மனிதன் தனக்கு வேண்டிய வசதிகளை படிப்படியாக அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறான். சொகுசு வாழ்க்கை மயக்கத்தில் மனிதனின் கண்டுபிடிப்புகள் வியப்பின் உச்சத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது. பயணம் செய்ய, வேலை செய்ய, சாப்பிட, தூங்க, பொழுது போக்க இப்படி தான் சொகுசாக இருக்க எத்தனையோ சாதனங்களை கண்டுபிடித்திருக்கிறான் அந்த சாதனங்கள் எல்லாம் மனிதனை சோம்பேறிகளாக்கி இருக்கிறது.
இவைகள் பரவாயில்லை. இப்போது அறிமுகமாக உள்ள ஒன்றை நினைத்தால் தான் இன்னும் அதிர்ச்சி ஆகிறது. ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் வரிசையில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது ‘ஸ்மார்ட் டாய்லெட்’
டாய்லெட்டில் என்னய்யா ஸ்மார்ட் என்கிறீர்களா? அதற்கு விளக்கம் இருக்கிறது. பெரும்பாலான மக்கள் கழிப்பறைக்கு செல்லும்போது ஸ்மார்ட்போன்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கழிப்பறையில் எவ்வளவு நேரம் அமர்ந்திருக்கிறோம் என்றே தெரியாமல் சமூகவலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். இதை அறிந்த Kohler நிறுவனம் கழிப்பறையிலயே இதுபோன்ற அனைத்து அம்சங்களையும் வைத்து தான் ஸ்மார்ட் டாய்லெட்டை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த கழிப்பறையில் ஸ்பீக்கர்கள், அலெக்சா, ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஓபன் மற்றும் க்ளோஸ் வசதியுடன் கூடிய சூடான இருக்கை இருக்கிறது. KOHLER Konnect ஆப்ஸ்களும் உள்ளன. அதோடு ரிமோட் கண்ட்ரோல் வசதி மற்றும் எல்இடி லைட்கள் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ஸ்மார்ட் டாய்லெட்கள் என்பது அரிதான ஒன்று என்றாலும் வெளிநாடுகளில் இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறதாம். கோஹ்லர் நிறுவனம் முதன்முதலில் 2019-ல் நடைபெற்ற Consumer Electronic Show எனப்படும் CES –ல் Numi 2.0 ஸ்மார்ட் டாய்லெட்டை காட்சிப்படுத்தியது. இப்போது இந்த டாய்லெட்டுகள் விற்பனைக்கு கிடைக்கிறது. விலை அதிகமில்லை ஜென்டில்மேன். வெறும் 9 லட்சம் ரூபாய் தான்.
நோயின் தீவிரம் தாங்க முடியாமல் நைட்ரஜன் வாயு சுவாசித்து என்ஜினீயர் தற்கொலை!
இப்படி தங்கள் தயாரிப்பின் ஃபியூச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது கோஹ்லர் நிறுவனம். அப்புறம் என்ன அடுத்து வீடு கட்டும்போது டாய்லெட்டுக்காக 9 லட்சம் ரூபாய் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்..
செய்தியாளர்: ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Album, Photo Gallery