ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வனவிலங்குப் பூங்காவில் புலிக்குட்டி மீது சவாரி செய்யும் குரங்கு... வைரலாகும் அசத்தல் வீடியோ

வனவிலங்குப் பூங்காவில் புலிக்குட்டி மீது சவாரி செய்யும் குரங்கு... வைரலாகும் அசத்தல் வீடியோ

சீனாவிலுள்ள வனவிலங்குப் பூங்காவில் குரங்கை சுமந்து செல்லும் புலி

சீனாவிலுள்ள வனவிலங்குப் பூங்காவில் குரங்கை சுமந்து செல்லும் புலி

சீனாவிலுள்ள வனவிலங்குப் பூங்காவில் புலிக்குட்டி ஒன்று குரங்கை சுமந்து செல்லும் காட்சி சமூக ஊடகத்தில் வைரலாகி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விலங்குகள் என்றாலே நமக்கு முதலில் தோன்றுவது அச்ச உணர்வுதான். ஏனெனில் பல விலங்குகள் தங்களது மரபின் காரணமாக தன்னை தற்காத்துக்கொள்ளும் நோக்குடன் வெளிப்படுத்தும் செயல்களின் விளைவுதான் நம்மை பயமுறுத்தும். ஆனால் அனைத்து விலங்குகளிடமும் ஒருவித கனிவு இருக்கிறது. அந்தக் கனிவு அவற்றுடன் பழகும்போதுதான் தெரியும். இப்பொழுது சீனாவில் உள்ள ஒரு வனவிலங்குப் பூங்காவில் குரங்குக்குட்டி, புலி குட்டியுடன் தைரியமாக சுற்றித் திரிகிறது. அவற்றின் அன்பு ததும்பும் அரிய நட்பின் காட்சி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வடக்கு சீனாவின் ஹெபீ மாகாணத்தில் உள்ள ஹெங்ஷுய் வனவிலங்குப் பூங்காவில் ’செப்டம்பர்’ என பெயரிடப்பட்ட 3 மாத புலி குட்டியின் மீது 4 மாதமே ஆன ஒரு மெக்காக் இனத்தைச் சார்ந்த Ban Jin முதுகில் ஏறி சவாரி செய்கிறது. DailyMail-ன் அறிக்கையின்படி, இந்த இரண்டு உயிரினங்களும் ஒன்றாக ஒரே நேரத்தில் பிறந்து ஒன்றாக வளர்ந்து வருவதால் இத்தகைய வலிமையான பிணைப்பைக் கொண்டுள்ளது என்று கூறினார்.

Also read: Bigg Boss Tamil 4 : பிக் பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா... இந்த வார நாமினேஷன் தொடங்கியது

பூங்கா மேலாளர் Ms டேய் கூறுகையில், விலங்குகள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கும், அதனால்தான் வனவிலங்குப் பூங்காவில் அதிகாரிகள் அவற்றை ஒன்றாக விளையாட அனுமதிக்கின்றனர். ஆரம்பத்தில் குரங்குக்குட்டி, புலிக் குட்டியுடன் விளையாடுவதற்கு மிகவும் பயந்தது. பின்னர் இருவருக்கும் இடையிலான அச்சம், தயக்க உணர்வு உடைந்தவுடன் அவை சிறந்த நண்பர்களாக மாறிவிட்டனர் என்றார்.

சமீபத்தில் வெளியான வீடியோவில், புலிக் குட்டியின் முதுகில் சவாரி செய்யும் பான் ஜின் என்ற குரங்குக் குட்டி, அதன் டயப்பருடன் காணப்பட்டது. சீனாவின் வீடியோ பகிர்வு ஆப்ஸான Douyin-ல் அதைப் பகிர்ந்ததும் இந்த வீடியோ விரைவாக 2 லட்சம் பார்வைகளைப் பெற்றது.

விலங்குகளின் இராஜ்ஜியத்தில் இத்தகைய நட்புகள் அரிதானவை. தினமும் சண்டை, சச்சரவு, வன்முறை, போர் என இயற்கையையும் இயற்கை அளித்த கொடையையும் நாசம் செய்துகொண்டிருக்கும் மனிதர்களுக்கு இடையில் இதுபோன்ற விலங்குகளின் பிணைப்பை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் உண்மையில் நம் மனதை இலகுவாக்கும்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Rizwan
First published:

Tags: Trending, Viral Video