Home /News /trend /

மகள்களுக்கு உலகை சுற்றி காட்ட நீரில் மிதக்கும் அபார்ட்மெண்ட் வாங்கிய பெற்றோர்!

மகள்களுக்கு உலகை சுற்றி காட்ட நீரில் மிதக்கும் அபார்ட்மெண்ட் வாங்கிய பெற்றோர்!

Narrative Ship

Narrative Ship

Narrative ship | ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள், அது எவ்வளவு விலையாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் இரு மகள்களுக்காக மிகவும் விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி உள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ஒரு தம்பதி தங்கள் இரு மகள்களுக்காக மிகவும் விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கி உள்ளனர். இது நிலத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு அல்ல நீரில் மிதக்கும் அடுக்குமாடி குடியிருப்பு என்பதே இங்கு கவனிக்கதக்கதாக இருக்கிறது.

ஆம், லாஸ்ஏஞ்சல்ஸை சேர்ந்த கணவன் மனைவியான மார்க் மற்றும் பெத் ஹன்டர் ஆகிய இருவரும், தங்களது 2 மகள்களுக்காக குடியிருப்பு உல்லாச கப்பலில் (residential cruise ship) சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.10 கோடி) செலவழித்து ஒரு அபார்ட்மெண்ட் வாங்கி வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றனர்.

மார்க் மற்றும் பெத் ஹன்டர் ஆகியோருக்கு டீன் ஏஜ் வயதில் 2 மகள்கள் இருக்கின்றனர். தம்பதியர் இருவரும் தங்கள் இரண்டு இளம் மகள்களை ஒரு சிறிய கப்பலில் உலகம் முழுவதும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கனவு கண்டார்கள். ஆனால் போகப்போக அவர்களின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக பெரியதானது. மகள்களுக்கு உலகை சுற்றி காண்பிக்க ஒரு சிறிய கப்பலுக்கு பதிலாக, ஒரு புதிய வகை பயண கப்பலில் அபார்ட்மெண்ட்டாக வாங்க முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து Narrative என்ற குடியிருப்பு சொகுசு கப்பலில், 2 படுக்கையறைகள், 2 குளியலறை மற்றும் 18 டெக்குகள் கொண்ட அபார்ட்மெண்ட்டை 1 மில்லியன் பவுண்டுகள் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். Narrative என்ற இந்த உல்லாச பயண கப்பல் வரும் 2024-ஆம் ஆண்டு முதல் கடலில் தனது பயணத்தை துவங்க உள்ளது. இந்த மிதக்கும் நகரத்தில் 10,000 புத்தகங்களை கொண்ட நூலகம் முதல் சினிமா, பண்ணை தோட்டம், ஸ்பா, மைக்ரோ ப்ரூவரி மற்றும் மெடிக்கல் சென்டர் வரை அனைத்தும் அமைய உள்ளது.



இந்த கப்பல் 2024-ல் கடலுக்கு செல்லும் போது தம்பதியரின் மகள்களுக்கு 16 மற்றும் 14 வயது ஆகும். உல்லாச குடியிருப்பு கப்பலில் அப்பார்ட்மெண்ட் வாங்கி இருப்பது பற்றி கூறி இருக்கும் பெத் ஹன்டர், நாங்கள் தனியாக உலகைச் சுற்றி வருவதைப் பற்றி யோசித்தோம், எனவே நாங்கள் சிறிய படகுகளை வாடகைக்கு எடுத்தோம். ஆனால் இறுதியில் அவற்றுக்கு பராமரிப்பு, வேலைகள் மற்றும் ஏற்பாடுகளுக்கு அதிக நேரம் செலவாவதை கண்டோம்.

Also Read : வீடு இன்றி, தெருவோரத்தில் வசித்த நபரை காதலித்து திருமணம்.. வைரலாகும் இளம் பெண்ணின் காதல் கதை

இந்நிலையில் தான் வாங்க கூடிய பிளாட்களை கொண்ட உல்லாச பயண கப்பலைக் கட்டும் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனம் இருப்பதை அறிந்தோம். பின் தான் சொகுசு பயணகப்பலில் குடியிருப்பை வாங்க முடிவு செய்தோம் என்றார். Narrative கப்பல் ஒவ்வொரு 1,000 நாட்களுக்கு ஒருமுறை உலகை சுற்றி வர உள்ளது. ஒவ்வொரு துறைமுகத்திலும் பல இரவுகள் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Rs.10 Crore, Trending

அடுத்த செய்தி