ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தங்க முலாம் பூசப்பட்ட ஸ்வீட்... விலை கிலோ ரூ.16,000 - வாய்பிளக்கும் நெட்டிசன்கள்!

தங்க முலாம் பூசப்பட்ட ஸ்வீட்... விலை கிலோ ரூ.16,000 - வாய்பிளக்கும் நெட்டிசன்கள்!

தங்க முலாம் பூசப்பட்ட ஸ்வீட்

தங்க முலாம் பூசப்பட்ட ஸ்வீட்

இந்தியாவில் இப்போது தங்க முலாம் பூசப்பட்ட ஒரு இனிப்பு வகை விற்பனை செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட 1 கிலோ இனிப்பின் விலை ரூ.16,000 ஆகும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

இனிப்புகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குலாப் ஜாமூன் முதல் லட்டு, காஜு கட்லி வரை, ஒவ்வொரு நபரின் சுவை மொட்டுகளையும் திருப்திப்படுத்தும் நூற்றுக்கணக்கான வெவ்வேறு இனிப்புகள் இந்தியாவில் உள்ளன. அதேபோல ஒவ்வொரு இனிப்பின் விலையும் அதன் சுவைக்கேற்ப அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதிலும் சில இனிப்பு வகைகளின் மீது சில்வர் முலாம் பூசப்பட்டிருக்கும். அப்படி ஒரு இனிப்பு வகை தான் காஜு கட்லி. இந்த இனிப்பு ஒரு மெல்லிய உண்ணக்கூடிய வெள்ளி படலத்தால் மூடப்பட்டிருக்கும். பல இனிப்பு கடைகளில் இதனை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தங்கத்தால் மூடப்பட்ட இனிப்பு வகையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

ஆம், இந்தியாவில் இப்போது தங்க முலாம் பூசப்பட்ட ஒரு இனிப்பு வகை விற்பனை செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்ட 1 கிலோ இனிப்பின் விலை ரூ.16,000 ஆகும். இந்த பிரத்யேக இனிப்பு வகை டெல்லியின் மௌஜ்பூரில் உள்ள ஷகுன் ஸ்வீட்ஸ் என்ற கடையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை வீடியோவாக பதிவுசெய்து ஒரு யூசர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ”ரூ.16000/- மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம் முலாம் பூசப்பட்ட இனிப்பு 😍😱🔥. இதை முயற்சி செய்ய உங்கள் பணக்கார நண்பரை டேக் செய்யுங்கள்” என்று கேப்ஷன் செய்துள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Arjun Chauhan 🧿 (@oye.foodieee)டிசம்பர் 26ம் தேதி அன்று Instagramல் பகிரப்பட்டதிலிருந்து, இந்த பதிவு சுமார் 10.9 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும் பலர் தங்களது ரியாக்சன்களைபதிவிட்டு வருகின்றனர். நிறைய பேர் இதை முயற்சி செய்யத் தயாராக இருப்பதாக கூறியிருந்தாலும், பலர் இந்த பதிவிற்கு தங்கத்தைச் சேர்ப்பதால் இனிப்பின் சுவையில் எந்த மாற்றமும் இருக்க போவதில்லை.

இதனை ஏன் அவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இருப்பினும் பலர் இது தேவையற்றது மற்றும் விலை உயர்ந்தது என்று எழுதியிருந்தனர். உணவுப் பொருளில் தங்கம் சேர்க்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, துபாய் சர்வதேச நிதி மையத்தில் (DIFC) உள்ள ஆடம்பர உணவகமான பாம்பே போரோ-வின் சிறப்பு ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ராயல் தங்க பிரியாணியை அறிமுகப்படுத்தியது.


உலகின் மிக விலையுயர்ந்த பிரியாணி 'தால்' வடிவில் பரிமாறப்பட்டது. இதில் பல்வேறு அசைவ வகைகளும் சேர்க்கப்பட்டிருந்தன. இந்த தங்க பிரியாணி 23 காரட் உண்ணக்கூடிய தங்கத்தால் அலங்கரியக்கப்பட்டிருந்தது. உணவகத்தின் கூற்றுப்படி, ராயல் கோல்ட் பிரியாணி உங்கள் பாக்கெட், வங்கி கணக்குகளில் இருந்து ஒரு பெரிய தொகையை விழுங்கி விடும் என்று கூறியிருந்தனர்.

ஏனெனில் இதன் விலை 1,000 டிஹர் ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இந்தியா விலையில் இதன் மதிப்பு ரூ.19,000-திற்கும் அதிகமாக இருந்தது. பிரியாணி மட்டுமல்ல, கடந்த ஆண்டில் தங்க மாமிசம், தங்க பர்கர்கள் மற்றும் 22 காரட் தங்க வடை பாவ் போன்ற உணவுப் பொருட்களை இந்த உணவகம் அறிமுகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Gold, Netizens criticized, Sweet recipes