ஆறு முறை லாட்டரியை வென்ற அதிர்ஷ்டக்காரர் - பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

ஆறு முறை லாட்டரியை வென்ற அதிர்ஷ்டக்காரர் - பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

மாதிரிப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்புகிறீர்களா? இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருந்தாலும், சமீபத்தில் லாட்டரியை வென்ற ஒரு இடாஹோ (Idaho) மனிதனின் அதிஷ்டம் பலரையும் பொறாமைப்படவைத்துள்ளது. ஒவ்வொருவரும் அவர்களுக்கு இருக்கும் பண கஷ்டங்களைத் தீர்ப்பதற்காகவோ ஜாலி ட்ரிப் அல்லது டூருக்காகவோ டிசைனர் பிராண்டுகளை (designer brands) வாங்குவதற்காக எந்த ரூபத்திலாவது ஒரு ஜாக்பாட் கிடைக்குமா என்று கனவு காண்கிறோம். இது தான் பலரின் மனநிலை, ஆனால் மெரிடியனை தளமாகக் கொண்ட பிரையன் மோஸைப் (Meridian-based Bryan Moss) பொறுத்தவரை இது ஒரு கனவு மட்டுமல்ல, ஒரு உண்மையும் கூட. 

அவர் கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு கிராஸ்வர்ட் ஸ்கிராட்ச் கேமில் (Crossword scratch game) வெற்றிபெற்று 250,000 டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளார். இதற்கு முன்னரும், இடாஹோ இந்த லாட்டரி கேம் மூலம் ஐந்து முறை பரிசுகளை வென்றுள்ளார். எது எப்படி இருந்தாலும், இந்த பரிசுத் தொகையை கொண்டு பகட்டான எதையும் செய்ய அவர் திட்டமிடவில்லை, உருப்படியாக இந்த பணத்தை தனது மகளின் கல்விக்காக ஒதுக்கி வைக்க திட்டமிட்டுள்ளார். இடாஹோ லாட்டரியின் $250K பரிசை தான் வென்றுள்ளதாக பிரையன் (Bryan) கூறியுள்ளார், 

மேலும் “மோஸ், ஐடஹோ லாட்டரியை தவறாமல் விளையாடுகிறார், மேலும் ஐடஹோ பள்ளிகளுக்கு (Idaho schools) இந்த தொகை நன்மை பயக்கும் என்பதாலேயே அவர் இதை செய்கிறார்" என்றார். இடாஹோ லாட்டரியின் (Idaho Lottery) லாபத்தில் கிடைக்கும் பாகம் மாநிலத்தில் உள்ள பொதுப் பள்ளிகளுக்கும், இடாஹோவின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற அரசு இயக்கப்படும் வசதிகளை ஆதரிக்கும் பர்மனெண்ட் பில்டிங் பண்ட்டிற்கு (Permanent Building Fund) செல்கிறது. மாநில லாட்டரியின் வரலாற்றில் மொத்தமாக, இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் $961.5 மில்லியன் டாலர் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. 

"இடாஹோ பொதுப் பள்ளிகளுக்கு நிதி ரீதியாக சப்போர்ட் செய்யவே  நான் இதை விளையாடினேன், இப்போது அதற்காக நான் பெருமையும் கொள்கிறேன்" என்று மோஸ் கூறினார். அவர் மெரிடியனில் நியூகோ ஸ்போர்ட் மற்றும் நியூட்ரிஷன் ஹெல்த் ஸ்டோரை (Newko Sport and Nutrition health store) வைத்திருக்கிறார்.  பிரையன் தனது பேஸ்புக் பக்கத்தில் (Facebook Page) வென்ற டிக்கெட்டின் படத்தையும் வெளியிட்டார்.

இந்தியாவில், தற்போது 13 மாநிலங்களில் மட்டுமே மக்கள் லாட்டரியை விளையாட அனுமதி உண்டு. அவை அசாம், அருணாச்சல பிரதேசம், கோவா, கேரளா, மகாராஷ்டிரா, மேகாலயா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் (Assam, Arunachal Pradesh, Goa, Kerala, Maharashtra, Meghalaya, Madhya Pradesh, Manipur, Mizoram, Nagaland, Punjab, Sikkim and West Bengal) போன்ற மாநிலங்களில் லாட்டரியை விளையாடலாம். பிற மாநிலங்களில், இது இன்னும் சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. 

ஒவ்வொரு மாநிலமும் லாட்டரி போன்ற சூதாட்டத்திற்கு மாநில சட்டங்களைக் கொண்டுள்ளன, அதிலும் சில மாறுபாடுகள் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. 

கேரள மாநில லாட்டரி (The Kerala State Lottery) 1967 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட முதல் அரசு லாட்டரி ஆகும். அதே நேரத்தில் அனைத்து தனியார் அல்லது உரிமம் பெறாத லாட்டரிகள் கேரளாவில் கட்டாய தடை செய்யப்பட்டவையாக உள்ளன. இதற்கிடையில், சமீபத்திய மாற்றத்தில், இந்தியர்கள் இப்போது ஆன்லைனில் தி மெகா மில்லியன்கள் மற்றும் பவர்பால் லாட்டரிகள் (The Mega Millions and Powerball lotteries) போன்ற பல பிரபலமான அமெரிக்க லாட்டரிகளில் (American lotteries) பங்கேற்கின்றனர். 

Also read... Gold Rate | சவரனுக்கு ரூ. 240 குறைந்தது தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

ஒருவர் அமெரிக்காவிற்குச் சென்று லாட்டரி டிக்கட்டுகளை (lottery tickets) நேரில் வாங்கினால் மட்டுமே மெகா மில்லியன்கள் மற்றும் பவர்பால் கேமில் விளையாட முடியும். இரண்டு லாட்டரிகளும் மொத்தம் $1.58 பில்லியன் மதிப்புள்ள ஜாக்பாட் பரிசுகளை வழங்குகின்றன. இந்த நிறுவனத்தின் விதிகளின்படி, ஒருவர் லாட்டரி விளையாடுவதற்கு அவர் ஒரு அமெரிக்க குடிமகனாகவோ அல்லது குடியிருப்பாளராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

கேரள அரசு சார்பில் ஓணம் பண்டிகை, மலையாளப் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, கோடைக்காலம் என ஒவ்வொரு சீஸனுக்கு ஏற்றாற்போல லாட்டரிச் டிக்கெட்கள் விற்பனை நடத்தி, குலுக்கல் மூலம் பரிசு வழங்கிவருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு 12 கோடி ரூபாய் முதல் பரிசுகொண்ட லாட்டரிகளை கேரள அரசு சமீபத்தில் விற்பனை செய்தது. ஒரு லாட்டரி டிக்கெட் 300 ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் 33 லட்சம் லாட்டரி டிக்கெட்டுகளைக் கேரள அரசு அச்சிட்டு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: