Video | “அபராத ரசீது கொடுத்தீங்கன்னா தற்கொலை செஞ்சிருவேன்” டிராபிக் போலீசை பதற வைத்த பெண்

Video | “அபராத ரசீது கொடுத்தீங்கன்னா தற்கொலை செஞ்சிருவேன்” டிராபிக் போலீசை பதற வைத்த பெண்
மிரட்டல் விடுத்த பெண்
  • News18
  • Last Updated: September 16, 2019, 5:13 PM IST
  • Share this:
புதிய போக்குவரத்து மசோதாவின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுவரும் நிலையில், டெல்லியில் இளம் பெண் ஒருவர் அபராதம் விதித்தால் தற்கொலை செய்வேன் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

புதிய போக்குவரத்து சட்டத்தின்படி விதிமீறல்களுக்கான அபராதத்தொகை உயர்த்தப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில் புதிய அபராதத்தொகை அமலுக்கு வந்தாலும். பொதுமக்கள் - போலீசார் இடையே பிரச்னை ஏற்படுவதால் சில மாநிலங்கள் இதனை நிறுத்தி வைத்துள்ளன.

தலைநகர் டெல்லியில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு புதிய சட்டத்தின்படியே அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லி காஷ்மீர் கேட் பகுதியில் உரிய பதிவு எண் பலகை இல்லாமல் வந்த பெண் ஒருவரை மடக்கிய போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.


இதற்கு சம்மதிக்காத பெண் முதலில் தனது தாய்க்கு போன் செய்து பேசியுள்ளார். பின்னர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். ஆனால், அதிகாரிகள் மசியாததால், அபராத ரசீது கொடுத்தால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டத்தொடங்கினார்.

சுமார் 20 நிமிடமாக அந்தப் பெண்ணிடம் அதிகாரிகள் பேசி வழிக்குகொண்டுவர எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிய கடைசியில் அபாராதம் விதிக்கப்படாமலேயே அவரை விடுவித்தனர்.



Also See...

 

First published: September 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்