Guinness World Records: கின்னஸ் சாதனை - 1000 அடி உயரமுள்ள ரூபிக் கியூப் - நெதர்லாந்து புதிர் கலைஞர் அசத்தல்!

1000 அடி உயரமுள்ள ரூபிக் கியூப்

புதிர் விளையாட்டில் ஜாம்பவானாக திகழும் கென்னத் பிராண்டன், உலகிலேயே மிகப்பெரிய ரூபிக் கியூப் புதிர் விளையாட்டை விளையாடினார்.

  • Share this:
சுமார் ஆயிரம் அடி உயரமுள்ள புதிர் விளையாட்டு ரூபிக் கியூபை உருவாக்கி நெதர்லாந்து புதிர் கலைஞர் ஒஸ்கார் வான் டெவென்டர் சாதனை படைத்துள்ளார்.

உலகிலேயே மிக உயரமான ரூபிக் கியூப் சீனாவின் ஹாங்காங் நகரில் உள்ள நினா மாலில் நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு கியூப்பும் சுமார் 2.503 மீட்டர் கன சதுரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நினா மாலின் மத்தியில் வைக்கப்பட்டுள்ள இந்த ரூபிக் கியூப், அங்கு வரும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இதுவரை கையடக்க ரூபிக் கியூப்பை மட்டுமே பார்த்த மக்களுக்கு மிகப்பெரிய ரூபிக் கியூப்பை பார்த்தவுடன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கியூப்பை ஒருவர் மட்டும் விளையாட முடியாது. குழுவாக இணைந்து ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு கியூப்களை நகர்த்த வேண்டும். இந்த வீடியோவை கின்னஸ் அமைப்பு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஆயிரம் அடி இருக்கும் உலகிலேயே மிகப்பெரிய ரூபிக் கியூப்பான இதனை 2018 ஆம் ஆண்டே உலக கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது. அந்த ரூபிக் கியூப் தற்போது நினா மாலில் காட்சிப்படுத்தப்பட்டு, அங்கு வரும் வாடிக்கையாளர்களை குழுவாக இணைந்து விளயாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாடிக்கையாளர்களும் புதிர் விளையாட்டை குழுவாக இணைந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். இந்த ராட்ச கியூப்பை நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த புதிர் கலைஞர் ஒஸ்கர் வான் டிவென்டர் வடிவமைத்துள்ளார். சில மணி நேரங்கள் போராட்டத்துக்குப் பிறகே ராட்சத ரூபிக் கியூப் புதிர் விளையாட்டில் வெற்றி பெற முடியும் என கூறும் ஒஸ்கர் வான் டிவென்டர், முதன்முதலாக நியூயார்க் புதிர் விளையாட்டு சிம்போஷியம்மில் பிப்ரவரியில் காட்சிப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். உயரம் மற்றும் அளவின் அடிப்படையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள ராட்ச ரூபிக் கியூப், விரைவாக விளையாடி நேரத்தின் அடிப்படையிலும் சாதனைகள் படைக்கும் எனவும் டிவென்டர் கூறியுள்ளார்.

புதிர் விளையாட்டில் ஜாம்பவானாக திகழும் கென்னத் பிராண்டன், உலகிலேயே மிகப்பெரிய ரூபிக் கியூப் புதிர் விளையாட்டை விளையாடினார். இந்த விளையாட்டை வெற்றிகரமாக முடிக்க அவருக்கு 7.5 மணி நேரம் எடுத்துக் கொண்டார். உலகிலேயே மிகச்சிறிய ரூபிக் கியூப்பை வெற்றிகரமாக விளையாட அவருக்கு 5 நாள் தேவைப்பட்டதாக தன்னுடைய யூ டியூப் சேனலில் கூறியுள்ளார்.

Also read... Egyptian Mummy: 3000 ஆண்டுகள் பழமையான மம்மியின் ரகசியங்களை அறிய சி.டி ஸ்கேன் பயன்படுத்தும் இத்தாலி ஆராய்ச்சியாளர்கள்!

ஆனால், அந்த ரூபிக் கியூப்பை விடவும் மிகச்சிறிய ரூபிக் கியூப்பை ஜப்பான் பொம்மை நிறுவனம் ஒன்று கடந்த ஆண்டு வடிவமைத்துள்ளது. மெகா ஹவுஸ் பொம்மை கம்பெனி சுமார் 0.39 இன்ச் அளவில் ரூபிக் கியூப்பை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. அந்த ரூபிக் கியூப்பிற்கு 1700 டால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் டோக்யோவில் நடைபெற்ற 40-வது ஹங்கேரியன் கலாச்சார நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. ரூபிக் கியூப்பை முதன்முதலாக ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலைப் பேராசிரியரான எர்னோ ரூபிக் 1974-ம் ஆண்டில் உருவாக்கினார். அவரது நினைவின் காரணமாக அவரது பெயரிலேயே அந்த புதிர் விளையாட்டு அழைக்கப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: