• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • அவிநாசியை கலக்கும் அமால் டுமால் ஆட்டோ.. - கவனம் ஈர்க்கும் தன்னம்பிக்கை மனிதர்

அவிநாசியை கலக்கும் அமால் டுமால் ஆட்டோ.. - கவனம் ஈர்க்கும் தன்னம்பிக்கை மனிதர்

ஆட்டோ

ஆட்டோ

வாகனத்திற்கு குழந்தைகள் விரும்பியதால் அமால் டுமால் ஆட்டோ என பெயர் வைத்ததாக கூறுகிறார்.

  • Share this:
போலியோவால் ஒரு காலினை இழந்த போதும் தன்னம்பிக்கையை இழக்காத நபர் தனது கார் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஆட்டோவை கார் போல மாற்றி வடிவமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவரின் இந்த அமால் டுமால் ஆட்டோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ரங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (46), இவர் இவரது மனைவி சகுந்தலா (38), ஆரோன் (21) என தனது குடும்பத்துடன் தனது சகோதரர்கள் இருவரது குடும்பத்துடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

கரூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட அருண் 5 வயதாக இருந்த போதே போலியோ தாக்கி தனது ஒரு காலினை இழந்தார். அதன் பிறகு தனது குடும்பத்தினர் தனக்கு கொடுத்த ஊக்கம் காரணமாக சிறிதும் மனம் தளராமல் கிடைத்த வேலைகளை செய்து வந்ததாகவும் சென்னையில் இருந்த போது தனது குடும்பத்தினர் கொடுத்த ஊக்கம் காரணமாக சரக்கு ஆட்டோ ஓட்டத்துவங்கியதாகவும் அதன் பிறகு தனது வாழ்வில் ஏற்றம் ஏற்பட துவங்கியதாக கூறுகிறார்.

Also Read: YouTube Trending : 'மில்லியனை கடந்த ஹே..சிங்காரி... மகாபிரபு (எரும சாணி ) நீங்க வந்துடீங்களா? - இன்றைய ட்ரெண்டிங்

இவர் தனது குடும்பத்துடன் அவிநாசி வந்து 18 ஆண்டுகளை கடந்து விட்டதாகவும் இரும்பு கடைகளில் லோடு ஏற்றி  ஆட்டோ ஓட்டுவதுடன் பல நேரங்களில் பொருட்களை ஏற்ற இறக்க என அனைத்து வேலைகளையும் இயன்றவரை செய்து வருவதாகவும் இன்று தனக்கு சொந்தமாக வீடு  இரண்டு சரக்கு ஆட்டோ வாகனங்கள் உள்ளதாகவும் தனது மகன் ஒரு ஆட்டோ ஓட்டி வருவதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Also Read: இங்க யாருக்கும் சம்பளம் தரல.. லைவில் போட்டுடைத்த செய்தி வாசிப்பாளர் - ஷாக்கான நேயர்கள்

ஆண்டு முழுவதும் ஆட்டோ ஓட்டி வந்தாலும் குடும்பத்துடன் காரில் செல்ல வேண்டும் என்பது இவரின் தீராத ஆசையாக இருந்துள்ளது. இதனால் பழைய கார் ஒன்றை வாங்கிய போதும் அதனை தன்னால் இயக்க முடியாமல் போனதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார். பின்னர் யூ டியூப் மூலம் ஆட்டோவை கார் போல மாற்றலாம் என அறிந்த அருண் அதற்கான முன்னெடுப்புகளை செய்யத் துவங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடனடியாக 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயில் புதிய ஆட்டோ ஒன்றை வாங்கி உள்ளார். பின்னர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் உப்பளா பகுதியில் உள்ள அசோக் என்பவர் மூலம் தனது வாகனத்தை மாற்றி அமைக்க துவங்கியுள்ளார். 3 மாதங்கள் வரை இதற்கான பணிகள் நடைபெற்று தற்போது தான் இவர் இந்த வாகனத்தை அவிநாசி கொண்டு வந்துள்ளார்.

அமால் டுமால் ஆட்டோ


இந்த வாகனத்தை காண்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு குஷன் இருக்கைகள், பக்கவாட்டு கதவுகள், பவர் விண்டோ, ஏராளமான எல்.இ.டி விளக்குகள், உட்புற அலங்காரம், முகப்பு விளக்கு வடிவமைப்பு, டிவி, பேன் வெண்டிலேட்டர், பின்புற புகை போக்கி என அசத்தலாக காரில் உள்ள அத்தனை அம்சங்களையும் ஆட்டோவில் கொண்டு வந்துள்ளார்.

Also Read: ஆங்கிலேயர் கட்டிய கோவில்: போர்க்களத்தில் போரிட்ட சிவபெருமான்!

இந்த மொத்த மாற்றத்திற்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு பிடித்ததாகவும் தற்போது இந்த வாகனத்தை இயக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார். இந்த வாகனத்திற்கு குழந்தைகள் விரும்பியதால் அமால் டுமால் ஆட்டோ என பெயர் வைத்ததாகவும் அனைவருக்கும் அது பிடித்து விட்டதால் அதனையே தொடர்வதாகவும் இந்த வாகனத்தில் வெளியே செல்லும் போது வியப்புடன் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். போலியோ தாக்கத்தால் ஒரு காலை இழந்தாலும் மனம் தளராமல் கிடைத்த வாய்ப்பை வெற்றி வாய்ப்பாக மாற்றி தனது ஆசைகளை விடா முயற்சியுடன் நிறைவேற்றக் கொள்ளும் உறுதி படைத்த இவரின் செயல்கள், உழைத்தால் உயர்வு என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: