உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் போது ஜாலியாக கடல்வழி பயணம் செய்து வரும் ஹங்கேரி குடும்பம்!

உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கும் போது ஜாலியாக கடல்வழி பயணம் செய்து வரும் ஹங்கேரி குடும்பம்!

ருமேனிய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ் படகுப் பணியாளரான ஜிம்மி கார்னலுடனான கலந்துரையாடல் அவர்கள் பயணத்தைத் திட்டமிடும் போது அவர்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக டோமன்கோஸ் கூறியுள்ளார்.

ருமேனிய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ் படகுப் பணியாளரான ஜிம்மி கார்னலுடனான கலந்துரையாடல் அவர்கள் பயணத்தைத் திட்டமிடும் போது அவர்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக டோமன்கோஸ் கூறியுள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கடந்த ஒரு வருடமாகவே உலகம் நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கிக்கொண்டிருந்த போது, நான்கு பேர் கொண்ட ஒரு ஹங்கேரிய குடும்பம் மட்டும் கடந்த கோடையில் தங்கள் கனவை நிறைவேற்ற உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதுவும் கடல் பயணம். இந்த குடும்பம் "டீட்டைம்" என்று பெயரிடப்பட்ட 50 அடி படகில் உலகம் முழுவதும் பயணம் செய்து வருகின்றனர். 

  கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாத பிற்பகுதியில் குரோஷிய துறைமுகத்தில் இருந்து தங்கள் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர். அங்கிருந்து இத்தாலி மற்றும் ஸ்பெயினைச் சுற்றி பயணம் செய்தனர். பின்னர் அட்லாண்டிக்கை கடப்பதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் உள்ள கேப் வெர்டேயில் சிறிது காலம் நிறுவிட்டு அங்கு நேரத்தை செலவழித்துள்ளனர். பின்னர் மீண்டும் பயணத்தை தொடங்கிய அந்த குடும்பம் கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை மார்டினிக்கில் கொண்டாடியுள்ளனர்.

  மார்டினிக் ஒரு கரடுமுரடான கரீபியன் தீவு, இது லெஸ்ஸர் அண்டிலிஸின் ஒரு பகுதியாகும். தற்போது இந்த குடும்பம் கரீபியன் தீவான செயின்ட் மார்ட்டினில் உள்ள மேரிகோட்டில் முகாமிட்டுள்ளது. இதற்கடுத்ததாக பனாமா கால்வாயை நோக்கி பயணிக்க இருப்பதாக கூறியுள்ளனர். படகில் உள்ள வாழ்க்கை, பல மக்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டதைப் போல நெருக்கடியில் அமையவில்லை என தெரிவித்துள்ளனர். ஐ.டி துறையில் பணிபுரிந்து வரும் 48 வயதான டோமன்கோஸ் போஸ் (Domonkos Bosze) என்பவர் தான் தனது குடும்பத்துடன் கடல் பயணம் மேற்கொண்டு வருகிறார். 

  இவர் தனது 6 மற்றும் 8 வயது குழந்தைகள் மற்றும் தனது மனைவியுடன் பயணம் செய்து வருகிறார். மேலும் வேலை பார்ப்பதற்காக அவர் தனது படகில் ஒரு அலுவலகத்தை அமைத்து பணியாற்றி வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது, "என்னைப் பொறுத்தவரை, எனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியும் என்பது ஒரு அருமையான அனுபவம். வேலையிலிருந்து தாமதமாக வீட்டிற்கு வரும் பிரச்சனை தற்போது முற்றிலும் தீர்ந்துபோனது. தொடர்ந்து பேசிய அவர், எங்கள் பாதை மிகவும் நெகிழ்வானது. 

  சூறாவளி மற்றும் சூறாவளி பருவங்கள் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பயணம் செய்வதற்கான வரம்புகளை நிர்ணயிப்பதால், நாங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை வானிலை வரையறுக்கிறது." என்று கூறியுள்ளார். அவரும் அவரது மனைவி ஆணாவும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இதுபோன்ற கடல் வழிப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். கொரோனா தொற்றுநோய் பரவல் ஆரம்பமாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த சாகசத்தை இந்த தம்பதியினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. தொற்றுநோய் காலத்தில் இதுபோன்ற பயணத்தை மேற்கொள்ளலாமா என யோசித்து வந்த நிலையில் இறுதியில் பயணத்தை மேற்கொள்ள தம்பதியினர் முடிவெடுத்துள்ளனர். 

  Also read... ஆறு முறை லாட்டரியை வென்ற அதிர்ஷ்டக்காரர் - பணத்தை என்ன செய்தார் தெரியுமா?

  மேலும் அவர்கள் தற்போது மேற்கொண்டு வரும் கடல்பயணத்தில் அட்லாண்டிக் கடக்கும் போது ஆறு மணிநேர புயல் தான் இதுவரை சந்தித்த மிகப்பெரிய சவால் என கூறியுள்ளனர். புயலில் இருந்து சாதுர்யமாக கடந்து வந்ததில் படகில் ஒரு டோஸ்டரையும், செயற்கைக்கோள் தொலைபேசியை மட்டுமே இழந்தோம் என தம்பதியினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் ஏற்படும் மாற்றங்களையும், அங்கு உள்ள கட்டுப்பாடுகளையும் பின்பற்றி சோதனை அல்லது தேவைக்கேற்ப தனிமைப்படுத்தலை கடைபிடித்துள்ளனர். 

  ருமேனிய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரிட்டிஷ் படகுப் பணியாளரான ஜிம்மி கார்னலுடனான கலந்துரையாடல் அவர்கள் பயணத்தைத் திட்டமிடும் போது அவர்களின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக டோமன்கோஸ் கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகளைப் பொறுத்து, இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு பசிபிக் நோக்கி பயணிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இப்போது தங்கள் பயணம் இன்னும் 5-6 ஆண்டுகள் நீடிக்கும் என்றும் கூறியுள்ளனர். ஏனெனில் அவர்கள் தெற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் நீண்ட காலத்தை செலவிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: