தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் பகுதியை சேர்ந்தவர் டிக் டாக் திவ்யா. இவர் "ஐ லவ் யூ கார்த்தி" டிக்டாக்கில் கார்த்தியை தேடி அலைந்த திவ்யாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். திவ்யா என்ற பெயரைக் கொண்ட இவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலடைந்தவர்.
தன்னை கார்த்தி என்பவர் காதலித்து ஏமாற்றி விட்டதாக அடிக்கடி
டிக்டாக்கில் வீடியோவை வெளியிட்டு வந்தார். கார்த்திக்காக பாடல் பாடுவது, கார்த்திக்காக சமையல் செய்வது, கார்த்திக்காக ஊர் ஊராக சென்று கார்த்தி குறித்து விசாரிப்பது என்று பல்வேறு வீடியோக்களை இவர் பதிவிட்டு வந்தார்.
எப்போதும் கார்த்தி பற்றி பேசும் டிக் டாக் திவ்யா, சமீபத்தில் திருநங்கைகளை பற்றி இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கினார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக, ஆத்திரமடைந்த திருநங்கைகள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து அவரது வீட்டிற்கே சென்றுவிட்டனர்.
திருநங்கைகளை பற்றி தவறாக பேசியதால் திவ்யாவை வெளுத்து வாங்கிய திருநங்கைகள், அவரை காலில் விழ வைத்து இனி யாரை பற்றியும் தவறாக பேசக் கூடாது என்று பாடம் புகட்டியுள்ளனர்.
திருநங்கைகளை தவறாக பேசிய டிக்டாக் திவ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அவரது தாயையும் தாக்கி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர் திருநங்கைகள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.