ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஃபோன்பே கூட வேண்டாம்.. கையை நீட்டினாலே பணம் டெபிட்.. டிஜிட்டல் எதிர்காலம்!

ஃபோன்பே கூட வேண்டாம்.. கையை நீட்டினாலே பணம் டெபிட்.. டிஜிட்டல் எதிர்காலம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இவ்வாறு கைகளில் சிப்பை பொறுத்திக் கொண்டு பண பரிவர்த்தனை செய்வதற்கு அந்த வாலட்மோர் வலைதளத்தில் உங்களுக்கென்று ஒரு கணக்கை துவங்க வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Interna, IndiaUnited KingdoUnited KingdoUnited KingdomUnited Kingdom

  டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றை தாண்டி யுபிஐ எனப்படும் முறையில் உடனடியாக செய்யப்படும் பண பரிமாற்றங்கள் வரை பல்வேறு வித பல்வேறு விதமான மாற்றங்கள் இந்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்வதில் ஏற்பட்டுள்ளன.

  அதில் இங்கிலாந்தைச்  சேர்ந்த ஒரு மனிதர் அனைவரையும் விட ஒரு படி முன்னே சென்று தன்னுடைய உடலில் எலக்ட்ரானிக் சிப்பை பொருத்திக்கொண்டு, அதன் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் இனி அவர் எப்போதும் தன்னுடன் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவைகளை எடுத்து செல்ல தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

  @paybyhand என்ற டிக்டாக் பெயரைக் கொண்ட யூகே வை சேர்ந்த இந்த நபர், தன்னுடைய கைகளில் சிப்பை பொருத்திக் கொள்வதற்கு இந்திய மதிப்பில் சுமார் 19,000 ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கையின் மணிக்கட்டில் சிப்பை பொருத்திக் கொண்டுள்ள இந்த நபர், இது வலியற்ற ஒரு செய்முறை என்றும் கூறியுள்ளார்.

  இதன் மூலம் அனைத்து விதமான டிஜிட்டல் பணபரிவர்தனைகளுக்கும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவைகளை பயன்படுத்தாமல் தன்னுடைய கைகளில் உள்ள சிப்பை ஸ்கேன் செய்து பணப்பரிவர்த்தனைகளை செய்து வருகிறார்.

  Read More: ஒலிம்பிக்கில் சேருங்க... வைரலாகும் ஆணி அடிக்கும் விளையாட்டு வீடியோ

   யுகேவை சேர்ந்த வாலட்மோர் என்று புதியதாக துவங்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் இந்த முறையை வெற்றிகரமாக செய்துள்ளார். மேலும் இவ்வாறு கைகளில் சிப்பை பொருத்தி கொள்வதற்கு, வலியை தாங்கும் மயக்க மருந்து எதுவும் தேவை இல்லை எனவும் வெறும் 15 நிமிடத்திற்குள்ளேயே உங்களது கைக்குள் சிப் பொருத்தப்பட்டு விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

  தன்னுடைய கைகளில் சிப் எவ்வாறு பொருத்தப்பட்டது என்பதையும், அதை கொண்டு எவ்வாறு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை செய்து வருகிறார் என்பதையும் பற்றிய பல்வேறு வீடியோக்களை டிக்டாக்கில் அப்லோட் செய்து வருகிறார். அவ்வாறு ஒரு வீடியோவில், பெட்ரோலுக்கு தன்னுடைய கையில் உள்ள சிப்பை கொண்டு பணம் செலுத்தும் போது அருகில் உள்ள ஒருவர் இவரைப் பார்த்து ஆச்சரியத்தில் திகைத்து விடுகிறார்.

  இவ்வாறு கைகளில் சிப்பை பொறுத்திக் கொண்டு பண பரிவர்த்தனை செய்வதற்கு அந்த வாலட்மோர் வலைதளத்தில் உங்களுக்கென்று ஒரு கணக்கை துவங்க வேண்டும் அவ்வளவுதான். இதன் பிறகு நீங்கள் உங்கள் கைகளில் சிப்பை பொறுத்திக் கொண்டு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

  Read More: காரில் உற்சாகமாக அமர்ந்து செல்லும் ஏலியன்..? - கூகுள் எர்த் செயலில் பதிவானதாக பெண் வெளியிட்ட புகைப்படம் வைரல்...

   இந்த செயலியானது கிட்டத்தட்ட ஆப்பிள் பே போன்றே செயல்படும். ஆனால் உங்கள் மொபைலை கொண்டு பணம் செலுத்துவதற்கு பதிலாக உங்கள் கைகளில் உள்ள சிப்பை கொண்டு நீங்கள் பண பரிவர்த்தனைகளை செய்வீர்கள். உங்கள் கைகளில் உள்ள சிப்பானது மொபைலுடன் இணைக்கப்பட்டு விடும்.

  மேலும் அவ்வாறு இணைக்கப்படுவதற்கு கையில் உள்ள சிப், என்எஃப்சி என்ற மின்காந்த அலைகளை கொண்டு செயல்படும் முறையை கையாள்கிறது. இதனால் ரேடியோ அலைகள் அல்லது வேறு ஏதேனும் அலைக்கற்றைகளால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயம் தேவையில்லை. மேலும் அவ்வாறு உருவாக்கப்படும் மின்காந்த அலைகளும் மிக சிறிதளவு தரவுகளைக் கொண்டு இந்த பட பரிவர்த்தனைகளை செய்து முடித்து விடும்.

  இவரின் இந்த புதிய முயற்சி கண்டு நெட்டிசன்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.“இதுதான் எதிர்காலம்” என்று ஒருவரும், “இவர் சைபர் பங்2017 இருந்து வந்தவர்” என்று இன்னொருவரும், அந்தக் ‘கார்ட் எக்ஸ்பைரி ஆகும் வரை அனைத்துமே ஜாலியாக தான் இருக்கும்” என்று மற்றொருவரும் கிண்டலாகவும் ஆச்சரியத்துடனும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Credit Card, Trending, Trending News