Home /News /trend /

கல்வி கடனை அடைக்க பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு... ஆனாலும் சோகம் தான்

கல்வி கடனை அடைக்க பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு... ஆனாலும் சோகம் தான்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Education Loan | கல்விக் கடன் வாங்கிய பின்னர் குறைந்த ஒரு சில குறிப்பிட்ட கால இடைவேளைக்குப் பிறகு அந்த கடனை திருப்பி செலுத்த தொடங்க வேண்டும்.

    கடன் என்பது ஒரு மாயச்சுழல்! அத்தியாவசியமான அவசர தேவைகளுக்கு கடன் வாங்குவது என்பதே தவறு என்று உள்ளது. தேவையற்ற செலவுகளுக்கு கடன் வாங்கி செலவு செய்தால் கடன் வாங்கிய தொகையை விட பல மடங்கு திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    ஆனால் கல்விக்காக கடன் வாங்குவது என்பது அவசியமாக கருதப்படுகிறது. படிக்க வசதி இல்லாத ஒரு சில மாணவர்கள் கல்விக் கடன் வாங்கும் நிலை உள்ளது. அது மட்டுமின்றி குறைந்த வட்டியில் பல வங்கிகளும் கடன் வசதியை வழங்குகின்றன. கல்விக் கடன் வாங்கிய பின்னர் குறைந்த ஒரு சில குறிப்பிட்ட கால இடைவேளைக்குப் பிறகு அந்த கடனை திருப்பி செலுத்த தொடங்க வேண்டும்.

    அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு மாணவி கல்வி கடனை செலுத்த முடியாமல் பெரிய கடன் சிக்கலில் மாட்டியுள்ளார். கல்விக் கடனை அடைப்பதற்கு பல வேலைகளை செய்தும் இவரால் கடனை அடைக்க முடியவில்லை. 28 வயதான கசான்ட்ரா ஜோன்ஸ் என்ற  மாணவி ஒருவர் தன்னுடைய கரு முட்டையை விற்று கல்விக் கடனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    Also Read : 13 வயதிலேயே யூடியூப் சேனலில் லட்சங்களில் சம்பாதிக்கும் சிறுவன்... யார் இவர்?

    அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும் என்றால் வசதியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் கல்வி கற்று மட்டும் தான் ஒரே வழி. அவ்வாறு கல்விக் கடன் வாங்கி படித்த பின்பும் மூன்று வேலை பார்த்த பின்பும் ஜோன்சால் கடனை அடைக்க முடியவில்லை. இந்திய ரூபாயின் மதிப்புப்படி கசான்ட்ரா ஜோன்ஸ் க்கு கிட்டத்தட்ட ₹1.2 கோடி கல்விக் கடன் பாக்கி உள்ளது என்பதை நியூயார்க் போஸ்ட் செய்தி தெரிவித்துள்ளது.

    கடனை அடைப்பதற்கு ஜோன்ஸ் மூன்று வேலைகளை பார்த்து வந்துள்ளார். வீட்டு வாடகை முதல் பல்வேறு செலவுகளை மிச்சம் பிடித்த கசான்ட்ரா ஒரு கட்டத்தில் தன்னுடைய கரு முட்டையையும் விற்று கடனை அடைக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும் $25,000 கடன் பாக்கி உள்ளது.

    கடன் கழுத்தை நெரிக்கும் நிலையில் தன்னுடைய நண்பர்கள் பரிந்துரைத்தப்படி கசான்ட்ரா தனது கருமுட்டையை விற்பனை செய்யத் துவங்கினார். முதல்முறையாக விற்பனை செய்தபோது இவருக்கு $8000 பணம் கிடைத்தது. இரண்டாவது முறை இவர் NYU ஃபெர்டில்ட்டி சென்டரில் $10000 க்கு தன்னுடைய கரு முட்டைகளை விற்பனை செய்தார்.

    இருப்பினும், கடனை முழுவதுமாக திருப்பி செலுத்த முடியவில்லை என்பதால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு மாதம் $2000 செலுத்துமாறு கடனை மறுசீரமைப்பு செய்துள்ளார். இளங்கலை படிப்புக்கு தான் இவ்வளவு செலவு செய்துள்ளார். தற்பொழுது ஜோன்ஸுக்கு பப்ளிக் ஹெல்த்தில் முதுகலை பட்டத்திற்கு நியூயார்க் யூனிவர்சிட்டியில் இடம் கிடைத்துள்ளது. இதற்கு ஆண்டுக்கு $40,000 செலுத்த வேண்டும். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ₹31,00,000 ஆகும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி