ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கூகுள் ஸ்ட்ரீட் வியூ-வில் உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட நாடு இது தான்.!

கூகுள் ஸ்ட்ரீட் வியூ-வில் உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட நாடு இது தான்.!

Google Street View

Google Street View

Google Street View | உலகெங்கிலும் உள்ள தெருக்களை மிக நுணுக்கமாக புகைப்படம் எடுக்கும் பெரும் முயற்சியை கூகுள் தொடங்கி அதாவது ஸ்ட்ரீட் வியூ-வை (Google Street View) அறிமுகம் செய்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கூகுள் ஸ்ட்ரீட் வியூ-வின் பரந்த படங்கள் மில்லியன் கணக்கான யூஸர்களின் அன்றாட வாழ்க்கையில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஸ்ட்ரீட் வியூ அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப ஆண்டுகளில் இந்த முயற்சிக்கு எதிராக எண்ணற்ற நீதிமன்ற வழக்குகளை கூகுள் சந்தித்தது. இந்நிலையில் உலகளவில் கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் அதிகம் பார்வையிடப்பட்ட நாடு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் அதிகம் தேடப்பட்ட நகரம், நியூயார்க், பாரிஸ் மற்றும் லண்டன் நாடுகள் அல்ல. இந்தோனேஷிய தலைநகரான ஜகார்த்தா தான் கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட நாடாக இடம்பிடித்து உள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்து உள்ள கூகுள் நிறுவனம் அமெரிக்கா, ஜப்பான், மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட ஸ்ட்ரீட் வியூவில் இந்தோனேஷியா மிகவும் பிரபலமான நாடாக இருப்பதாக அறிக்கை ஒன்றில் தகவல் தெரிவித்துள்ளது. மவுண்டன் வியூ தொழில்நுட்ப நிறுவனங்களின் கூற்றுப்படி, சாலைகள், நிலப்பரப்புகள் மற்றும் பிற பாதைகள் மற்றும் நடைபாதைகளை முப்பரிமாணத்தில் டிஜிட்டல் மயமாக்க 16 மில்லியன் கிலோ மீட்டருக்கும் அதிகமான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் அதிகம் பார்வையிடப்பட்ட நாடுகளின் தரவரிசையில் கொமோடோ டிராகன்களுக்கு பிரபலமான இந்தோனேஷியா முதலிடம் வகிக்கிறது, அதே நேரத்தில் அதன் தலைநகரான ஜகார்த்தா ஸ்ட்ரீட் வியூவின் இணைய பயனர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தொற்று நோய்க்கு முன் இந்தோனேஷியா 16 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்று, சுற்றுலாவுக்கான சிறந்த ஆண்டை அடைந்திருந்தாலும், இந்தோனேஷியா எந்த வகையிலும் உலகின் முக்கிய இடங்களில் ஒன்றாக இருக்கவில்லை என்பது ஆச்சரியப்படுத்தும் ஒன்று.

Also Read : வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் தற்கொலை செய்துகொள்ளும் பறவைகள்.. காரணம் என்ன.?

டோக்கியோ, மெக்சிகோ சிட்டி, சாவோ பாலோ மற்றும் பியூனஸ் அயர்ஸ் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அதிகம் தேடப்பட்ட நகரங்களின் பட்டியலில் சேர்ந்து உள்ளது. இந்நிலையில் பிளாக் போஸ்ட் ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் மற்றும் மியாமி உள்ளிட்ட நகரங்களில் எடுக்கப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் வியூவின் முதல் செட் இமேஜ்கள் வெளியிடப்பட்டதிலிருந்து, 16 மில்லியன் மைல்களுக்கு மேல் பயணம் செய்து இதுவரை சுமார் 220 பில்லியன் இமேஜ்களை சேகரித்து உள்ளதாக கூகுள் நிறுவனம் பெருமையாகக் கூறி இருக்கிறது. அதிக ஆர்வத்தை ஈர்க்கும் சுற்றுலா இடங்கள் என்று வரும் போது கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் மிகவும் பிரபலமான இடங்களின் பட்டியலில் முதலிடத்தில் புர்ஜ் கலீஃபா, இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் ஈபிள் டவர் மற்றும் தாஜ்மஹால் ஆகியவை உள்ளன.

Published by:Selvi M
First published:

Tags: Google, Indonesia, Trending