ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அடிச்சது பாரு ஜாக்பாட்..ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு லாட்டரியில் தலா ரூ.41 லட்சம் பரிசு!

அடிச்சது பாரு ஜாக்பாட்..ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு லாட்டரியில் தலா ரூ.41 லட்சம் பரிசு!

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த மூவரும் லாட்டரியில் ஒரே நம்பரை தேர்வு செய்தனர். அதாவது 5-3-8-3-4 என்ற நம்பரை இவர்கள் தேர்வு செய்திருந்தனர். இறுதியில் இந்ந நம்பருக்கே லாட்டரி பரிசு கிடைத்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அதிர்ஷ்டம் என்பது வாழ்க்கையில் எப்போதாவது நிகழக் கூடிய விஷயம். சிலருக்கு அது வராமலே கூட போகும். சின்ன, சின்ன அதிர்ஷ்டங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஒரே நபருக்கு வருவது உண்டு. ஆனால், பேரதிர்ஷ்டம் என்று எடுத்துக் கொண்டால் ஒரு நபருக்கு அவர் வாழ்நாளில் ஒரு முறை வருவதே பெரும் வரம்தான்.

  ஒரு நபருக்கு அதிர்ஷ்டம் வருவதே பெரிய காரியம் என்றால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு ஒரே சமயத்தில் அதிர்ஷ்டம் கிடைத்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா! கொடுக்கிற கடவுள் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்!

  அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு இத்தகைய பேரதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. மாரிலாண்ட் பகுதியைச் சேர்ந்த 61 வயது நபர் ஒருவர், ஒரு டாலர் செலுத்தி லாட்டரியில் கலந்து கொண்டார். அவருடைய 28 வயது மகளும், 31 வயது மகனும் அதே கடையில் லாட்டரியில் பங்கேற்க பணம் கட்டினர்.

  Read More : இந்த ஆந்தை கூட்டத்தில் மறைந்திருக்கும் ஏலியன் ஆந்தையை உங்களால் ஐந்தே வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா.!

  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த மூவரும் லாட்டரியில் ஒரே நம்பரை தேர்வு செய்தனர். அதாவது 5-3-8-3-4 என்ற நம்பரை இவர்கள் தேர்வு செய்திருந்தனர். இறுதியில் இந்ந நம்பருக்கே லாட்டரி பரிசு கிடைத்தது.

  தந்தை உள்பட மூவருக்கும் தலா 50 ஆயிரம் டாலர்கள் பரிசுத்தொகை கிடைத்தது. இது இந்திய மதிப்பில் ரூ.41 லட்சம் ஆகும். இந்த மூவரில் ஒருவர், இந்தப் பரிசுத்தொகையை கொண்டு வீடு வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளார் என்றும், மற்ற இருவரும் முதலீடு திட்டங்களில் சேர உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  பழைய ஸ்பீடோமீட்டர் நம்பருக்கு பரிசு

  அமெரிக்காவில் இதுபோல ஆச்சரியம் அளிக்கும் வகையிலான அதிர்ஷ்ட நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. பொதுவாக லாட்டரி வாங்குபவர்கள் பலருக்கும் இந்த குழப்பம் ஏற்படும். எந்த நம்பரை தேர்வு செய்வது என தெரியாமல் திணறுவார்கள். பார்க்கின்ற ஒவ்வொரு நம்பருமே பரிசுத்தொகையை பெறப் போகின்ற நம்பராக மனதிற்கு தோன்றும்.

  இதனால், தங்களுடைய பிறந்த தேதி, திருமண தேதி போன்ற நம்பர்களைக் கொண்ட லாட்டரியை சிலர் தேர்வு செய்வது உண்டு. சிலர், தங்களுடைய வாகன நம்பர் பிளேட்டில் உள்ள எண்-ஐ தேர்வு செய்வார்கள்.

  அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவரும், இதுபோல வித்தியாசமாக நம்பரை தேர்வு செய்யப் போக, அவருக்கு இறுதியாக பரிசுத்தொகை கிடைத்துள்ளது. டக்ளஸ் எக் என்ற நபர் பழைய லாரி ஒன்றை விலைக்கு வாங்கி ஓட்டி வந்தார். அதில் உள்ள ஸ்பீடோமீட்டர் பழுதாகிவிட்ட நிலையில், இறுதியாக பதிவாகியிருந்த தொலைவு 82,466 மைல்கள் என்று இருந்தது.

  இந்நிலையில், லாட்டரி வாங்கச் சென்ற டக்ளசுக்கு எந்த நம்பரை தேர்வு செய்வது என்று குழப்பம் ஏற்பட்டபோது, இறுதியாக ஸ்பீடோமீட்டர் நம்பரை தேர்வு செய்தார். சற்றும் எதிர்பாராத விதமாக அவருக்கு பரிசுத்தொகை கிடைத்தது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Lottery, Trending, Viral