ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

French Fries கண்டுபிடித்தது நாங்க தான் - முட்டிமோதும் 3 நாடுகள்!

French Fries கண்டுபிடித்தது நாங்க தான் - முட்டிமோதும் 3 நாடுகள்!

French Fries

French Fries

French Fries | இந்த உணவின் வரலாற்றைப் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், இதனை ஒன்றல்ல, மூன்று நாடுகள் தாங்கள் தான் கண்டுபிடித்ததாக கூறி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பிரெஞ்சு ப்ரைஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு ஆகும். மழை பெய்யும் மாலை வேளையில் பஜ்ஜி, போண்டா போன்றவற்றிற்கு பதிலாக பிரெஞ்சு ப்ரைஸ் ஒரு அற்புதமான தேர்வாக இருக்கும். உருளைக்கிழங்கை தடிமனாகவும் இல்லாமல், மெல்லியதாகவும் இல்லாமல் நடுபதத்தில் நீள வாக்கில் வெட்டி, அதனை கொதிக்கும் எண்ணெயில், பொன்னிறமாக பொறித்து. அதன் மீது லேசாக உப்பு தூவி, தக்காளி சாஸ் உடன் பரிமாறினால்.. அடடா சாப்பிட என்ன அற்புதமாக இருக்கும் தெரியுமா?.

நீங்கள் அடிக்கடி பிரெஞ்சு ப்ரைஸ் வாங்கி சாப்பிடுவீர்களா?. ஆனால் இந்த உணவின் தோற்றம் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த உணவின் வரலாற்றைப் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், இதனை ஒன்றல்ல, மூன்று நாடுகள் தாங்கள் தான் கண்டுபிடித்ததாக கூறி வருகின்றனர்.

பிரான்ஸ், அமெரிக்கா, பெல்ஜியம் ஆகிய நாடுகள் உருளைக்கிழங்கை வைத்து பிரெஞ்சு ப்ரைஸை தாங்கள் தான் கண்டுபிடித்ததாக சொந்தம் கொண்டாடி வருகின்றன.

பெல்ஜிய எழுத்தாளர் ஆல்பர்ட் வெர்டியன், தனது புத்தகமான Carrement Frites-யில் பெல்ஜியத்தின் நம்மூர் பகுதியில் முதன்முதலில் பிரெஞ்சு ப்ரைஸ் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அங்குள்ள மக்கள் ஃபிஷ் பிங்கர்ஸை விரும்பி சாப்பிட்டு வந்துள்ளனர். 1680-களில் கடும் குளிரால் ஏரிகள் உறைந்து மீன் கிடைக்காமல் போனபோது, ​​உருளைக்கிழங்கை ஃபிஷ் பிங்கர் போலவே நீளவாக்கில் வெட்டி, எண்ணெயில் பொறித்து பாரம்பரியமாகத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் தெற்கு பெல்ஜியத்தில் நடந்துள்ளது, அங்கு மக்கள் பிரெஞ்சு மொழி பேசுகிறார்கள். முதல் உலகப் போரின் போது அமெரிக்க வீரர்கள் வந்தபோது, ​​​​அவர்கள் அதை பிரெஞ்சு ப்ரைஸ் என அழைக்கத் தொடங்கியதாக அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள்து.

ஆனால், பிரான்சின் பேராசிரியர் Pierre-Julien Leclair இந்த தகவலை முற்றிலும் தவறானது என மறுக்கிறார். காரணம், 1630களில் நம்மூரில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படாததால், பெல்ஜியத்தின் பிரெஞ்சு ப்ரைஸ் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை என அவர் அடித்து கூறுகிறார். மேலும் 1780ம் ஆண்டில் பாரிஸில் உள்ள பால் பான்ட் நியூஃப் அருகே உள்ள ஒரு உணவகத்தில் பிரெஞ்சு ப்ரைஸ் தயாரிக்கப்பட்டதாக பிரான்ஸ் மக்கள் கூறுகின்றனர். உருளைக்கிழங்கு பிரான்ஸ் மக்களுக்கு மிகவும் பிடித்த பொதுவான உணவு என்பதால், பிரெஞ்சு ப்ரைஸ் அங்கு நல்ல வரவேற்பை பெற்றதாக தெரிவிக்கின்றனர்.

Also Read : 3.5 கோடி சம்பள வேலையை தூக்கி எறிந்த Netflix ஊழியர்.. காரணம் என்ன.?

பிரான்ஸ், பெல்ஜியத்திற்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று அமெரிக்கர்களும் கோதாவில் குதித்துள்ளனர். அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் கூற்றுபடி, 1802 ஆம் ஆண்டில், ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன் பிரெஞ்சு சமையல்காரர் ஹோனோரே ஜூலியனை உருளைக்கிழங்கு துண்டுகளை வறுக்கவும், வெள்ளை மாளிகையில் இரவு உணவிற்கு முன் பரிமாறவும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

Also Read : 30 நொடிக்குள் இந்த மரத்தில் எத்தனை ஆந்தைகள் அமர்ந்திருக்கு என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.?

வெள்ளை மாளிகையைத் தொடர்ந்து 1850களில் அமெரிக்காவில் பிரெஞ்சு ப்ரைஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிரெஞ்சு சமையல்காரர் ஒருவர் உருளைக்கிழக்குகளை எண்ணெய்யில் வறுத்தெடுத்ததால், அது பிரெஞ்சு ப்ரைஸ் என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனை உறுதிபடுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன் 19 ஆம் நூற்றாண்டின் கையெழுத்துப் பிரதியான பொம்மிஸ் டே டேர்றோர் பிரிட்ஜ் மீ பெடிட் ட்ரான்ஸ்( Pommes de Terre frites en petites tranches) இல் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : அது ஏன் எல்லா விமானமும் வெள்ளை நிறத்தில் இருக்கு தெரியுமா.? விடை தெரிந்தால் நீங்கள் ஜீனியஸ்

இந்த மூன்று நாடுகளும் பிரெஞ்சு ப்ரைஸை சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கும் அதே சமயத்தில், இது தற்போது உலகம் முழுவதும் பிரபலமான பில்லியன் கணக்கான மக்களுக்கு பிடித்தமான உணவாக மாறிவிட்டது.

Published by:Selvi M
First published:

Tags: Potato, Trending, USA