் குமார் அம்மாவின் செல்போனை எடுத்து விளையாட ஆரம்பித்துள்ளார். மது சற்று நேரத்திற்கு முன்பு தான் வால்மார்ட்டில் மரச்சாமான்கள் தொடர்பாக நிறைய தேடி இருந்தார் இல்லையா, அதை எல்லாம் க்ளிக் செய்து, மேஜைகள், நாற்காலிகள், பூ ஸ்டேண்ட்களில் ஆரம்பித்து அயன்ஷ் குமார் வீட்டிற்குள் நுழையவே முடியாத பெரிய மரச்சாமான்கள் வரை ஆர்டர் செய்துள்ளார். இதன் ஒட்டுமொத்த மதிப்பு 2 ஆயிரம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 1.4 லட்சம் ரூபாயாம். இதில் மேலும் அதிர்ச்சியான சம்பவம் என்னவென்றால் பொருட்கள் அனைத்தும் ஆன்லைனில் டெலிவரி செய்யப்பட்டு, வீட்டு வாசலுக்கு வந்தடையும் வரை பிரமோத், மது தம்பதிக்கு எதுவுமே தெரியாது என்பது தான்.

Also Read : தீ பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து சிறுமியை உயிரை பணயம் வைத்து காத்த இளைஞர்கள்... வைரல் வீடியோ!

பதறியடித்துக்கொண்டு வீட்டில் உள்ள இரு மூத்த பிள்ளைகளிடம் கணவன், மனைவி இருவரும் விசாரித்துள்ளனர். ஆனால் அவர்கள் அதை ஆர்டர் செய்யவில்லை என்பதை உறுதி செய்துள்ளனர். அதன் பின்னர் தான் அய்னஷ் குமார், எதிர்பாராதவிதமாக அம்மாவின் செல்போனை வைத்து அனைத்தையும் ஆர்டர் செய்து வாங்கியது தெரியவந்துள்ளது. இந்த சிக்கலில் இருந்து மீள பிரமோத் மற்றும் மது ஒட்டுமொத்த பொருட்களும் டெலிவரி செய்யப்பட்ட பிறகு, அதனை அருகேயுள்ள வால்மாட் கடையில் ரிட்டன் கொடுத்து முழுத்தொகையையும் வசூல் செய்து கொள்ளலாம் என காத்திருக்கின்றனர்.இதற்கு முன்னதாக அய்னஷ் குமார் தனது தாய், தந்தை செல்போனில் ஆன்லைன் ஷாப்பிங் செய்ததை உற்று நோக்கியிருக்கலாம் என்றால், அதனால் தான் அவர்களைப் போலவே ஆன்லைனில் உலவி, பொருட்களை க்ளிக் செய்து இருக்கலாம் என்பதும் நிபுணர்கள் கருத்தாக உள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Online shopping, Trending, United States of America

அடுத்த செய்தி