Home /News /trend /

ஆத்தாடி.. யானைகிட்டயே பால் குடிக்கும் 3 வயது குழந்தை!

ஆத்தாடி.. யானைகிட்டயே பால் குடிக்கும் 3 வயது குழந்தை!

யானைகிட்டயே பால் குடிக்கும் 3 வயது குழந்தை

யானைகிட்டயே பால் குடிக்கும் 3 வயது குழந்தை

Viral Video : நாம் நினைத்துக்கூட பார்க்காத, நம்மைவிட பல மடங்கு பெரிதான யானையிடம் குழந்தை பால் குடிக்கிறது என்றால் சற்று ஆச்சரியமாகத்தான் உள்ளது.

பொதுவாக குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திய பிறகு மாடு, ஆடு போன்ற வளர்ப்பு பிராணிகளின் பாலை கொடுத்து நாம் வளர்ப்பது உண்டு. சில சமயம், எதுவும் கிடைக்காத சூழலில் கடைகளில் கிடைக்கும் பால் பவுடரை கலந்து குழந்தைகளுக்கு தாய்மார்கள் ஊட்டுகின்றனர்.

இதுமட்டுமின்றி அரிதிலும், அரிதாக ஒட்டகப்பால் மற்றும் கழுதைப்பால் போன்றவற்றை மருத்துவக் காரணங்களுக்காக சிலர் குடிப்பது உண்டு. இன்டர்நெட்டில் இதற்கு முன்பு வைரலான வீடியோக்கள் சிலவற்றில் பசியில் வாடும் குழந்தை நாயிடம் பால் குடிப்பது போன்ற காட்சிகள் வெளிவந்திருக்கின்றன. இதேபோல, கிராமப்புறங்களில் ஆடு மற்றும் மாட்டின் மடியில் குழந்தைகள் நேரடியாக பால் குடிக்கும் காட்சிகளை நம்மில் பலர் பார்த்திருக்கக் கூடும்.

ஆனால் நாம் நினைத்துக்கூட பார்க்காத, நம்மைவிட பல மடங்கு பெரிதான யானையிடம் குழந்தை பால் குடிக்கிறது என்றால் சற்று ஆச்சரியமாகத்தான் உள்ளது. அசாம் மாநிலம், கோலாஹட் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா போரா என்ற சிறுமி. பாகன் யானைக்கு அருகே நின்று அமர்ந்து கொண்டிருக்கையில், ஹர்ஷிதா சர்வ சாதாரணமாக யானைக்கு கீழே சென்று அதன் மடியில் கை வைத்து பாலை உறிஞ்சுகிறாள்.

 



பொதுவாக யானைகள் ஊருக்குள் வந்தால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதனை ஆ என்று அண்ணாந்து பார்க்காத நபர்களே இருக்க முடியாது. யானைகள் எவ்வளவுதான் பார்க்க அழகாகவும், சாதுவாகவும் தோன்றினாலும் கூட, நாம் அதன் அருகில் செல்வதற்கு மிகுந்த அச்சம் ஏற்படும். அதன் துதிக்கையால் ஆசி வாங்கி முடிப்பதற்குள் பாதி உயிர் போய் வந்துவிடும்.

பெரியவர்களுக்கே இந்த நிலை என்றால் சின்னஞ் சிறுவர்களை சொல்லவே வேண்டியதில்லை. ஒருவித வியப்புடனும், பயத்துடனும் யானையை அவர்கள் ரசிப்பார்கள். ஆனால், யானை சவாரி செல்வது என்றாலோ, அதன் அருகில் போக வேண்டும் என்றாலோ அச்சத்தில் அலறி துடிப்பார்கள்.

இதையும் படியுங்கள் :  மகளுக்காக தந்தை செய்த செயல் - கண்கலங்க வைக்கும் புகைப்படம்

ஆனால், இவ்வளவு பெரிய யானையை கண்டு கொஞ்சமும் பயப்படாமல் ஏதோ தன்னுடைய தம்பியிடம் விளையாடுவதைப் போல குறுக்க, மறுக்க நடந்து செல்கிறார் ஹர்ஷிதா. மடியில் கை வைத்து சிறுமி பால் குடிப்பதை உணர்ந்த யானையும் தாயுள்ளத்தோடு அசையாமல், எந்த தொந்தரவும் செய்யாமல் அப்படியே நிற்கிறது. இந்த யானைக்கு பினு என்று ஹர்ஷிதா பெயர் வைத்திருக்கிறாராம். இருவருமே ஏதோ நெருங்கிய நண்பர்கள் போல அவ்வபோது விளையாடி வருகின்றனர்.

நாங்கல்லாம் புலி பால் குடித்து வளர்ந்த பரம்பரை என்று  சினிமாக்களில் வேடிக்கையான டயலாக் பேசப்படுவது உண்டு. ஆனால், ஹர்ஷிதா வளர்ந்து வந்த பிறகு நானெல்லாம் யானைப் பால் குடித்து வளர்ந்தவள் என்று மார்தட்டி சொல்லிக்கொள்ளலாம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Elephant, Viral Video

அடுத்த செய்தி