ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மனைவிதான் முதல் காதல்.. புது பைக் மாலையை மனைவிக்கு போட்ட கணவன்! கலகல லவ் வீடியோ!

மனைவிதான் முதல் காதல்.. புது பைக் மாலையை மனைவிக்கு போட்ட கணவன்! கலகல லவ் வீடியோ!

மனைவிக்கு மாலையிட முயன்ற முதியவர்

மனைவிக்கு மாலையிட முயன்ற முதியவர்

Viral Video | புது வண்டி வாங்கிய சந்தோஷத்தில் மனைவிக்கு மாலையிட முயன்ற முதியவர்; நெட்டிசன்களைக் கவர்ந்த நெகிழ்ச்சி வீடியோ வைரல்!

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கஷ்டப்பட்டு உழைத்தப்பணத்தில் சிறுக சிறுக சேமித்து புது வண்டியை வாங்கிய வயதான தம்பதியினர். மகிழ்ச்சியில் வண்டிக்கு மாலையிடுவதற்கு பதிலாக மனைவிக்கு மாலையிட முயன்ற முதியவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

  உலகில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் நம் கண்முன்னே கொண்டு சேர்ப்பது சோசியல் மீடியாக்கள் தான். சாதாரண மக்களாக இருந்தாலும் திறமை இருந்தால் போது உங்களை உச்சத்திற்கு அழைத்து செல்ல உதவுவதும் இவை தான். இப்படி மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது பதிவிடப்படும் சில சுவாரஸ்சியமான விஷயங்கள் நெட்டிசன்களைக் கவரும் வகையில் அமையக்கூடும்.

  இப்படித் தான் வட இந்தியாவைச் சேர்ந்த வயதான தம்பதியினரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அப்படி என்ன தான் அந்த வீடியோவில் இருந்தது? என நாமும் அறிந்துக் கொள்வோம்.

  வயதான தம்பதியினரின் நெகிழ்ச்சி வீடியோ:

  இளம் தம்பதியினர் ஒருவரையொருவர் புரிந்துக் கொள்வது என்பது பொதுவான விஷயம் தான். அதே சமயம் திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சற்றும் மாறாத அன்பையும் பாசத்தையும் கொண்டிருக்கும் வயதான தம்பதியினரின் வாழ்க்கை என்றுமே சுவாரஸ்சியமானது.

  அப்படித் தான் வட இந்தியாவைச் சேர்ந்த இந்த வயதான தம்பதியினரின் காதலும். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இத்தம்பதியினர் சம்பாதித்த பணத்தில் சிறுக சிறுக சேமித்து ஒரு புதிய வண்டியை வாங்கியுள்ளனர். கடை உரிமையாளர்களும் வழக்கம் போல டெலிவரி வாகனங்களுக்கு அணிவிப்பதற்காக மாலையை தயார் செய்கின்றனர்.

  இந்நிலையில் வயதான முதியவரின் மனைவி, வண்டிக்கு அருகில் நின்று சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கடை உரிமையாளர் வாகனத்திற்கு அணிவதற்குக் கொடுத்த மாலையை சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் வண்டிக்குப் பதில் மனைவிக்கு அணிய முயல்கிறார். அந்த இடத்தில் மனைவியோ, கணவன் சூடும் மாலையை வாங்குவதற்காக தலைக்குனிந்ததும் தன்னை அறியாமல் சிரிக்க ஆரம்பிக்கிறார்.

  ஷோரூமில் உள்ளவர்களோ, நாங்கள் வண்டிக்குத் தான் மாலைக்கு அணிவிக்க சென்றோம் கூறியதைக்கேட்டதும், வயதான தம்பதியினர் நாணம் கொள்கின்றனர். இது தான் டிவிட்டரில் “மிகவும் அழகான வீடியோ“ என்ற தலைப்புடன் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அக்டோபர் 12ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 4.84 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.

  Read More:எந்த நாட்டில் இந்த டிராக்டர் ஓடுது? சொன்னால் பரிசு - ட்விட்டரில் போட்டி நடத்திய ஆனந்ந் மஹிந்திரா!

   இதோடு இவர்களின் அன்பின் வெளிப்பாடு தான் இத்தகைய செயல், வயதான தம்பதியினரைப் பார்க்கும் போது பொறாமையாக உள்ளது என கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். மற்றொரு டிவிட்டர் பயனர் ஒருவர், இத்தம்பதியினரின் அன்பு உண்மையானது என்றும், இன்றைய தலைமுறையினரிடம் இந்த புரிதலையும், அன்பையும் பார்ப்பதே அரிது என்றும் இவர்களின் அன்பு தொடரட்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வயதான தம்பதியினரை வாழ்த்து மழையில் நனைய வைக்கின்றனர் நெட்டிசன்கள்..

  Published by:Srilekha A
  First published:

  Tags: Viral News, Viral Video