ஜெயலலிதா பிறந்தநாள் விழா: பெண்களுடன் நடனமாடி உற்சாகப்படுத்திய அமைச்சர் வேலுமணி

ஜெயலலிதா பிறந்தநாள் விழா: பெண்களுடன் நடனமாடி உற்சாகப்படுத்திய அமைச்சர் வேலுமணி
அமைச்சர் வேலுமணி
  • Share this:
மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனமாடி அசத்தினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு கட்டிடங்கள் சிறுவர் பூங்காக்கள் போன்றவற்றை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் இன்று திறந்து வைத்து தொகுதி மக்களோடு உற்சாக நடனம் ஆடினார்

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பூங்கா, அரசு அலுவலகம், புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் அரசு கட்டடங்களுக்கு பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.


இந்நிலையில் பேரூரை அடுத்த வேடபட்டி பேரூராட்சி ஆண்டிபாளையம் பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சரை வரவேற்கும் விதமாக மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் நடனம் ஆடி அமைச்சரை வரவேற்றனர. பின்னர் உள்ளாட்சிச் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுடன் சேர்ந்து சிறிய நடனமாடியது அங்குள்ளவர்களை உற்சாகப்படுத்தியது. மேலும் அந்தப் பகுதியில் அமைச்சர் நடனத்தை பார்த்து பொதுமக்கள் வெகுவாக ரசித்தனர்.

மேலும் படிக்க: கீழடியில் புதியதாக மண் பானைகள் கண்டெடுப்பு
First published: March 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading