லியோனோரா ரேமண்ட் என்ற 100 வயது பாட்டி இணையத்தில் பலரின் இதயங்களை வென்று வருகிறார். சமீபத்தில், அவரது வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவர் ஐந்து ஆழ்ந்த நகைச்சுவையான வாழ்க்கை ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இந்த வீடியோ "ஹ்யூமன்ஸ் ஆஃப் பம்பாய்" என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர், தொப்பியுடன் வண்ணமயமான ஆடை அணிந்திருந்தார். மேலும் முடிந்தவரை மிகவும் அபிமான முறையில், ஐந்து விஷயங்களை மனதில் வைத்து வாழக்கையை கிங் சைஸ் அளவிற்கு வாழ நெட்டிசன்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் அந்த வீடியோ பதிவில் "100 வயதான லியோனோரா ரேமண்ட் தனது ஆழ்ந்த நகைச்சுவையான வாழ்க்கை ஆலோசனையை உங்களுக்கு வழங்குகிறார்" என்று கேப்ஷன் செய்யப்பட்டுள்ளது.
வீடியோவை காண கிழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்,
இன்ஸ்டாகிராமின் 'ரீல்ஸ்' ஊடகத்தில் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ, '100 வயதுடைய பாட்டியின் 5 ஆலோசனைகள்' என்று ஆரம்பமாகிறது. அந்த வீடியோவில் பாட்டியின் குறும்புத்தனமான செயல்கள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. தொடர்ந்து பாட்டியின் அறிவுரைகள் பின்வருமாறு:
1. முற்றிலும் தேவைப்படும் வரை தனிமையில் இருங்கள்
2. உங்கள் ஸ்மார்ட்போன்களை தூக்கி எறியுங்கள்.
3. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாத மதிப்புள்ள சம்பளத்தை சேமிக்கவும்
4. வாழ்க்கையை ரொம்ப சீரியஸா எடுத்துக் கொள்ளாதீர்கள்
5. முகத்தில் புன்னகையின்றி யாரையாவது பார்த்தால், அவர்களுக்கு உங்கள் புன்னகையை கொடுங்கள்.
மேற்கண்ட 5 டிப்ஸ்களை அந்த பாட்டி தனது வீடியோ மூலம் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஏராளமானோர் இந்த வைரல் வீடியோவிற்கு தங்களது கருத்துக்களை கமெண்ட்ஸ்களாக தெரிவித்து வருகின்றனர்.
Also read... வாட்ஸ் ஆப் call- ஐ ரெக்கார்டு செய்ய முடியமா? உங்கள் சந்தேகத்திற்கு இதோ பதில்!
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு சலிப்பான வாழ்க்கையை வாழ்ந்து வரலாம் அல்லது அவர்கள் தங்கள் வாழ்க்கையை நன்கு அனுபவித்திருப்பதால் அவர்களுக்கு எந்த ஒரு நோக்கமும் இருக்காது என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் வயது மூத்தவர்களிடையே அனுபவம் என்பது அதிகம். மேலும் அவர்கள் நம்மை முன்னேற தூண்டுகிறார்கள். தற்போதைய தலைமுறையினர் பலரும் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாக இருக்கும் நிலையில், இந்த வீடியோ ஒரு நல்ல விழிப்புணர்வாக இருக்கிறது. எனவே பாட்டி சொல்லை தட்டாமல் அவரின் அறிவுரைகளை கேட்போம் வாழ்வில் சிறந்து விளங்குவோம் என உறுதிமொழி ஏற்போம். தற்போது பாட்டியின் இந்த வீடியோ அதிக நெட்டிசன்களை ஈர்த்துள்ளது. வீடியோவில் அவரது ஒவ்வொரு சைகையும் அனைவரையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.