வீடியோ எடுத்தபோது திடீரென சிறுவனைத் தாக்க வந்த புலி... அடுத்து நேர்ந்தது..?

அரசு பாதுகாப்பு வசதிகளை உறுதிபடுத்தவும், மக்கள் விழுப்புணர்வுடன் செயல்படவும் வீடியோவைப் பார்க்கும் இணையவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வீடியோ எடுத்தபோது திடீரென சிறுவனைத் தாக்க வந்த புலி... அடுத்து நேர்ந்தது..?
சிறுவனைத் தாக்க வந்த புலி
  • News18
  • Last Updated: December 27, 2019, 10:28 AM IST
  • Share this:
எல்லோருக்கும் எல்லா நாட்களுமே சாதாரண நாளாகக் கடந்துவிடாது. அது சவலாகவும் இருக்கலாம்..சாதகமாகவும் இருக்கலாம். எதுவானாலும் அது மறக்க முடியாத நினைவாக மனதில் பதியும். அப்படித்தான் இந்தச் சிறுவனுக்கும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஐயர்லாந்து டப்ளினில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு சீன் என்ற ஏழு வயதுச் சிறுவன் தந்தையோடு சென்றிருக்கிறார். அப்போது புலியைப் பார்த்து உற்சாகத்தில் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார். எனவே புலிக்கு கண்ணாடியால் மூடப்பட்ட கூண்டின் முன் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது இரை தேடி சாவகாசமாக வந்துக் கொண்டிருந்த புலி திடீரென ஓடி வந்து பாய்கிறது. நல்ல வேளையாக அது கண்ணாடி என்பதால் சிறுவன் உயிர் தப்பித்தான். ஏமாந்த புலி பரிதாமபாக கண்ணாடியையே வெரிக்க வெரிக்கப் பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த வீடியோ ட்விட்டரில் வேகமாகப் பரவி வருகிறது. அதேபோல் சமீப காலமாக இப்படி உயிரியல் பூங்கா செல்வோர் புலி, சிங்கம், சிறுத்தையிடம் சிக்கிக் கொள்ளும் செய்திகள் அதிகமாக காண முடிகிறது. எனவே அரசு பாதுகாப்பு வசதிகளை உறுதிபடுத்தவும், மக்கள் விழுப்புணர்வுடன் செயல்படவும் வீடியோவைப் பார்க்கும் இணையவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 

 
First published: December 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்