Home /News /trend /

உங்கள் கண் பார்வை நல்லா இருக்கா? டெஸ்ட் பண்ணலாம் வாங்க..

உங்கள் கண் பார்வை நல்லா இருக்கா? டெஸ்ட் பண்ணலாம் வாங்க..

Optical Illusion : இந்த படத்தை வைத்து உங்கள் கண் பார்வை திறன் எப்படி இருக்கிறது என்று கூற முடியும்.

Optical Illusion : இந்த படத்தை வைத்து உங்கள் கண் பார்வை திறன் எப்படி இருக்கிறது என்று கூற முடியும்.

Optical Illusion : இந்த படத்தை வைத்து உங்கள் கண் பார்வை திறன் எப்படி இருக்கிறது என்று கூற முடியும்.

ஆப்டிக்கல் இல்யூஷன் (Optical Illusion) எனும் மாயத்தோற்றம் கொண்ட படங்களில் எத்தனை விதமான உருவங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை கண்டறிவது நம் சிந்தனை திறனுக்கு நல்ல விருந்தாக அமையும். ஒரு பக்கம், பொழுது போகும் என்பதோடு, மிக ஆழ்ந்து சிந்திப்பதால் நம் மூளையும் சுறுசுறுப்பாக வேலை செய்யும்.

உதாரணத்திற்கு ஒற்றை படம் ஒன்றில், வெவ்வேறு உருவங்கள் ஏதேனும் ஒரு திசையில் நகர்ந்து செல்வதைப் போல இருக்கும் அல்லது சில சமயம் அந்த படங்களில் என்ன தென்படுகிறது என்பதை நீங்கள் யூகிக்க முடியாமலே கூட போகும். அந்த வகையில் இந்தச் செய்தியில் இடம்பெறும் ஆப்டிக்கல் இல்யூஷன் படம் என்பது உங்கள் சிந்தனைத் திறனுக்கு சவால் விடுப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் பார்வைத் திறனை பரிசோதனை செய்யும் வகையிலும் அமைந்திருக்கிறது.

தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி கொண்டிருக்கும் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் சில ஸ்டிக் மற்றும் டாட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால், வெறுமனே இது ஸ்டிக் மற்றும் டாட் ஆகியவற்றின் கோர்வை என்று ஒதுக்கி தள்ளிவிட முடியாது. அதற்கும் மேற்பட்ட சில விஷயங்கள் இந்தப் படத்தில் ஒளிந்துள்ளன. சுருக்கமாகச் சொன்னால், அதில் ஒரு வாரத்தை இடம்பெற்றுள்ளது.

also read : பீட்சா ஆர்டர் செய்ததற்காக திருமணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாப்பிள்ளை தோழன்

 கணித்துப் பாருங்கள் :


இப்போது நேரடியாகவே, படத்தில் இருப்பது உருவம் அல்ல, அது ஒரு வார்த்தை என்று சொல்லியாகி விட்டது. இப்போது கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் அல்லது கண்களை உற்று நோக்கி பாருங்கள். படத்தில் இருக்கும் வார்த்தை என்னவென்று புரிகிறதா?

டிக் டாக்கில் செயல்பட்டு வரும் HecticNick என்ற பயனாளர் இந்த படத்தை இணையத்தில் வெளியிட்டு, அதை கண்டறியுமாறு மற்றவர்களை அறிவுறுத்தியுள்ளார். அதே சமயம், படத்தில் இருப்பதை எப்படி கண்டறிவது என்பதற்கான க்ளூவையும் அவர் கூறியுள்ளார். அதாவது, ஒரு கண்னை மூடிக் கொண்டு, மற்றொரு கண்ணை வைத்து உற்று நோக்கினால், அதில் உள்ள எழுத்து என்ன என்பது தெரிய வரும்.



 

also read :  இந்த படத்தில் உங்களுக்கு எத்தனை குதிரைகள் தெரிகிறது ?

விடை இதுதான் :

எவ்வளவு முயன்றாலும் படத்தில் உள்ள விடையை கண்டறிய முடியவில்லை. சரி, இப்போது அதை தெரிந்து கொள்வோம். Bad Eyes என்பதே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தை ஆகும். உண்மையிலேயே இதுதான் விடையா என்ற சந்தேகம் எழுகிறதா?

அப்படியானால், ஒற்றை கண்ணை உங்கள் கைகளால் மறைத்து விடுங்கள். அடுத்தது, படத்தில் உள்ள வெள்ளைக் கோட்டை மட்டும் சற்று கண்களை சுருக்கி உற்று நோக்கவும். கருப்பு டாட்களை கவனத்தில் கொள்ள வேண்டாம். இப்போது, ‘Bad Eyes’ என்ற வார்த்தை உங்கள் கண்களுக்கு புலப்படும். இதேபோன்று ஸ்க்ரீனுக்கு பக்க வாட்டில் இருந்து இந்தப் படத்தை பார்த்தாலும், அதில் உள்ள வார்த்தையை தெரிந்து கொள்ள இயலும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி