சமீப காலமாக அந்த பக்கம், இந்த பக்கமென்று எந்த பக்கம் திரும்பினாலும் ஆப்டிகல் இல்யூஷன் தொடர்பான ஒரு புகைப்படத்தை அல்லது ஒரு வீடியோவை பார்க்க முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், ஒட்டுமொத்த இண்டர்நெட் உலகின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்று கூறும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் ஆப்டிகல் இல்யூஷன் கான்செப்ட்கள் நிரம்பி வழிகின்றன; ஆனாலும் கூட அவைகள் பார்வையாளர்களை ஒருபோதும் சலிப்படைய வைப்பதில்லை. ஏனெனில் ஒவ்வொரு ஆப்டிகல் இல்யூஷனும் தனக்கே உரிய ஒரு பிரத்யேக கான்செப்டை உட்புதைத்துள்ளளது; எனவே எவ்வளவு எண்ணிக்கையில் பார்த்தாலும் கூட அவைகள் 'போர்' அடிக்காது!
இவை பல நேரங்களில் மிகவும் வியப்படைய மற்றும் ஆச்சரியப்பட வைப்பதாகவும் இருக்கிறது. பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன்கள் என்பவை நம்முடைய ஒட்டுமொத்த புத்திசாலித்தனத்தை சோதிக்கிறது, நம் குணநலனை வெளிப்படுத்துகிறது. தவிர நாம் எப்படிப்பட்டவர் என்பதை நம்மிடையே அளவிட வைக்கிறது. ஒரு சில ஆப்டிகல் இல்யூஷன்கள் நம் வாழ்க்கையில் மற்றும் ஆழ்மனதில் மறைந்திருக்கும் அச்சங்கள், பாதித்திருக்கும் கவலைகள் மற்றும் அடக்கப்பட்ட உணர்ச்சிகள் அனைத்தையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டவைகளாகவும் இருக்கின்றன. அந்த வகையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் நீங்கள் எப்படிப்பட்டவர், உறவுகளில் நீங்கள் நேர்மையானவரா அல்லது சீட்டிங் செய்பவரா என்பதை வெளிப்படுத்தும்.
கீழே உள்ள படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு எது தெரிந்தது.
பறவைகள்:
நீங்கள் முதலில் பார்த்தது பறவைகள் என்றால், நீங்கள் மிக மிக நேர்மையான, விசுவாசமான பார்ட்னராக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை, காதலரை ஏமாற்றும் எண்ணம் கொஞ்சம் கூட இருக்காது. நீங்கள் விதியை நம்புபவர் மற்றும் மிகவும் ரொமான்டிக் ஆனவர். ஆனால், இதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. நீங்கள் ஏற்கனவே காதலில் இருந்தாலும், விதியை நம்புபவர் என்பதால், சட்டென்று மற்றொரு நபரை இவர் தான் என்னுடைய வாழ்க்கை துணை என்று நினைப்பீர்கள்!
Also Read : இந்த படத்தில் மறைந்துள்ள 1 - 10 வரையிலான எண்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!
மரம்:
நீங்கள் முதலில் பார்த்தது மரம் என்றால், உறவுகளைப் பொறுத்தவரை நீங்கள் விசுவாசமானவர் மற்றும் அசலனாவர். பொய் சொல்லுவது, மழுப்புவது என்று எந்த பழக்கமும் கிடையாது. ஒரு முறை கமிட் செய்தால், இறுதி வரை அவர் தான் வாழ்வீர்கள். இதனால், நீங்கள் தவறான நபரை தேர்வு செய்யக்கூடும். எனவே, மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
Also Read : இந்தப் படத்தில் ஒரே நேரத்தில் 12 கருப்புப் புள்ளிகளை உங்களால் கண்டறிய முடியுமா.?
குடிசைகள்:
நீங்கள் முதலில் பார்த்தது, குடிசைகளை என்றால், உங்கள் உறவில் நீங்கள் ஏமாற்றக் கூடும். விளையாட்டாகவோ, அல்லது தீவிரமாகவோ, நீங்கள் ஒரு சீட்டராக இருக்கலாம். ஆனால், நீங்கள் உங்கள் உறவை ஏமாற்றுகிறீர்கள் என்பதை யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு செயல்படுவீர்கள். உங்கள் உறவு பிரிய நேரிடும் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்திருந்தால் கூட, நீங்கள் ஏமாற்ற தயங்க மாட்டீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.