பொதுவாக நாம் எந்தவொரு பொருளை வாங்கினால் முதலில் நாம் பார்ப்பது அதன் விலையை தான். நமக்கு ஒரு பொருள் பிடித்திருந்தாலும் அதன் விலை நமது பட்ஜெட்டுக்குள் இல்லையென்றால், பெரும்பாலும் அதை வாங்காமல் தவிர்த்து விடுவோம். இதில் வீட்டு தேவையான பொருட்கள் முதல், பலவித அழகு சார்ந்த பொருட்களும் அடங்கும். சில நேரங்களில் நமக்கு ஒரு பொருள் மிகவும் பிடித்திருக்கும், அதை வாங்கியே தீர வேண்டும் என்கிற எண்ணமும் வரும். ஆனால், அதன் விலையை பார்த்த உடன் என்ன செய்வது என்றே நமக்கு தெரியாது.
இப்படியொரு புராடக்ட்டை தான் நகைகளை விற்கும் ஒரு நிறுவனம் உருவாக்கி உள்ளது. கையில் போட கூடிய நெயில் பாலிஷில் தான் இந்த வித்தியாசமான புராடக்ட்டை தயாரித்து உள்ளனர். ஏச்சர் (AZATURE) என்கிற நகை தயாரிப்பு நிறுவனம் 2018 ஆம் ஆண்டு உருவாக்கிய கருப்பு நிற நெயில் பாலிஷ் பலரை கவர்ந்தது. அப்போது இந்த நெயில் பாலிஷ் தான் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக இருந்தது. இந்த கருப்பு நெயில் பாலிஷின் விலை சில கோடிகளில் இருந்தது.
தற்போது இந்த நிறுவனம் 267 கேரட் கருப்பு வைரத்தை கொண்டு விலை உயர்ந்த நெயில் பாலிஷை தயாரித்து உள்ளது. இது உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நெயில் பாலிஷ் ஆகும். இதன் மினுமினுக்கும் தன்மைக்காகவே கருப்பு வைரத்தை கொண்டு இதை உருவாக்கி உள்ளனர். வைரங்கள் கலந்த இந்த நெயில் பாலிஷின் விலை 1.6 கோடி. இதற்கான மேனிகியூர் விலை 1.7 லட்சமாக நிர்ணயித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : கேரளாவில் ஸ்டைலிஷ் மாடலான 60 வயது தினக்கூலி தொழிலாளி- இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள்
இந்த நெயில் பாலிஷ் வாங்கும் விலைக்கு 10 சேடென்ட் கார்களை வாங்கி விடுலாம். அந்த அளவிற்கு இது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. இது இவ்வளவு விலை அதிகமாக இருந்தாலும் பலர் இதை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த வைர நெயில் பாலிஷிற்கு தற்போது டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஏச்சர் நிறுவனத்திடம் கேட்டபோது, "வைரம் வாங்கி அணிந்துகொள்ள விரும்புவோருக்கு நிச்சயம் இந்த வைர நெயில் பாலிஷ் பிடிக்கும். இதற்காகவே நாங்கள் இதனை தயாரித்து உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வைர நெயில் பாலிஷை ஹாலிவுட் நடிகைகளான ரிஹான்னா மற்றும் பியோன்ஸ் ஆகியோர் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : ரயில் தண்டவாளத்தை பைக்கில் கடந்து சென்ற போது நூலிழையில் உயிர் தப்பிய நபர் - வைரலாகும் வீடியோ
2016 ஆம் இதே போன்று தங்க நெயில் பாலிஷ் என்பது மிகவும் பிரபலமானது. இதை பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த நகை வியாபாரிகள் தயாரித்து வந்தனர். இதன் விலை 98 லட்சமாக இருந்தது. இந்த தங்க நெயில் பாலிஷின் பெயர் 'கோல்ட் ரஷ் பாலிஷ்' என்பதாகும். இதை வாங்குவதற்கும் பலர் ஆர்வமாக இருந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.