Home /News /trend /

மலைப்பாம்பிடம் அகப்பட்ட நாயை உயிரை பணயம் வைத்து மீட்ட சிறுவர்கள் - இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

மலைப்பாம்பிடம் அகப்பட்ட நாயை உயிரை பணயம் வைத்து மீட்ட சிறுவர்கள் - இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

அதிர்ச்சி வீடியோ

அதிர்ச்சி வீடியோ

Viral Video : மலைப்பாம்பிடம் அகப்பட்ட நாய் ஒன்றை தைரியமாக சிறுவர்கள் ஒன்றிணைந்து மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dogadda
    இளம் கன்று பயமறியாது என்பது அன்றைய பழமொழி மட்டும் அல்ல இன்றைய தலைமுறைக்கும் அதே தான். அதனை நிரூபிக்கும் விதமாக இணையத்தில் சிறுவர்கள் சிலர் இணைந்து செயல்பட்ட கூட்டு முயற்சியால் ஒரு நாயின் உயிர் காப்பாற்ற பட்டுள்ளது.

    உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் பல எடுத்துக்காட்டுகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளன. அதேபோல தங்கள் செல்ல நாய்க்காக உயிரைப் பணயம் வைத்துள்ள இந்த சிறுவர்களைப் இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    ஆன்லைனில் வைரலான ஒரு அதிர்ச்சியான கிளிப்பில், மூன்று சிறுவர்கள் தங்கள் நாய்க்குட்டியைக் காப்பாற்ற ராட்சத மலைப்பாம்புடன் சண்டையிட்டனர். சம்பவம் நடந்த இடம் தெரியவில்லை, ஆனால் சிறுவர்கள் பாம்பினை தைரியமாக எதிர்த்து போராடி தங்கள் செல்லப்பிராணியை காப்பாற்றியுள்ளனர்.

     

     



     

    இந்த வீடியோ 2018ம் ஆண்டு வெளியான வீடியோ. எனினும் தற்போது வைரலாகி வருகின்றது.

     

     



     

    இளம் கன்று பயம் என்றால் என்னவென்று அறியும். அதுவே ஒரு உயிரை காப்பாற்ற வேண்டுமானால் படை நடுங்கும் பாம்பானாலும் பதம் பார்த்து விடும். பயமறியாது. என்பதற்கு இந்த வீடியோ உதாரணமாக உள்ளது.

     

     



     



     

    ALSO READ | 'உயர்திணையோ, அஃறிணையோ வலி ஒன்று தான்'... குட்டிக்காக நடு ரோட்டில் அழுத நாய் - வைரல் வீடியோ

    நாயின் வயிற்று பகுதியை முழுமையாக தன் வலிமையான உடம்பால் சுற்றி வளைத்து இருக்க பிடித்துகொள்ளும் மலைப்பாம்பை சிறுவர்கள் பிடித்து இழுத்து நாயை பாம்பின் பிடியில் இருந்து விடுதலை செய்யும் வீடியோ பார்ப்பவர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Dog, Snake, Viral Video

    அடுத்த செய்தி