Home /News /trend /

ஆண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்து திருடும் வினோத பழக்கம்... கேமராவில் வசமாக சிக்கிய திருடன்!

ஆண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்து திருடும் வினோத பழக்கம்... கேமராவில் வசமாக சிக்கிய திருடன்!

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

இந்த வித்தியாசமான திருடன் என்ன செய்தான் மற்றும் எப்படி மாட்டிக் கொண்டான் என்பது பற்றிய சுவாரஸ்யமான விவரங்கள் இங்கே.

    திருடர்களில் பல வகையினர் உள்ளனர். கிளேப்டோமேனியாக் என்று கூறப்படும் சின்ன சின்ன பொருட்களை, எடுத்து விட வேண்டும் என்ற தீவிரமான பழக்கம் கொண்டவர்கள் முதல், ஸ்கெட்ச் போட்டு பெரிய திருட்டை மேற்கொள்ளும் திருட்டையே தொழிலாக கொண்டிருப்பவர்கள் வரை, பலவிதமான திருடர்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். நகை திருடர்கள், கார் திருடர்கள் என்று குறிப்பிட்ட பொருளை மட்டும் திருடுபவர்களும் உள்ளனர்.

    இவ்வாறு திருடுபவர்களில் பல வகைகள் இருக்கும் பொழுது சமீபத்தில் மலேசியாவைச் சேர்ந்த ஒரு திருடனைப் பற்றிய செய்தி வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உள்ளாடை திருடர்களை பற்றி திரைப்படங்கள் மற்றும் கதைகளில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அப்படியொரு திருடன் நிஜத்திலேயே மலேசியாவில் பிடிபட்டுள்ளான். அதிலும் குறிப்பாக இந்தத் திருடன் ஆண்களின் அண்டர்வேர்களை மட்டும் தான் திருடுவானாம்! இவை அனைத்தும் சிசிடிவி கேமரா பதிவுகளில் தெரிய வந்துள்ளது.

    இந்த வித்தியாசமான திருடன் என்ன செய்தான் மற்றும் எப்படி மாட்டிக் கொண்டான் என்பது பற்றிய சுவாரஸ்யமான விவரங்கள் இங்கே. மலேசியாவில் உள்ள பெராக் என்ற ஊரில் கேம்பர் ஹவுஸிங் காலனியில் வசிக்கும் மக்கள், கடந்த சில நாட்களாக தங்கள் வீடுகளில் இருந்து அன்டர்வேர்கள் காணாமல் போகின்றன என்பதை அறிந்து கொண்டனர். ஆனால் எவ்வாறு காணாமல் போகிறது என்பதைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பேசி என்ன செய்வது என்ற முடிவுக்கு வந்தனர்.

    அதன்படி, அண்டர்வேர்கள் காணாமல் போவதை கண்டுபிடிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. சிசிடிவி கேமராக்களை பதிவு பதிவாகி இருந்த காட்சிகளின்படி உள்ளாடைகளை ஒரு ஆள் திருடும் காட்சிகள் இருந்தன. ஹவுசிங் காலனியில் இருக்கும் உள்ளாடைகளை ஒரு ஆள்தான் திருடுகிறான் என்பது சிசிடிவி கேமராக்களின் மூலம் உறுதி செய்யப்பட்டாலும் அந்த நபரின் அடையாளம் தெரியவில்லை.

    Also Read : 3.5 கோடி சம்பளம் - ஆனால் வேலையை தூக்கி எறிந்த Netflix ஊழியர்.. காரணம் என்ன தெரியுமா?

    திருடன் முகமூடி அணிந்து வீடுகளுக்குள் நுழைந்து ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணித்து உள்ளாடைகளை திருடத் தொடங்குகிறான். வீடுகளின் வெளியே காயப்போட்டிருக்கும் ஆடைகளில் உள்ளாடையை மட்டும் திருடும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. இந்த காட்சிகள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதில் ஆச்சரியப்படக் கூடிய விஷயம் என்னவென்றால், உள்ளாடைகளை திருடும் நபர் டைட்ஸ் எனப்படும் ஆண்களின் உள்ளாடைகளை மட்டுமே திருடியிருக்கிறான். அவ்வளவு ரிஸ்க் எடுத்து ஒரு நபரின் வீட்டுக்கு சென்று குறிப்பிட்ட உள்ளாடை மற்றும் திருட வேண்டிய அவசியம் என்ன என்று பற்றியும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு நபர், சீப்பான டைட்ஸ் வேண்டும் என்றால், ஷாப்பிங் சென்டரில் வாங்கிக் கொள்ளலாமே என்று கமெண்ட் செய்துள்ளார்.

    அதே நேரத்தில் பலரும் வீடுகளில் கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், அனைத்து கதவுகளையும் பூட்டி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடும் இந்த முகமூடி திருடன் விரைவில் விரைவில் பிடிபடுவானா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: CCTV, Trends, Viral

    அடுத்த செய்தி