பூமியின் முடிவு எப்படி இருக்கும் என்று பல பேர் பல விதத்தில் கணித்து திரைப்படமாகவும் மேலும் பல விதமான படைப்பாற்றலையும் காட்சிப்படுத்தியுள்ளனர். ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம் பூமியின் கடைசி மனித இனம் இப்படி தான் இருக்கும் என்பதைக் கணித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence) தொழில்நுட்பத்திடம் ஒருவர் பூமியின் முடிவில் மனிதன் எடுக்கும் கடைசி செல்பி எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு அது கொடுத்த பதில் அச்சுறுத்தும் வகையிலிருந்துள்ளது.
டிஃடாக் செயலியில் Robot Overloads என்ற கணக்கில் ஒரு நபர் AI கணித்த பூமியின் கடைசி மனிதனின் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். DALL-E 2 என்ற AI இமேஜ் ஜெனரேட்டரிடம் அவர் பூமியிn கடைசி நேரத்தில் மனிதன் எடுக்கும் செல்பி எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார். அதற்கு அது ஒரு சில புகைப்படங்களை வழங்கியது. அதனைக் கண்ட அந்த நபர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அதற்குக் காரணம் அது மிகவும் திகிலூட்டும் வகையிலிருந்தது.
Yoo should by now have heard about the artistic AI. DALL•E someone asked it to create “the last selfie on earth” the result is accurate pic.twitter.com/zVnO5QdSIa
— Daniel Silva (@volterinator) July 29, 2022
படத்தில் தெரிகிற மனிதன் என்று சொல்லப்படுகிற உருவம் ஏதோ ஏலியனைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. பின்னால் தெரியும் இடமோ ஒரே புகையாக எரிந்து கொண்டு போர் இடம் போல் காட்சியளிக்கிறது. ரத்த கோலத்தில் கண்கள் பிதுங்கி எலும்பாக அடையாளம் தெரியாத வகையில் மனித இனம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மிகவும் கொடூரமாக இருந்த அந்த புகைப்படம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து பெருமளவு பகிரப்பட்டுப் பல பேர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டு வருகின்றனர்.
Also Read:ஆன்லைனில் அன்பை சம்பாதித்த மாற்றுத்திறனாளி - வைரலாகும் புகைப்படம்!
அதில் ஒரு புகைப்படத்தில் பூமி போன்ற ஒரு கிரகம் தெரிக்கிறது. அதை வைத்து சிலர் மனிதர்கள் பூமியை விட்டு வெளியேறி இருப்பார்கள் என்றும், சிலர் மனித இனமே இல்லாமல் அழிவிற்குச் சென்றிருப்போம் என்றும் தங்கள் கருத்துக்களைப் பதிவிடுகின்றனர்.
அதிலும் சிலர் வேடிக்கையாக பள்ளிக்கு விடுமுறை இருக்காது, குறைந்தபட்சம் கேமரா குவாலிட்டியாது நன்றாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்கள்.
AI கணிப்பு தவறுதலாக இருக்கக்கூடும் ஆனால் அது தற்போதைய நிலைமையையும் செயல்களையும் வைத்துத்தான் கணித்துள்ளது. மனிதன் செய்யும் இயற்கைக்குப் புறம்பான செயல்கள் நீடித்தால் இது உண்மையாக மாறக் கூட வாய்ப்புள்ளது என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alien, Artificial Intelligence, Selfie, Viral Videos