ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்தியாவின் சிங்கப்பெண்கள்.. ஆசியாவின் சக்தி வாய்ந்த 20 பெண் தொழிலதிபர் பட்டியலில் இடம்பிடித்த மூவர்!

இந்தியாவின் சிங்கப்பெண்கள்.. ஆசியாவின் சக்தி வாய்ந்த 20 பெண் தொழிலதிபர் பட்டியலில் இடம்பிடித்த மூவர்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் வணிகத்தில் சிறந்து விளங்கும் 20 பெண்களை கௌரவிக்கும் வகையில், 2022-ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் ஆற்றல்மிக்க வணிக பெண்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

Forbes-ன் ஆசியாவின் பவர்ஃபுல் பிசினஸ் வுமன் 2022 லிஸ்ட்டில் 3 சிறந்த இந்திய தொழில்முனைவோர் இடம் பெற்றுள்ளனர். ஃபோர்ப்ஸ் ஆசியா தனது நவம்பர் மாத இதழில், கோவிட்-19 தொற்று மற்றும் இதனால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை, நெருக்கடி இருந்த போதிலும் தங்கள் பிசினஸை வெற்றிகரமாக நடத்த பல ஊக்கமளிக்கும் பல்வேறு உத்திகளை கையாண்ட பெண் பிசினஸ் லீடர்களை தேர்ந்தெடுத்துள்ளது.

கணிசமான லாபத்துடன் தங்கள் பிசினஸை நடத்தி வருவது மற்றும் வலுவான தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவது உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் ஆசியாவை சேர்ந்த 20 பெண்களை Forbes முன்னிலைப்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த 3 பெண்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்களும் இந்த பட்டியலில் அடங்குவர். ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தலைவர் சோமா மோண்டல், பர்சனல் கேர் பிராண்டான Mamaearth-ன் இணை நிறுவனர் Ghazal Alagh மற்றும் எம்க்யூர் ஃபார்மாவின் நிர்வாக இயக்குனர் நமிதா தாபர் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 3 பெண்கள் ஆவர்.

சோமா மோண்டல் (Soma Mondal):

புவனேஸ்வரை சேர்ந்த இவர் ரூர்கேலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங்கில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL)-ல் பணியாற்றுவதற்கு முன் நேஷ்னல் அலுமினியம் நிறுவனத்தில் பணியாற்றினார். 2021-ல் இவர் அரசு நடத்தும் SAIL நிறுவனத்தின் தலைவரான பிறகு அதன் ஆண்டு வருவாய் மார்ச் 31, 2022-டுடன் முடிவடைந்த நிதியாண்டில் 50% வரை அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. SAIL-ன் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

Read More : கிளியோபாட்ராவின் கல்லறைக்கான பாதையா? 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சுரங்கப்பாதை எகிப்தில் கண்டுபிடிப்பு!

நமிதா தாபர் (Namita Thapar):

புனேவை தளமாகக் கொண்ட எம்க்யூர் ஃபார்மா இந்திய வணிகத்தின் நிர்வாக இயக்குநரான நமிதா தாபர், தொழில் ரீதியாக ஒரு சிஏ ஆவார். ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி இவரது தலைமையின் கீழ் எம்க்யூர் நிறுவனம் அதன் உள்நாட்டு வருவாயை இருமடங்காக உயர்ந்து ரூ.25 பில்லியனாக அதிகரித்துள்ளது. 45 வயதான நமிதா தாபர் ஒரு வணிகத் தலைவர் மட்டுமல்ல தொழில்முனைவோர் பயிற்சியாளர், ரியாலிட்டி ஷோ ஜட்ஜ் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டவராக இருந்து வருகிறார். அன் கண்டிஷன் யுவர்செல்ஃப் வித் நமிதா தாபர் என்ற யூடியூப் டாக் ஷோவை இவர் தொகுத்து வழங்கி வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இவரது தந்தை தொடங்கிய நிறுவனம் தான் எம்க்யூர் ஃபார்மா.

கசல் அலாக் (Ghazal Alagh):

ஹரியானாவின் குருகிராமில் அமைந்துள்ள Mamaearth-ன் இணை நிறுவனரான கசல் அலாக், தனது கணவர் வருணுடன் 2016-ல் இந்த நிறுவனத்தை துவக்கினார். இவரது நிறுவனம் நச்சுத்தன்மையற்ற, இயற்கையான குழந்தை பராமரிப்பு, தோல் பராமரிப்பு, முடி பராமரிப்பு பொருட்களை தயாரித்து மக்களிடம் விற்பனை செய்து வருகிறது. இவரது Honasa Consumer Private Limited சமீபத்தில் ஆன்லைன் மற்றும் ஸ்டோரில் விற்பனை மூலம் கடந்த நிதியாண்டில் $121 மில்லியனாக அதன் வருவாயை இரட்டிப்பாக்கி இருக்கிறது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Business, Trending, Viral, Women