• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • வித்தியாசமான அசைவின் மூலம் 'ஐ லவ் யூ' சொல்லும் இரண்டு வயது கிளி - நெட்டிசன்கள் வியப்பு!

வித்தியாசமான அசைவின் மூலம் 'ஐ லவ் யூ' சொல்லும் இரண்டு வயது கிளி - நெட்டிசன்கள் வியப்பு!

கிளி

கிளி

இன்ஸ்டாகிராம் தனது அதிகாரப்பூர்வ கணக்கில் வீடியோவை இது “ஐ லவ் யூ” என்று சொல்வதற்கான வழி என்று கேப்ஷனுடன் ஷேர் செய்து உள்ளது.

  • Share this:
உலகில் வாழும் எல்லா உயிரினங்களும் தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்துவது எப்போதும் ஒரு அழகான உணர்வாகவே இருக்கிறது. பறவைகள் பல விதங்களில் தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன. அதிலும் நமக்கு மிகவும் பிடித்த பறவைகளில் ஒன்றாக இருப்பது கிளி. மற்ற பறவைகளுக்கு இல்லாத சில விசித்திரமான தன்மை கிளிகளுக்கு உள்ளது. மனிதர்களாகிய நாம் பேசுவதை அப்படியே உள்வாங்கி நம்மை போலவே பேசி வியப்பில் ஆழ்த்தும் பறவையினமாக கிளிகள் உள்ளன. பெரும்பாலான பறவைகள் ஏறக்குறைய ஒரே உடற்கூறியல் தன்மையை கொண்டிருந்தாலும், அவை எல்லாவற்றாலும் நம்மை போல பேச முடியாது.

ஆனால் கிளிகள் பேசுவதற்கு காரணம் கிளிகளுடைய மூளையின் வித்தியாசமான கட்டமைப்பு என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மணி நேரங்களாக இன்ஸ்டாவில் கிளி ஒன்று தன் அன்பை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ கிளிப்பை பார்க்கும் அனைவரும் ‘வாவ்’ என்று வியந்து வருகின்றனர். முதல் முதலில் இந்த வீடியோவை அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஆர்லோ என்ற பறவையின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அர்லோவின் உரிமையாளரான ஜெனிபர் எனபவர் ஷேர் செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த வீடியோ வைரலாகிவிட்டதால், இன்ஸ்டாகிராம் தனது அதிகாரப்பூர்வ கணக்கில் வீடியோவை இது “ஐ லவ் யூ” என்று சொல்வதற்கான வழி என்று கேப்ஷனுடன் ஷேர் செய்து உள்ளது. மனிதர்களிடம் இந்த சிறிய கிளி "ஐ லவ் யூ" என்று மனிதர்களிடம் எப்படி கூறுகிறது என்பதை காட்டி உள்ளது.



 




View this post on Instagram





 

A post shared by Instagram (@instagram)






இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஒரு சில மணி நேரங்களில் 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்து உள்ளனர். இந்த வீடீயோவை இன்ஸ்டாகிராம் அதன் போரட்டலில் ஷேர் செய்து உள்ளது. இந்த வீடியோவில் ஆர்லோ என்று பெயரிடப்பட்ட 2 வயது பசிபிக் கிளி (Pacific parrotlet) காணப்படுகிறது. இந்த சூப்பர் க்யூட் வீடியோ கிளிப்பில் ஒரு சிறிய பறவையான ஆர்லோ மனிதர்களை இவரு நேசிக்கிறது என்பதை தனது நளினமான உடல் அசைவின் மூலம் வெளிப்படுத்துகிறது. இந்த சிறிய கிளி உடலை வேகமாக அசைத்து அன்பை காண்பிக்கும் போது சாதாரணமாக ஒரு மேஜையில் நடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வீடியோ அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் அமைந்துள்ள டுபியூக் கவுன்ட்டி என்ற இடத்தில் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது.

Also read... "படுக்கையில் இருந்த பேய்" விர்ச்சுவல் டூரில் அதிர்ச்சியடைந்த பெண்!

இந்த வீடியோவை பார்த்த பலரும் கிளியின் ஐ லவ் யூ சொல்லும் முறையை கண்டு வியந்துள்ளனர். கமெண்ட் செக்ஷனில் பெருமபாலான மக்கள் ஆர்லோவின் அபிமான தோற்றம் மற்றும் அழகான அசைவு குறித்து பாராட்டு தெரிவித்து உள்ளனர். சிலர் இன்ஸ்டாகிராமில் நீண்ட நாட்கள் கழித்து தாங்கள் பார்த்த மிக அழகான வீடியோ இது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: