நம்முடைய ஆளுமை, குணநலன்கள், பலம் மற்றும் பலவீனங்களை எளிதாகத் தெரிந்து கொள்ள சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஆப்டிக்கல் இல்யூஷன். ‘இருக்கு ஆனா இல்ல’ என்று கூறுவது போல, ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும். அதே போல இங்கே ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படம் உள்ளது.
சமீப காலமாக ஆப்டிக்கல் இல்யூஷன் டெஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. உங்களுடைய ஆளுமை, எப்படி முடிவு எடுப்பீர்கள், விருப்பு வெறுப்பு, எளிதாக பழகும் தன்மை கொண்டவரா, மறைந்திருக்கும் திறமைகள் என்று பலவற்றை எளிதாகத் தெரிந்து கொள்ளும், உங்களை நீங்களே நன்றாக அறிந்து கொள்ள உதவும் சிம்பிள் சோதனை தான் இந்த ஆப்டிகல் டெஸ்ட். இதன் அட்வான்ஸ்ட் வெர்ஷன் தான் உங்களுடைய கண்ணோட்டத்தை (perception) தெரிந்து கொள்வது.
ஆப்டிகல் இல்யூஷனில் கூட ஒரு குறிப்பிட்ட வகை வைரலாகி வருகிறது. அதன் பெயர் டைனமிக் எபிங்ஹாஸ் இல்யூஷன். மற்ற பொருட்கள் இருக்கும் போது, நாம் ஒரு குறிப்பிட்ட பொருட்களை எப்படி உணர்கிறோம் அல்லது பார்க்கிறோம் என்ற சோதனை தான் டைனமிக் எபிங்ஹாஸ் இல்யூஷன். முன்னணி ஆராய்ச்சியாளர்கள் குழு, ஹியூமன் நியூரோ சயின்ஸ் இதழில் "எபிங்ஹாஸ் இல்யூஷன் என்பது சுற்றுபுறத்தில் சூழந்துள்ள பொருட்களின் அடிப்படையில் வேறொரு பொருள் எவ்வாறு உணரப்படுகிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு" என்று எழுதியுள்ளனர்.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த புகைப்படம் ஒரு ஸ்டேட்டிக் புகைப்படம் ஆகும். இந்த படம் இரண்டு வெவ்வேறு வெர்ஷன்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், மையத்தில் உள்ள ஒரு வட்டத்தைச் சுற்றி, பல வட்டங்கள் உள்ள இரண்டு வெவ்வேறு படங்கள் உள்ளது.
also read : இந்த படத்தில் எவை உண்மையான கண்கள்?கண்டுபிடிங்க பார்க்கலாம்..
இரண்டு படங்களாக உள்ள இவற்றில் எல்லா வட்டங்களுமே ஒரே அளவில் உள்ளன. ஆனால், நம் பார்வை மற்றும் கண்ணோட்டத்தில், ஒரு படம் பெரிதாகவும், மற்றொன்று சிறியதாகவும் தெரிகிறது. உங்களுக்கு வடிவங்களும் அளவுகளும் எப்படித் தெரிகிறது என்பது பற்றிய தெளிவான விளக்கத்துக்கு கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
நடுவில் உள்ள ஒரு வட்டத்தைச் சுற்றி ஆறு பெரிய வட்ட வடிவங்கள் உள்ளன. முதலில் பார்க்கும் போது, நடுவில் இருக்கும் வட்ட வடிவம், சுற்றியிருக்கும் வட்டங்களுடன் ஒப்பிடும் போது வித்தியாசமாக தெரியும். ஆனால், அனைத்துமே உண்மையில் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன. அவை நகர்ந்து கொண்டே இருப்பதால் வித்தியாசமாகத் தெரிகிறது. அது மட்டுமின்றி, ஆய்வாளரின் கூற்று படி, உட்புற வட்டம் வலது பக்கத்தில் இருக்கும் வட்டங்களை விட பெரியதாகவும், இடது பக்கத்தில் இருக்கும் வட்டத்தை விட சிறியதாகவும் தோன்றும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Optical Illusion, Trending