Home /News /trend /

ஜோசியம் பார்க்கும் கிளியை பார்த்து இருப்பீங்க.. ஆனா இந்த மாதிரி கிளியை பார்த்து இருக்க முடியாது

ஜோசியம் பார்க்கும் கிளியை பார்த்து இருப்பீங்க.. ஆனா இந்த மாதிரி கிளியை பார்த்து இருக்க முடியாது

இணையத்தில் வைரலாகும் கிளி

இணையத்தில் வைரலாகும் கிளி

Viral Video | பச்சைக்கிளி ஒன்று தனது நாக்கைப் பயன்படுத்தி நட்டு, போல்ட்டை கழட்டும் வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கான வியூவர்களை கவர்ந்து வருகிறது.

    அழகு நிறைந்த கிளிகள், வீட்டில் வளர்க்கப்படும் பறவை இனங்களிலேயே அதிகம் பேரால் விரும்பப்படுவது. கிளிகளை சில வார்த்தைகள் பேச நம்மால் பழக்க முடியும். பறவை இனங்களிலேயே கிளிகள் மிகவும் புத்திசாலிகள் என பறவைகள் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக “சொல்வதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை” என்ற பேமஸான பழமொழி ஒன்று உள்ளது. அதாவது கிளிக்கு பேச பழக்கிவிட்டால் நாம் என்ன சொல்கிறோமோ அதை திருப்பிச் சொல்லும் என்பது தான். ஆனால் இங்கு ஒரு அதிசய கிளி தனக்கு கற்றுக்கொடுத்த வித்தையை கச்சிதமாக செய்து கட்டி இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகிறது.

    இணையத்தில் விலங்குகள் பற்றிய வைரல் வீடியோக்கள் பெருமளவில் கவனத்தை ஈர்ப்பது உண்டு. பறவைகள் மற்றும் விலங்குகளின் செயல்களால் மக்கள் மயங்கி, திகைத்து அல்லது மகிழ்ந்து கொண்டிருக்கும் வரை, மக்களிடையே இதுபோன்ற வீடியோக்களுக்கு மவுசு குறையாது. தற்போது நாங்கள் உங்களுக்காக கொண்டு வந்துள்ளது ஒரு கிளி பற்றிய அதிசயத்தக்க வீடியோ. பெரும்பாலும் கிளிகளைப் பொறுத்தவரை அழகாக பாடல் பாடுவது, தன்னை வளர்ப்பவருடன் கொஞ்சிப் பேசுவது போன்ற பல வகையான வீடியோக்களை பார்த்திருப்போம். ஆனால் எந்த ஒரு கிளியும் தனது நாக்கால் நட்டு, போல்ட்டை கழட்டும் வீடியோவை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். ஆம், மனிதர்களிடம் இருந்து பொறியியல் திறமையைக் கற்றுக்கொண்ட அதிசய கிளி பற்றிய வீடியோவைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

    இதையும் படிங்க : அனைத்து ரயில் நிலையங்களின் பெயர்களும் மஞ்சள் பலகையில் எழுதப்படுவது ஏன் தெரியுமா?

    ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், கிளி அதன் நாக்கைப் பயன்படுத்தி நட் போல்ட்டைத் கழட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன. போல்ட்டை தனது இரு கால்களால் அழகாக பற்றிக்கொண்டு, நாக்கை பயன்படுத்தி நட்டை மேல்நோக்கி திருப்புகிறது. மெல்ல, மெல்ல மேல்நோக்கி கிளி தனது நாவால் விசையை செலுத்தி நட்டை கழட்டுகிறது. இயற்பியலைப் புரிந்துகொள்ளக்கூடிய பல்வேறு திறன்கள் மற்றும் நுண்ணறிவு இதெல்லாம் கூடவா கிளிகளிடம் இருக்கும் என நாம் வியந்து போகும் வகையில் வீடியோ உள்ளது.



    பொதுவாக ஒரு மனிதன் தன் கைகளால் கழட்டுவதை விட வேகமாக கிளி தனது நாவைப் பயன்படுத்தி காரியத்தை கச்சிதமாக முடிப்பதை பார்த்து எப்படி ஆச்சர்யப்பட்டாமல் இருக்க முடியும். இந்த அதிசயத்தக்க வீடியோ இணையத்தில் வைரலாகி இதுவரை 1.5 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. மேலும் கிளியின் சாகசத்தை பார்த்து வியந்து போன பலரும் விதவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    ட்விட்டர் யூஸரில் “ஒருவர் நான் மட்டும் இப்படி செய்திருந்தேன் என்றால் நட்டை விழுங்கி இருக்க வாய்ப்புள்ளது” என பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், ‘அதை பறவை சாப்பிட்டு விட்டதா?, அதன் பின் என்ன ஆனது? என நலம் விசாரித்துள்ளார். மூன்றாவது நபரோ ‘வாவ் அது நட்ஸ்’ என்று வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trending, Trending Video, Viral Video

    அடுத்த செய்தி