நான் ஒரு தடவை சொன்னா... பாட்ஷா பட பஞ்ச் வசனம் பேசி அமைச்சர் சரோஜா அதிரடி

நான் ஒரு தடவை சொன்னா... பாட்ஷா பட பஞ்ச் வசனம் பேசி அமைச்சர் சரோஜா அதிரடி

அமைச்சர் சரோஜா

‘நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி’ என மக்கள் மத்தியில் அமைச்சர் சரோஜா பஞ்ச் வசனம் பேசி அசத்தியுள்ளார்.

 • Share this:
  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் பகுதியில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் வி.சரோஜா பட்டா இல்லாத ஏழை மக்களுக்கு வீடு தேடி சென்று பட்டா வழங்குவது பற்றியும் அவர்களின் குடும்பம், ஏழ்மை நிலை குறித்தும் ஆய்வு செய்தார். இதையடுத்து பட்டா இல்லாமல் வசிக்கும் 70 குடும்பத்தினருக்கு நிரந்தர பட்டா வழங்க ஆணையிட்டார்.

  பின்னர் பொதுமக்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா, “நான் சொல்வதையும் செய்வேன். சொல்லாததையும் செய்வேன். அதனால் தான் அனைத்து அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்திருக்கிறேன். நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என்று ரஜினியின் பஞ்ச் வசனம் பேசினார்.

  அதன் பின் 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு அட்மிஷன் பெற்ற நாமகிரிப்பேட்டை சேர்ந்த தொழிலாளி தனது மகள் மாணவி மல்லிகேஸ்வரிக்கு சீட் கிடைத்ததற்கு அமைச்சரை நேரில் சந்தித்து தமிழக அரசுக்கு நன்றியை தெறிவித்தார்.

  அந்த மாணவிக்கு மருத்துவம் படிக்கும் 5 ஆண்டு முழுவதும் புத்தக செலவைத் தானே இலவசமாக வழங்குகிறேன் என சரோஜா உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

  வீடியோ:

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Sheik Hanifah
  First published: