விடுமுறை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். பள்ளி பருவத்தில் விடுமுறை நாட்கள் எப்போது வரும் என்று எதிர்பார்க்க கூடிய ஆவல், நாம் அலுவலகம் சென்ற பிறகும் நம்மை தொற்றி கொள்கிறது. ஆனால், பல அலுவலகங்களில் வாரத்தில் 2 நாட்கள் விடுமுறையை கூட சரியாக தருவதில்லை. இதற்கு எதிர்மாறாக நியூசிலாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு எல்லையற்ற விடுமுறைகளை வழங்குகிறது. இது உங்களுக்கு ஆச்சரியமான விஷயமாக உள்ளதா? ஆம், இது உண்மை தான்.
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தை தளமாகக் கொண்ட ஆக்ஷன் ஸ்டெப் (Actionstep) என்கிற நிறுவனம் அதன் ஊழியர்களை எல்லையற்ற விடுமுறைகளை எடுக்க அனுமதிக்கிறது. இதை அந்த நிறுவனம் "உயர் நம்பிக்கை மாடல்" என்று விவரித்துள்ளது. ஆங்கிலத்தில் இதை "high trust model" என்று சொல்வார்கள். அதாவது, நிறுவனத்தின் புதிய திட்டத்தின் படி, ஊழியர்கள் ஒரு வருடத்தில் ஒரு மாதம் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று முன்பு இருந்தது. ஆனால், தற்போது அதை மாற்றி ஊழியர்கள் விரும்பும் வரை விடுமுறையில் செல்ல முடியும் என்கிற திட்டத்தை வகுத்துள்ளது.
"இது எல்லோரும் தங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளவும், பின்னர் திரும்பி வந்து எங்களுக்காக சிறந்த வேலையைச் செய்யவும் அனுமதிக்கிறது," என்று அந்நிறுவனத்தினர் விளக்கி உள்ளனர். இந்த எல்லையற்ற விடுமுறைகள் குறித்து முதலில் சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால், பிறகு அதற்கான நேர்மறையான பலன்கள் எங்களுக்கு கிடைப்பதை பார்த்து இதை நடைமுறைப்படுத்தினோம் என்று ஆக்ஷன் ஸ்டெப் வைஸ் பிரசிடெண்ட்டான ஸ்டீவி மேஹூ தெரிவித்தார்.
"உலகெங்கிலும் உள்ள எங்கள் அலுவலகங்கள் அனைத்திற்கும் இது போன்ற குறைந்தபட்சத் தேவையை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். பல நிறுவனங்களும் இத்தகைய முறையை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் எங்களை பொறுத்தவரை, எல்லையற்ற விடுமுறைகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்வதை உறுதி செய்வதாகும். மற்ற நிறுவனங்களும் இதே போன்ற யோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மேஹூ அறிவுறுத்துகிறார்.
Also Read : 11ஆம் வகுப்பு மாணவியை பஸ் ஓட்டுவதற்கு அனுமதித்த டிரைவர் - சர்ச்சையில் சிக்கிய விபரீத முயற்சி
சிக் லீவ், மெட்டர்னிட்டி லீவ் உட்பட அனைத்தையும் இது உள்ளடக்கியது என்றும் அவர் கூறினார். எனவே, அந்தந்த வேலைகளில் தங்களால் முடிந்ததைச் செய்யக்கூடிய ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வதே தங்கள் நிறுவனத்தின் நோக்கம் என்று விளக்கியுள்ளார். லிங்க்ட்இன் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆகிய நிறுவனங்களும் இது போன்ற விடுமுறை முறையை முயற்சிப்பதாக சில ஆய்வுகள் கூறுகிறது.
Also Read : குடிபோதையில் கல்யாணத்தையே மறந்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பேச்சலர் பார்ட்டியால் ட்விஸ்ட்..
Rocketwerkz என்கிற மற்றொரு நியூசிலாந்து நிறுவனமும் சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லையற்ற வருடாந்திர விடுமுறையை வழங்கியது. இது போன்ற விடுமுறை மாடலை அந்நாட்டின் பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் ஊக்குவித்தும் வருகிறார். நான்கு நாள் வேலை நாட்கள் என்கிற முறையை நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் முன்னர் இவர் பரிந்துரைத்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: New Zealand, Office