முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தேயிலை தோட்டத்தில் கூலாக வாக்கிங் சென்ற புலி - இணையத்தை கலக்கும் வீடியோ

தேயிலை தோட்டத்தில் கூலாக வாக்கிங் சென்ற புலி - இணையத்தை கலக்கும் வீடியோ

தேயிலை தோட்டத்தில் உலாவந்த புலி

தேயிலை தோட்டத்தில் உலாவந்த புலி

Viral Video : சில வினாடிகள் நின்று மக்களை கவனித்த புலி பின்னர் தனது வழியை பார்த்துக்கொண்டு தோட்டத்திற்குள் சென்று விடுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

தேயிலை தோட்டத்திற்குள் ஜாலியாக உலாவரும் புலியின் வீடியோவை ஒடிசா மாநில இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை முதலில் படமாக்கிய வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மனோவுக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.

"இதோ ஒரு தேயிலை தோட்டத்தில் ஒரு கம்பீரமான புலி உள்ளது. சிலர் புலிகள் சஃபாரி செய்ய  புலிகள் காப்பகத்திற்குச் செல்கிறார்கள். ஆனால் பல முறை  ஒரு புலியை கூட பார்க்க முடியாமல் திரும்புகின்றனர். அவர்களுக்காகத்தான் இந்த பிரம்மாண்டமான காட்சி. இதை நேரில் கண்டவர்கள் மிகவும் அதிஷ்டசாலிகள்" என்று ட்வீட் செய்திருந்தார்.

அந்த வீடியோவை படமாகியிருந்த   @Mano_Wildlife என்ற வன உயிர்கள் போட்டோகிராபரையும் தனது டீவீட்டில் குறிப்பிட்டிருந்தார். 25 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில் சாலை வழியாக செல்லும் மக்கள் தேயிலை தோட்டத்திற்குள் நிற்கும் புலியை பார்த்து வண்டியை நிறுத்துகிறார்கள். இவர்களை சில வினாடிகள் நின்று கவனித்த புலி பின்னர் தனது வழியை பார்த்துக்கொண்டு தோட்டத்திற்குள் சென்று விடுகிறது.

வியாழன் அன்று வெளியிடப்பட்ட இந்த வீடியோ ட்விட்டரில் 3000க்கும் அதிகமான லைக்குகளையும் 150,000க்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது. பல சமூக ஊடக பயனர்கள் வீடியோவைப் பற்றி சுவாரஸ்யமான முறையில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்தியாவில் மதிப்பிடப்பட்ட புலிகளின் எண்ணிக்கை 2006 இல் 1,411 இல் இருந்து 2018 இல் 2,967 ஆக உயர்ந்துள்ளது. 2018 புலிகள் கணக்கெடுப்பில் மத்தியப் பிரதேசம் 526 புலிகளை கொண்டு முதலிடத்தைப் பிடித்தது.

ஒரு அறிக்கையின்படி, கன்ஹா, பாந்தவ்கர், பென்ச், சத்புரா, பன்னா மற்றும் சஞ்சய்-துப்ரி ஆகிய ஆறு புலிகள் காப்பகங்களைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் ஆண்டுதோறும் சுமார் 250 குட்டிகள் பிறக்கின்றன. அதை தொடர்ந்து கர்நாடக 524 புலிகளையும், உத்தரகாண்ட் 442 புலிகளையும் கொண்டுள்ளது.

First published:

Tags: Tiger, Twitter