Home /News /trend /

திருமண சடங்கின் போது நைட்சூட் அணிய விருப்பம் - ஷாக் கொடுத்த மணப்பெண்

திருமண சடங்கின் போது நைட்சூட் அணிய விருப்பம் - ஷாக் கொடுத்த மணப்பெண்

திருமண சடங்கின் போது நைட்சூட் அணிய விருப்பம் - ஷாக் கொடுத்த மணப்பெண்

திருமண சடங்கின் போது நைட்சூட் அணிய விருப்பம் - ஷாக் கொடுத்த மணப்பெண்

பெரும்பாலும் மணமகனை விட மணமகள் தான் நல்ல கனமான வசீகர திருமண ஆடைகள் மற்றும் ஆபரணங்களை அணிந்து கொள்வது இந்திய திருமணங்களில் வழக்கம்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
  அனைவரது வாழ்விலும் மிக முக்கியமான தருணமாக இருப்பது திருமணங்கள். எல்லோர் மனதிலும் தங்கள் திருமணத்தைப் பற்றிய ஒரு அழகான கற்பனை இருக்கிறது. ஒரு சில திருமணங்கள் எளிமையாக குறைந்த சடங்குகள் நிறைந்ததாக இருக்கும். சில திருமணங்கள் அதிக சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுடன் ஆடம்பரம் நிறைந்ததாக இருக்கும். பொதுவாக இந்திய பாரமபரியத்தில் திருமணத்திற்கு முதல் நாளில் இருந்து திருமணம் முடியும் நாளின் இரவு வரை ஏராளமான விஷயங்கள் பின்பற்றப்படுவது மணமக்களுக்கு மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக விழித்திருப்பது, திருமணத்திற்கு முதல் நாள் இரவு சரியாக தூங்காமல் அதிகாலையிலேயே எழுந்து திருமணத்திற்கு தயராவது உட்பட பல செயல்பாடுகள் ஏற்கனவே மணமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி இருக்கும்.

  இதோடு சேர்த்து ஆடம்பரமாகவும். அழகாகவும் காட்சி அளிக்கும் திருமண ஆடைகளுடன் பலமணி நேரங்கள் மணமேடையில் உட்கார்ந்திருப்பது, சடங்குகளில் பங்கேற்பது உள்ளிட்டவை உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளும் ஜோடிக்கு சோர்வு மற்றும் மனஅழுத்தத்தை இயல்பாகவே ஏற்படுத்தும். ஏனென்றால் ஆடம்பர திருமண ஆடைகள் பெரும்பாலும் கனமானவை மற்றும் நீண்ட நேரம் அணிந்து கொள்வதற்கு ஏற்றவையாக இருப்பதில்லை.

  அதே நேரத்தில் பெரும்பாலும் மணமகனை விட மணமகள் தான் நல்ல கனமான வசீகர திருமண ஆடைகள் மற்றும் ஆபரணங்களை அணிந்து கொள்வது இந்திய திருமணங்களில் வழக்கம் என்பதால், அதிகாலையில் இருந்து சடங்குகளில் பிஸியாக இருக்கும் மணப்பெண்களுக்கு அவை குறிப்பாக மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

  Also Read : உலகின் முதல் 3D பிரிண்ட் செய்யப்பட்ட செயற்கைக் கண் பெற்ற நபர்!

  இதனிடையே சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இந்திய பெண் ஒருவர், தனது வசதியான நைட்வேர்களை அணிந்து கொண்டு அனைத்து திருமண சடங்குகளையும் முடிக்க விரும்புவதாக கூறும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், திருமணத்தில் ஃபெராஸ் (Pheras) எனப்படும் திருமண நிகழ்வுக்கு முன்பே களைத்து போன மணப்பெண் பருல் சேத்தியிடம் (Parul Sethi), வீடியோ எடுத்து கொண்டிருக்கும் அவரது சகோதரி இன்னும் கப்புல் போட்டோஷூட் உட்பட சில போட்டோஷூட்கள் எடுக்க வேண்டும் என்கிறார். எனினும் மணமகள் திருமண சடங்குகள் முடிவடைவதை மட்டுமே விரும்புவதை மிகவும் சோர்வுடன் வெளிப்படுத்துகிறார்.
  சோர்வுடன் களைப்பாக அழும் தொனியில் பதிலளிக்கும் மணமகள் பருல் சேத்தி, இந்த நேரத்தில் எனக்கு நைட் சூட் (இரவு உடை) தேவை என்று பதில் அளித்தார்.தனது சூப்பர் வசதியான நைட் கவுனில் அனைத்து திருமண சடங்குகளையும் முடிக்க விரும்பும் அர்த்தத்தில் கூறிய மணமகள் பருல் சேத்தியின் பதில் தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  Also Read : ஒரு வருடத்தில் 39 முறை ஃபோன் செய்து ஆம்புலன்ஸை பயன்படுத்திய நபர் - காரணம் தெரிந்தால் கடுப்பாவீங்க!

  இன்ஸ்டாவில் இது தொடர்பான வீடியோ ஷேர் செய்யப்பட்டதில் இருந்து 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களுடன் 6.5 லட்சத்திற்கும் அதிகமான வியூக்களை பெற்றுள்ளது. இதனை பார்த்த பல இன்ஸ்டா யுஸர்கள் தங்கள் சுவாரஸ்யமான எதிர்வினைகளுடன் கருத்துகளை கமெண்ட்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர். சிலர் மணமகள் பக்கம் பேசினாலும் , ஓவர் ஆக்டிங் செய்கிறார் அவர் திருமணத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிலர் பதிவிட்டனர்.
  Published by:Vijay R
  First published:

  Tags: Viral

  அடுத்த செய்தி