காண்பவரின் மனதை மயக்கும் புலி குட்டியின் செயல் - வைரல் வீடியோ!

காண்பவரின் மனதை மயக்கும் புலி குட்டியின் செயல் - வைரல் வீடியோ!

"மகிழ்ச்சி என்பது ஒரு தாயின் அரவணைப்பு தான்" என்று சுசாந்தா நந்தா தனது வீடியோ போஸ்டின் தலைப்பில் கூறினார்.

"மகிழ்ச்சி என்பது ஒரு தாயின் அரவணைப்பு தான்" என்று சுசாந்தா நந்தா தனது வீடியோ போஸ்டின் தலைப்பில் கூறினார்.

  • Share this:
ஒரு குழந்தைக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய ஆறுதல் என்றால் அது தாயின் அரவணைப்பு தான். ஒரு தாயின் கைகளில் இருக்கும் குழந்தையைப் பார்க்கும்போது நம் இதயம் இயல்பாகவே பரவசமடைகிறது. இதுபோன்றதொரு மனதைக் கவரும் வீடியோ இப்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா ஒரு புலி குட்டி தனது தாயைக் கட்டிப்புரண்டு உருளும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். வெறும் 30 வினாடி நீளமுள்ள இந்த வீடியோ கிளிப்பைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் மனம் உருகும். புலிக்குட்டி தனது தாயைச் சுற்றி விளையாடுவதுடன், தாயிடம் சேட்டை செய்து கொண்டிருந்தது.

"மகிழ்ச்சி என்பது ஒரு தாயின் அரவணைப்பு தான்" என்று சுசாந்தா நந்தா தனது வீடியோ போஸ்டின் தலைப்பில் கூறினார்.

அப்படி என்னதான் இந்த வீடியோவில் இருக்கிறது?

ட்விட்டரில் சுவாரஸ்யமான போஸ்ட்களை அடிக்கடி பகிர்ந்து வரும் ஒரு அதிகாரி சுசன்னா, புலி தனது குட்டியுடன் அட்டகாசம் செய்யும் வீடியோவை சுசன்னா சமீபத்தில் பகிர்ந்துள்ளார். 17,000 தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டும் 2,100 லைக்குகளை சேகரித்தும் இன்னமும் வேகமாக இந்த வீடியோ மக்களிடையே பரவி வருகிறது. கமெண்ட் பிரிவுகளில் யூசர்கள் பெரும்பாலும் தாய்மையை விவரிக்கும் கருத்துகளை கமெண்டு போஸ்ட்செய்து தங்களது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். "ஒரு தாயின் அரவணைப்புடன் எதையும் நம்மால் ஒப்பிடப்படமுடியாது. தாயின் அரவணைப்பு சொர்க்கம் போன்றது" என்று ஒரு யூசர் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மற்றொரு யூசர், "உச்சகட்ட மகிழ்ச்சி!" என்று கமெண்ட் செய்திருந்தார்.எந்த உயிரினத்திற்கும் பெற்றெடுத்தப்பின் தாய்மைக்கான பொறுப்புகள் முடிந்து விடுவதில்லை. குழந்தையோ/குட்டியோ வயிற்றில் வளரும் வரை பொக்கிஷமாக காத்தும், பிறந்தபின் உயிரையே கொடுத்து காக்கும் பெரும் பொறுப்பை தாய்மையுணர்வை கொடுள்ளவர்கள் கடைபிடிப்பார்கள். மேலும் தாய் என்பவள் குழந்தையையோ/குட்டியையையோ உலகை எதிர்கொள்ளும் அளவிற்கு வாழ்க்கையில் போராடவும், வேட்டையாடவும் கற்றுத்தருகிறாள். தாய் என்பதில் எவ்வித வேறுபாடுகளும் இல்லை, அது புலியாக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி.
Published by:Arun
First published: