Burger: பர்கர்ல சிக்கன் ஏன் இவ்வளவு கம்மியா இருக்கு? - ஃபோட்டோ பகிர்ந்த கஸ்டமரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

பர்கர்

இந்நிலையில் ஜேஸனின் செயலை ஒரு சிலர் பாராட்டியுள்ள நிலையில், பலர் அவரை விமர்சித்துள்ளனர்.

  • Share this:
நம் ஊர்களில் ஹோட்டல்களில் சாப்பிடும்போது, ஊழியர்களுடன் ஒரு சிலர் பிரச்சனை செய்வதை பார்த்திருப்போம். நாம் கொடுக்கும் பணத்துக்கு சுவையாகவும், சுகாதாரமாகவும் உணவு வழங்க வேண்டியது அவர்களது கடமை என்பது அவர்களின் வாதம்.

இப்படி ஒரு சம்பவம் லண்டனிலும் நடைபெற்றுள்ளது. ஜேசன் குரேன்ஸ்கி என்பவர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பிளேட்டில் பர்கர் மற்றும் அளப்பதற்கு பயன்படுத்தும் டேப் ஆகியவை இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், சிக்கன் பர்கர் ஒன்றை இந்திய மதிப்பில் ரூ.700 கொடுத்து நந்தோஸ் (Nando's) எனும் கடையில் வாங்கியுள்ள ஜேசன், அதில் உள்ள சிக்கனை தனது ஸ்கேல் கொண்டு அளந்து, சிக்கன் 9 செமீ இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் அதில் உள்ள தக்காளியானது சிக்கனை விட பெரியதாக இருக்கிறது எனவும், இவ்வளவு விலை கொடுத்து வாங்கியும் தனக்கு குறைந்தது 10 செ.மீ அளவு கூட சிக்கன் கிடைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் தான் 20 வருடங்களாக அந்தக் கடையின் வாடிக்கையாளர் என்பதால் தனக்கு இப்படி நேர்ந்தது வருத்தமளிக்கிறது எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலளித்துள்ள நந்தோஸ் நிறுவனம் உங்கள் புகார்களை தெரிவிக்கும் படி ஒரு இணைய லிங்க்கை பகிர்ந்துள்ளது.

Also read... WWE Rock: 'ஆண்களுக்கு மகள்கள் தான் தேவை' - டுவைன் ஜான்சன் சொல்லும் முக்கிய காரணம்!

இந்நிலையில் ஜேஸனின் செயலை ஒரு சிலர் பாராட்டியுள்ள நிலையில், பலர் அவரை விமர்சித்துள்ளனர். ஒரு சிலர் அவரை கிண்டலும் செய்து வருகின்றனர். அவரது போஸ்டிற்கு கமெண்ட் செய்துள்ள ஒருவர், ''நீங்கள் மீல்ஸ் சாப்பிடும்போது அதனை டேப்பால் அளந்து பார்ப்பதாய் கற்பனை செய்து பாருங்கள்'' என்றுள்ளார். மற்றொருவர, ''வெறும் லைக்குக்காக இப்படி செய்தீர்களா?'' என்று கேட்டுள்ளனர். இதில் உச்சகட்டமாக ஒருவர்,
''சிக்கனையும், தக்காளியையும் டேப்பால் அளந்து, அதனை பாடி ஷேமிங் செய்துள்ளீர்கள்'' என்று கலாய்த்துள்ளார்.

பொதுவாக நாம் சிறு சிறு வியாபாரிகளிடம் அவர்கள் விற்கும் பொருட்களின் தரம், அளவு குறைவாக இருந்தால் அது குறித்து கேள்வி எழுப்புவோம். ஆனால் பெரிய பெரிய கடைகளில் அதனை செய்ய மாட்டோம். அப்படி செய்தால் பிறர் நம்மை தரம் குறைவாக எண்ணிவிட வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணம் தான் அதற்கு காரணம். ஆனால் அப்படி ஒரு சிலர் கேள்வி கேட்டால், அவர்கள் கேலிக்குள்ளாக்கப்படுகறார்கள். ஜேஸன் செய்தது சற்று அதீதமாக தெரியலாம். ஆனால் நாம் பணம் கொடுத்து வாங்கும் பொருட்களின் தரம் குறைந்தால் அதனை கேட்க நமக்கு உரிமை இருக்கிறது. அது சாலோயோர கடைகளாக இருந்தாலும் சரி, பெரிய பெரிய மால்களாக இருந்தாலும் சரி!.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: