ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

காதல், ரொமான்ஸ்... நீங்க அதுக்கு சரிப்பட்டு வருவீங்களா? தெரிஞ்சுக்க இதை ட்ரை பண்ணுங்க..!

காதல், ரொமான்ஸ்... நீங்க அதுக்கு சரிப்பட்டு வருவீங்களா? தெரிஞ்சுக்க இதை ட்ரை பண்ணுங்க..!

ஆப்டிகல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன்

மனித உருவம் கொண்ட பிங்க் நிற படம் இந்தச் செய்தியில் உள்ளது. இதை ஒரு கனம் உற்று நோக்கிப் பாருங்கள்..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பருவ வயதில் எதிர் பாலினத்தவர் மீது ஈர்ப்பும், குறுகுறுப்பான எண்ணமும் உருவாகுவது இயல்பானதுதான். ஆனால், இது நாம் காதல் என்னும் பெருங்கடலில் நீந்துவதற்கு என்று தயாராகிவிட்டோம் என்று அர்த்தம் அல்ல. நம்பிக்கைக்குரிய, நல்ல குணமுடைய காதல் துணை அமைவது கடினமான விஷயம் என்பது ஒருபக்கம்.

அதேசமயம், காதலிப்பதற்கான பக்குவமான மனதை நாம் அடைந்திருக்கிறோமா என்பதே முதல் கேள்வியாக அமைய வேண்டும். இதற்காக ஏதேனும் ஆலோசனை மையத்தில் சான்றிதழ் வாங்க முடியுமா என்ன! நாம் தான் நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதெப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா!

ரொம்ப சிம்பிள். எந்தவொரு விஷயத்திலும் உங்கள் பார்வை எப்படி இருக்கிறது, எந்த அணுகுமுறையுடன் அதை பார்க்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டால், அதை வைத்து நாம் உண்மையிலேயே காதலிக்க தயாராகியுள்ளோமா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உதவிக்கு வரும் ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம் கண் பார்க்கும் கோணம் மற்றும் நம் சிந்தனைத் திறனை பொறுத்து அது வெவ்வேறு வடிவங்களாக தெரியும். பொதுவாக, நம் மூளையின் சிந்தனை திறன் குறித்து பரிசோதனை செய்யவே ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பயன்படுத்தப்படும்.

அதில் உள்ள புதிர் கேள்விகளுக்கு நாம் எந்த அளவுக்கு விரைவாக பதில்களை கண்டுபிடிக்கிறோம் என்பதை பொறுத்து நம் சிந்தனை திறன் அளவிடப்படும்.

Also Read : இந்தப் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அது உங்கள் குணாதிசயத்தை வெளிப்படுத்தும்

அதேபோல, அதே ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்த்த உடன் நம் மனதில் என்ன பதிவாகிறது என்பதை பொறுத்து, நம் மனப்பக்குவத்தை கணக்கிடலாம்.

படத்தை பாருங்க....

மனித உருவம் கொண்ட பிங்க் நிற படம் இந்தச் செய்தியில் உள்ளது. இதை ஒரு கனம் உற்று நோக்கிப் பாருங்கள். சட்டென்று பார்க்கும்போது படத்தில் பெண் உருவம் ஒன்று மட்டுமே தெரியும். அதுவே ஆழ்ந்து நோக்கினால் ஒரு ஆண், பெண் இணைந்த ஜோடியின் படம் தெரிய வரும்.

சரி, படத்தைப் பார்த்த உடனே உங்கள் மனதில் எது முதலில் தோன்றியது என்று சொல்லுங்கள். நீங்கள் காதலிக்க தயாராகி விட்டீர்களா, இல்லையா என்பதற்கான பதில் அதில்தான் இருக்கிறது.

பெண் உருவம் மட்டும் தெரிந்தால்

பெண் உருவம் மட்டும் தெரிகிறது என்றால், நீங்கள் காதல் பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முன்பாக மிக ஆழமாக சிந்திப்பீர்கள். காதல் மற்றும் ரொமான்ஸ் குறித்த ஆர்வம் உங்களிடம் இருந்தாலும், சிங்கிளாக நீடிப்பதில் சுகம் காணுபவர் நீங்கள். சுதந்திரமான வாழ்க்கை மீது நீங்கள் ஆர்வம் கொண்டுள்ளீர்கள். குறிப்பாக நண்பர்களுடன் அல்லது தோழிகளுடன் ஊரை சுற்றி, பொழுது கழிக்க விரும்புகிறீர்கள்.

ஜோடியின் உருவம் தெரிந்தால்

உங்கள் முதல் பார்வையிலேயே ஜோடியின் உருவம் உங்களுக்கு தெரிகிறது என்றால் நீங்கள் காதலிக்க தயாராக உள்ளீர்கள் என்று அர்த்தம். நீடித்த, நிலையான பந்தம் ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள். உங்கள் மனதில் உள்ள ஆசையை தயக்கமின்றி வெளிப்படுத்தும் குணம் உங்களிடம் இருக்கிறது. ஆகையால், உங்கள் காதல் கனவு விரைவில் நிறைவேறும், வாழ்த்துக்கள்!!

Published by:Josephine Aarthy
First published:

Tags: Love, Love Tips, Optical Illusion