”என்ன சப்தம் இந்த நேரம்...” வனக்காப்பாளர் சோழமன்னன் வெர்ஷன்...! வைரல் வீடியோ

”என்ன சப்தம் இந்த நேரம்...” வனக்காப்பாளர் சோழமன்னன் வெர்ஷன்...! வைரல் வீடியோ
வனத்துறை ஊழியர்
  • News18
  • Last Updated: December 21, 2019, 11:16 AM IST
  • Share this:
கோவையில் பயிற்சி வனச்சரகர்களுக்கான கள ஆய்வின் போது வனக்காப்பாளர் ஒருவர் சக பணியாளர்களை பாடல் பாடி உற்சாகப்படுத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியை அடுத்த பூசாரிபாளையத்தை சேர்ந்தவர் சோழமன்னன். இவர் கோவை வனச்சரகத்தில் வன காப்பாளராக கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் . இவர் தனது ஓய்வு நேரங்களில் இளையராஜா பாடல்களை பாடுவது வழக்கம்.

இரவு நேரங்களில் யானை விரட்டும் பணி பணியின்போது கிடைக்கும் நேரத்தில் பொழுதுபோக்கிற்காக தனக்கு மிகவும் பிடித்த இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பாடுவது வழக்கம. கடந்த 20 வருடங்களாக இளையராஜாவின் பாடல்களை பாடி வருகிறார்.


இந்நிலையில் இன்று பயிற்சி வனச்சரகர்களுக்கான கள ஆய்வின்போது இடையே கிடைத்த சிறிய ஒய்வு நேரத்தில் சக வன ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இளையராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளார். அதனை அங்கிருந்த சக ஊழியர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.புன்னகை மன்னன் படத்தில் "என்ன சத்தம் இந்த நேரம் "என்ற பாடலை மிகவும் நேர்த்தியாக பாடியதை சக வன ஊழியர்களும், வன அதிகாரிகளும் கேட்டு ரசித்தனர்.வனக்காப்பாளர் சோழ மன்னனின் பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
First published: December 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading