கோவிட்-19: தடுப்பூசி இயக்கத்திற்காக தீவிர பங்களிப்பை வழங்கும் பெண் எலெக்ட்ரிக் ரிக்ஷா டிரைவர்...!

பெண் எலெக்ட்ரிக் ரிக்ஷா டிரைவர்

தன்மோனி போரா என்ற அப்பெண் தினமும் கால் 9 மணிக்கு மேல் மருந்தகம் ஒன்றிற்கு தனது இ-ரிக்ஷாவை எடுத்து செல்கிறார்.

  • Share this:
கோவிட் பெருந்தொற்று 18 மதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், சுயநலமற்ற பல்வேறு மனிதர்களை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டி இருக்கிறது. தொற்று காலத்திலும் தன்னுயிரை துச்சமென நினைத்து கோவிட் நோயாளிகள் பலரது உயிரை காப்பாற்றிய மனிதர்கள் பற்றி நாட்டு மக்கள் அறிந்து கொண்டனர். இதனிடையே அசாம் மாநிலத்தில் எலெக்ட்ரிக் ரிக்ஷா ஓட்டும் பெண் ஒருவர், மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் முயற்சியில் என்ஜிஓ ஒன்றுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

தன்மோனி போரா என்ற அப்பெண் தினமும் கால் 9 மணிக்கு மேல் மருந்தகம் ஒன்றிற்கு தனது இ-ரிக்ஷாவை எடுத்து செல்கிறார். அங்கிருந்து குவகாத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிவாசிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தேவையான மருத்துவப் பொருட்களை தனது வாகனத்தில் ஏற்றி கொண்டு கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் தன்னால் முடிந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய ரிக்ஷாவில் லவுட்ஸ்பீக்கர் ஒன்றை வைத்துள்ள தன்மோனி, அதில் ஜூபீன் கார்க்கின் தீம் பாடலை ஒலிக்க செய்து மக்களை தடுப்பூசி போட்டு கொள்ள வீடுகளை விட்டு வெளியே வருமாறு அழைப்பு விடுக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனது இந்த சேவை பற்றி தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் தன்மோனி. நாளை நாங்கள் செல்ல வேண்டிய இடம் முதல் நாள் மாலையே தேர்வு செய்யப்பட்டு விடும். எனது டீமில் எனது குழுவில் ASHA தொழிலாளர்கள் மற்றும் என்ஜிஓ உறுப்பினர்கள் அடங்குவர். இதுவரை நாங்கள் சுமார் 2,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளோம். தடுப்பூசி மையங்களுக்கு செயல் இயலாத நிலையில் இருந்த சுமார் 30 முதியவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பு மருந்து செலுத்தி இருக்கிறோம். நாட்டில் தீவிரமாக நடைபெற்று வரும் தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக நாங்கள் இருப்பது, மகத்தான ஒரு பொறுப்பை நிறைவேற்றும் உணர்வை தருகிறது.

ஒவ்வொரு நாளும் நான் சரியான நேரத்தில் இருந்தாக வேண்டும். ஏனென்றால் நான் லேட்டாக சென்றால் மருந்தம் மற்றும் தடுப்பூசி சிறப்பு மையங்களில் பலர் காத்திருக்க நேரிடும். நான் செய்யும் ஒரு சிறிய அளவிலான தாமதம் கூட அன்றைய தடுப்பூசி போடுவதற்கான முழு செயல்முறையை மொத்தமாக சொதப்ப செய்து விடும் என்று கூறுகிறார் தன்மோனி. துவக்கத்தில் தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் தயங்கினார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. பெரும்பாலான மையங்களில் மாலை 5 மணிக்குள் சராசரியாக தினமும் 200 முதல் 300-க்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர் என்றார்.

கருத்து வேறுபாடுகளால் தனது கணவனை பிரிந்து வாழும் இவர், வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியை சம்பாதிக்க பல்வேறு வழிகளை முயற்சித்த பின், இறுதியாக இ-ரிக்ஷாவை ஓட்ட துவங்கினார். இவருக்கு 12 வயதில் மகள் மற்றும் 10 வயதில் மகன் என இரு குழந்தைகள் உள்ளனர். இருவரையும் இ-ரிக்ஷா ஒட்டி அதில் வரும் வருமானத்தில் தான் வளர்த்து வருகிறார். வக்கீல் கட்டணம் உள்ளிட்ட சட்டப்பூர்வ கட்டணத்தை செலுத்துமளவிற்கு இவருக்கு வசதி இல்லாததால் இவர் இன்னும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்காமல் இருந்து வருகிறார். ரிக்ஷா ஓட்டுவதற்கு முன் சிசிடிவி கேமராக்களை நிறுவும் கம்பெனிகள், தையல் கடை என பல இடங்களில் வேலை பார்த்துள்ளார் தன்மோனி.

Also read... பொறுப்பற்ற பெற்றோர்கள்... அப்பா தான் முதல் குற்றவாளி - வைரலாகும் தமிழக காவல் அதிகாரியின் வீடியோ

கடும் நிதி நெருக்கடிகளுக்கு இடையே சுயமாக சம்பாதிக்க நினைத்து பல்வேறு போராட்டத்திற்கு பிறகு கடந்த 2019-ல் இ-ரிக்ஷாவை வாங்கியதாக கூறி உள்ளார். கொரோனா லாக்டவுனின் போது பெற்றோரது வீடிற்கு சென்று நிலைமையை சமாளித்ததாகவும், பல மாதங்கள் கழித்து மீண்டும் தலைநகர் திரும்பிய போது குழந்தைகளின் கல்வி கட்டணம், ரிக்ஷா இன்ஸ்டால்மென்ட்ஸ், வீடு வாடகை உள்ளிட்ட பல நெருக்கடி இருந்ததாகவும், வங்கி ஒன்றில் கடன் வாங்கி இவை அனைத்தையும் சரி செய்து மீண்டும் வாழ்க்கையை துவக்குவதற்குள் படாத பாடுபட்டதாக கூறுகிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: