Home /News /trend /

இணையத்தை பார்த்து முகம் முழுவதும் மஞ்சள் பேஸ்பேக் பூசிக்கொண்ட டிக்டாக் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

இணையத்தை பார்த்து முகம் முழுவதும் மஞ்சள் பேஸ்பேக் பூசிக்கொண்ட டிக்டாக் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்

வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்

இது குறித்து அவர் தனது டிக்டாக் வீடியோவில் கூறுகையில், " எனக்கு முகப்பரு பிரச்சனை இருந்ததால் இணையத்தில் அதற்கான தீர்வுகளைக் கண்டேன். அதனை வீட்டிலேயே செய்ய முடிவெடுத்து, பேஸ்பேக் தயாரித்து முகத்தில் தடவிக்கொண்டேன். இப்பொது முகத்தில் பற்றிக்கொண்ட நிறம் மாறவில்லை என்றாலும், முகப்பரு, சுருக்கங்கள் மற்றும் தோல் எரிச்சல் போன்றவை குறைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
பல நூற்றாண்டு காலமாக அனைத்து இந்திய குடும்பங்களின் சமயலறைகளிலும் மஞ்சள் ஒரு அத்தியாவசிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டில் சமைக்கப்படும் அனைத்து விதமான உணவுகளிலும் மஞ்சளை சேர்ப்பது வழக்கம். இதுதவிர அழகு சார்ந்த பொருளாகவும் இந்த மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மஞ்சளில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தான் காரணம். அதன்படி உடல்நலம் முதல் ஒப்பனை விஷயங்கள் வரை, மஞ்சள் கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வாகக் கூறப்படுகிறது. 

இருப்பினும், அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மஞ்சளை பயன்படுத்தும் போது அதற்கென்று சில வழிமுறைகள் இருக்கிறது. அவற்றை பின்பற்றவில்லை என்றால் கொஞ்சம் வித்தியாசமான முடிவுகளை பெறவேண்டி இருக்கும். அந்த வகையில், இந்த இந்திய பாரம்பரிய அழகு செய்முறையால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண் தனது முகப்பருவுக்கு சிகிச்சையளிக்க முயற்சித்தபோது, அதன் முடிவு அவருக்கு பயங்கரமாக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. டிக்டோக் பிரபலமான லாரன் ரென்னி என்பவர் ஆன்லைனில் காணப்படும் ஒரு DIY (Do It Yourself) செய்முறையைப் பின்பற்ற முயற்சித்துள்ளார். 

அதிலிருந்து பெற்ற விளைவுகள் காரணமாக இணைய பரிந்துரைகளை கண்மூடித்தனமாகப் நம்பக்கூடாது என்ற ஒரு விஷயத்தையும் அவர் கற்றுக்கொண்டுள்ளார். ஏனெனில் மஞ்சள் பேஸ் பேக்கை முகம் முழுவதும் பூசிய பிறகு அவரது முகம் ஆரஞ்சு நிறத்திற்கு மாறியுள்ளது. அதிலும் சுமார் பல நாட்களுக்கு அவரது முகம் ஆரஞ்சு நிறத்திலேயே இருந்தது தான் மேலும் சோகம். இணையத்தில் அவர் கண்டறிந்த DIY ஆலோசனையின் படி, அவர் தனது வீட்டிலேயே ஒரு மஞ்சள் நிற பேஸ் பேக்கை தயார் செய்துள்ளார். 

இருப்பினும், அவர் தனது முழு செயல்முறையிலும் இரண்டு முக்கிய விஷயங்களை செய்ய தவறியுள்ளார். அதாவது பேஸ்பேக்கை முகத்தின் எந்த பகுதிகளில் தடவ வேண்டும், பேஸ்பேக்கை எவ்வளவு நேரம் முகத்தில் விட்டுவைக்க வேண்டும் என்ற இரு விஷயங்களையும் சரிவர செய்யவில்லை. இதன் காரணமாகவே அவருடைய முகம் சீட்டோஸ் சிப்ஸ் கலரில் மாறிவிட்டது. முகத்தில் படிந்த நிறத்தை மறைய வைக்க லாரன், தனது முகத்தை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ முயற்சித்தபோதும், நிறம் போகவில்லை. அந்த நிறம் அவரது முகத்தில் சுமார் மூன்று வாரங்கள் நீடித்தது என்றும் தனது டிக்டாக் பதிவில் வெளியிட்டுள்ளார்.

Also read... ஒபாமாவுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக 'ஷூ' விற்பனை - விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க!

இது குறித்து அவர் தனது டிக்டாக் வீடியோவில் கூறுகையில், " எனக்கு முகப்பரு பிரச்சனை இருந்ததால் இணையத்தில் அதற்கான தீர்வுகளைக் கண்டேன். அதனை வீட்டிலேயே செய்ய முடிவெடுத்து, பேஸ்பேக் தயாரித்து முகத்தில் தடவிக்கொண்டேன். இப்பொது முகத்தில் பற்றிக்கொண்ட நிறம் மாறவில்லை என்றாலும், முகப்பரு, சுருக்கங்கள் மற்றும் தோல் எரிச்சல் போன்றவை குறைந்துள்ளது" என்று கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. மஞ்சள் என்பது இயற்கை குணங்களை கொண்டிருந்தாலும், இணையத்தில் கூறப்படும் அனைத்து விஷயங்களையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்பதற்கு இவரே ஒரு உதாரணம்.

மஞ்சள் அழகு தேவைகளுக்கு ஒரு நல்ல தீர்வாகும். ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். முழு முகத்திற்கும் தடவக்கூடாது. இதன் நிறம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் இதனை மிகக் குறுகிய நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) என்ற பாலிபினாலிக் வேதியியல் பொருள் அடங்கியுள்ளது. இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடிய நன்மைகளை சொல்ல முடியதாக அளவு பயன்களைத் தரும் பொருளாக உள்ளது. இது ஒரு எண்ணெய் கலவை ஆகும். தாவரங்களுக்கு பச்சை நிறத்தை கொடுக்கும். ஆனால் மிகவும் வலுவான மற்றும் மாற்றக்கூடிய குளோரோபில் போன்றது. மஞ்சளிலிருந்து எடுக்கப்படும் குர்குமின் எண்ணெய் மற்றும் தூள் ஒரு வண்ணமயமாக்கல் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Tik Tok, Trending

அடுத்த செய்தி