ரூ.103-க்கு இரண்டு பெட்ரூம் கொண்ட வீடு ஏலம் - எங்கு தெரியுமா?

ரூ.103-க்கு இரண்டு பெட்ரூம் கொண்ட வீடு ஏலம்

ஒட்டுமொத்தமாக வீட்டை மாற்றியமைக்கும் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த வீட்டை வாங்க முடியும்.

  • Share this:
வேல்ஸ் நகரில் விலைமதிப்பு மிக்க இடத்தில் இரண்டு பெட்ரூம் கொண்ட வீட்டுக்கு ஏல விலை வெறும் 103 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீடு வாங்குவது என்பது பலரின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது. வாழ்நாள் முழுவதும் சேமித்து வீடு வாங்குபவர்களே ஏராளமானோர் உள்ளனர். இன்னும் ஒரு சிலர் எதிர்கால முதலீடாக வீட்டை பார்க்கின்றனர். இப்போது இருக்கும் விலைவாசி உயர்வுக்கு, வீடு வாங்குவது அவ்வளவு எளிதானதாக இல்லை. அதுவும், நகரப்பகுதிகளில் என்றால் கோடிகள் இல்லாம் வீட்டை வாங்க முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிராம பகுதிகளில் கூட சதுர அடி கணக்கில் மட்டுமே நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஏக்கர் கணக்கில் விற்பனை செய்த காலம் கடந்து, சதுர அடியில் மட்டுமே அனைவரும் விற்பனை செய்ய முன் வருகின்றனர். ஆனால், இங்கிலாந்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும், கோடீஸ்வரர்கள் வாழக்கூடிய வேல்ஸ் நகரில் இருக்கும் வீடு ஒன்றுக்கு அடிப்படை ஏல விலை 103 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெட்ரூம் கொண்ட அந்த வீட்டுக்கு இவ்வளவு குறைவாக ஏல விலை நிர்ணயிக்கபட்டிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ் பகுதியில் ஒரு பெட்ரூம், மேல் பகுதியில் ஒரு பெட்ரூம் இருக்கிறது. தனியாக கிட்சன் மற்றும் பாத்ரூம் இல்லை.

Also read... 24,000 ஆண்டுகள் பழமையான சிறிய உயிரினிங்களை மீண்டும் ஆய்வகத்தில் உயிர்ப்பித்த ரஷ்ய விஞ்ஞானிகள்!

வீட்டை வாங்குபவர்கள் மிகப்பெரிய மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக வீட்டை மாற்றியமைக்கும் வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த வீட்டை வாங்க முடியும். குடும்பத்துடன் வாழ விரும்புபவர்கள் என்றால், இப்போதிருக்கும் அந்த வீட்டின் அமைப்பு ஏற்றதாக இருக்காது. வீட்டை மாற்றியமைப்பதற்கான இடவசதி இருப்பதால், அடிப்படை விலையில் வீட்டை யாராலும் வாங்க முடியாது. ஏனென்றால் ஏலத்தில் மிகப்பெரிய போட்டி இருக்கும்.

வீட்டை சுத்தம் செய்வதற்கு வாங்கப்படும் பிளீச் பவுடரின் விலையை விட, வீட்டின் ஏல அடிப்படை விலை இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். வேல்ஸ் ஆன்லைன் தகவல்படி, வீட்டை விற்பனை செய்வதற்கான பொறுப்பை Paul Fosh Auctions நிறுவனம் எடுத்துள்ளது. இந்த வீட்டின் ஏலத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வீட்டை வாங்க விருப்பம் என்றால் https://www.walesonline.co.uk/lifestyle/welsh-homes/house-two-rooms-going-auction-20744987 என்ற இணையதளம் மூலம் ஏலத்தில் பங்கேற்கலாம்.

வேல்ஸ் நகரைப் பொறுத்தவரை பில்லியன்களில் மட்டுமே வீட்டை வாங்க முடியும். அந்தவகையில், 103 ரூபாய்க்கு அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் கோடிகளில் ஏலம் போகும் என ஏல நிறுவனம் கூறியுள்ளது. அதிகப்படியான கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்பார்த்தைப்போலவே பலரது கவனத்தையும் வீட்டின் ஏலம் ஈர்த்துள்ளதாகவும் பால் போஷ் நிறுவனம் கூறியுள்ளது. விரைவில் இந்த வீட்டிற்கான ஏலம் நடைபெறும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: