ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது? உங்கள் ஆளுமையை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு..

நீங்கள் முதலில் பார்க்கும் விலங்கு எது? உங்கள் ஆளுமையை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு..

Trending

Trending

Optical illusion | இந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் பல விலங்குகள் இருக்கின்றன. குறிப்பாக சொன்னால் 12 வெவ்வேறு விலங்குகள்இந்த இமேஜில் உள்ளன. இதை பார்க்கும் உங்களின் கண்களுக்கு முதலில் என்ன விலங்கு தெரிகிறதோ அதை பொறுத்து உங்களுடைய ஆளுமையை அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சோஷியல் மீடியாக்களில் அவ்வப்போது பல வகையான ஆப்டிகல் இல்யூஷன்கள் வைரலாகி வருகின்றன. இவற்றுள் ஒரு சில நம் கண்களுக்கும், மூளைக்கும் சவால் விடும் வகையில் இருக்கும். அதே நேரம் அவற்றில் நம் கண்களுக்கு முதலில் எது தெரிகிறதோ அதை வைத்து நம் ஆளுமையை பற்றி நிறைய மதிப்பிட முடியும்.

ஒரு ஆப்டிகல் இல்யூஷனை நாம் பார்ப்பதன் அல்லது உணர்வதன் அடிப்படையில் நாம் நம்மை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடியும். இங்கே நாம் ஜாக்பாட்ஜாய் (Jackpotjoy) என்பவர் உருவாக்கிய ஒரு ஆப்டிகல் இல்யூஷன் போட்டோவை பார்க்க போகிறோம். இந்த இல்யூஷன் Myers-Briggs பர்சனாலிட்டி டெஸ்டால் ஈர்க்கப்பட்டது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் நீங்கள் முதலில் எந்த விலங்கைக் கண்டீர்கள் என்பதைப் பொறுத்து ஒருவரின் உண்மையான குணாதிசயங்களை இது வெளிப்படுத்துவதாக கூறுகிறது.

கீழே உள்ள ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் பல விலங்குகள் இருக்கின்றன. குறிப்பாக சொன்னால் 12 வெவ்வேறு விலங்குகள் இந்த இமேஜில் உள்ளன. இதை பார்க்கும் உங்களின் கண்களுக்கு முதலில் என்ன விலங்கு தெரிகிறதோ அதை பொறுத்து உங்களுடைய ஆளுமையை அறிந்து கொள்ளலாம். அனைத்து விலங்குகளையும் அடையாளம் காணுவது ஒருவருக்கு கடினம் என்றாலும் நீங்கள் முதலில் பார்க்கும் விலங்குகள் உங்கள் ஆளுமையை எவ்வாறு வரையறுக்கின்றன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

சிங்கம் அல்லது பூனை:

படத்தில் முதலில் சிங்கத்தின் முகத்தை நீங்கள் அடையாளம் கண்டு கொண்டால், பிறப்பிலேயே உங்களிடம் ஒரு தலைமைக்கான பண்புகளை கொண்டவராக இருப்பீர்கள். உங்களிடம் அதிக நம்பிக்கை உள்ளது, இதனால் மற்றவர்கள் உங்களுக்கு அதிக மரியாதை தருவார்கள். நீங்கள் ஒரு பூனையை பார்த்திருந்தால் தீர்க்கமானவர் மற்றும் உள்முக சிந்தனை கொண்டவராக இருப்பீர்கள்.

Also Read : Smartphone கையாளும் விதத்தை வைத்தே உங்கள் குணத்தை அறியலாம்!!

ஓநாய் அல்லது திமிங்கலம்:

இந்த ஆப்டிகல் இல்யூஷனில் ஓநாய் முகத்தை நீங்கள் முதலில் கவனித்திருந்தால், நீங்கள் மர்மமானவராக இருப்பீர்கள். உங்களைப் பற்றி நீங்கள் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறீர்கள். கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க கூடியவராக இருப்பீர்கள். அதுவே நீங்கள் முதலில் திமிங்கலத்தை பார்த்திருந்தால் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதில் நீங்கள் தெளிவாக இருப்பீர்கள். இருப்பதை கொண்டு முழு திருப்தி அடைவீர்கள்.

குதிரை அல்லது ஆந்தை:

முதலில் குதிரையை பார்த்திருந்தால் நீங்கள் தைரியமானவராகவும், சுதந்திரமான மனநிலையுடனும் இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்பவராகவும் இருப்பீர்கள். முதலில் ஒரு ஆந்தையை பார்த்திருந்தால் நீங்கள் ஒரு நுட்பமான மனிதர் மற்றும் புத்திசாலியாக இருப்பீர்கள்.

Also Read : இந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் செல்போனை கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் தான்!

நரி அல்லது குரங்கு:

முதலில் நரியை கண்டால் நீங்கள் சற்று நிதானமானவராகவும் அதே சமயம் உணர்ச்சிகரமான மற்றும் தைரியமான நபராகவும் இருப்பீர்கள். நீங்கள் முதலில் பார்த்தது குரங்கின் முகம் என்றால், நீங்கள் ஒரு விளையாட்டுத்தனமான நபராக இருப்பீர்கள். நீங்கள் எப்போது எப்படி இருப்பீர்கள் என்பதை மற்றவர்கள் யூகிக்க கடினமாக இருக்கும்.

யானை அல்லது ஆமை:

யானையை முதலில் பார்த்திருந்தால் நீங்கள் ஒரு சக்திவாய்ந்த ஆத்மாவாகவும், மற்றவர்கள் மீது அன்பு மற்றும் அக்கறை காட்டுவதில் தன்னலமற்றவராகவும் இருப்பீர்கள். நீங்கள் ஆமையை பார்த்தால், மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதில் நீங்கள் வல்லவர் ஆனால் மிகவும் உள்முக சிந்தனை கொண்டவராக இருப்பீர்கள்.

Also Read : தினமும் நூடுல்ஸ் மட்டுமே சமைச்சா எப்படி சார்..! கடுப்பான கணவன் எடுத்த தடாலடி முடிவு

கரடி அல்லது ஒட்டகச்சிவிங்கி:

நீங்கள் முதலில் ஒரு கரடியை பார்த்திருந்தால் உறுதியானவர் மற்றும் தைரியமானவர். நீங்கள் முதலில் ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் ஒரு விவேகமான, நம்பிக்கையான நபர் மற்றும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை புரிந்தவராக இருப்பீர்கள்.

Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending