நவீன சமூகத்தின் பெரும்பாலான இடங்களில் தற்போது பலதார திருமணம் என்பது சட்டவிரோத செயல்பாடக உள்ளது. பெரும்பாலான நாடுகளில் முறைப்படி விவாகரத்து பெற்ற பின்னர் தான் வேறு நபரை திருமணம் செய்ய முடியும். இருப்பினும் பழங்குடி தொல் கலாசாரத்தை பின்பற்றும் நாடுகளில் பலதார மணம் சட்ட விரோதம் இல்லை.
அப்படித்தான் கென்யாவில் ஒரு இளைஞர், ஒன்றல்ல இரண்டல்ல மூன்று பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து ஒற்றுமையாக குடும்பம் நடத்திவருகிறார். இவர்கள் மூவரும் ஒரே போன்ற தோற்றம் கொண்ட சகோதரிகள் என்பது கூடுதல் அம்சமாகும். கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற இளைஞர், முதன் முதலில் கேத் என்ற பெண்ணை சந்தித்து பழகியுள்ளார். அப்போது கேத், தனக்கு ஈவ், மேரி என்று இரு சகோதரிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று சகோதரிகளும் கோஸ்பல் இசைத்துறையில் பயிற்சி பெற்று இசை கலைஞர்களாக உள்ளனர். முதலில் கேத்திடம் பழகிய ஸ்டீவோ பின்னர் அவரின் இரு சகோதரிகளிடமும் பேசி பழகியுள்ளார். அப்போது தான் ஸ்டீவோவுக்கு திருமணம் செய்தால் ஒரு பெண்ணை அல்ல, மூன்று பேரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியுள்ளது. இறைவன் தன்னை ஒரு பெண்ணுக்காக மட்டும் படைக்கவில்லை என்பதை உணர்ந்ததாக ஸ்டீவோ கூறுகிறார்.
தொடர்ந்து மூன்று பெண்களையும் திருமணம் செய்த ஸ்டீவோ, தனக்கு மூன்று பெண்கள் போதும் என்ற திருப்தியோடு வாழ்வதாக தெரிவிக்கிறார். மூன்று பேரையும் திருப்தி செய்ய முடிகிறாத என்ற கேள்வி தன்னிடம் பல முறை முன்வைக்கப்படுவதாகக் கூறும் ஸ்டீவோ, மக்களுக்கு இதிலென்ன சந்தேகம் அது ஒன்றும் பெரிய காரியம் இல்லை என்கிறார் கூலாக.
இதையும் படிங்க: உடல்நலம் சரியில்லாத கணவருக்காக மனைவி செய்த செயல் இணையத்தில் வைரல்..!
திங்களகிழமை மேரிக்கும், செவ்வாய்க்கிழமை கேத்துக்கும், புதன்கிழமை ஈவ்விற்கும் ஒதுக்கி ஒவ்வொரு மனைவிக்கும் அட்டவணைப் போட்டு வாழ்க்கை நடத்துகிறார் ஸ்டீவோ. ஸ்டீவை திருமணம் செய்த மூன்று சகோதரிகளும் இனி வேறு ஒரு பெண்ணை எங்களுக்கு குடும்பத்தில் சேர்க்க திட்டமில்லை, நாங்கள் மூன்று பேருமே அவனுக்கு போதும் என கறாரக முடிவெடுத்து 'நோ என்ட்ரி' தடை போட்டு வைத்துள்ளனர்.நமது ஊரில் இளைசுகள் ஒரு திருமணம் செய்யவே தவம் கிடக்கும் இந்த காலத்தில் மூன்று சகோதரிகளை திருமணம் செய்து ஜாலியாகவும் கூலாகவும் வாழ்க்கை நடத்துகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marriage, Viral News