• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 15 பொது அறிவு கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தால் இவர் ஆட்டோவில் இலவச பயணம்

15 பொது அறிவு கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தால் இவர் ஆட்டோவில் இலவச பயணம்

ஆட்டோ ஓட்டுநரின் வியப்பான முயற்சி

ஆட்டோ ஓட்டுநரின் வியப்பான முயற்சி

ஆட்டோ ஓட்டுநருக்கு ஸ்ரீதேவியின் பிறந்தநாள் முதல் உலகின் முதல் டெஸ்ட் டியூப் பேபி பிறந்தது வரை பல்வேறு துறைகள் சார்ந்த பொது அறிவு விசாலமாக இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

  • Share this:
சிலரின் சிறப்பான யோசனைகளுக்கு நிச்சயம் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். இது சாதாரண மனிதர்கள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை பொருந்தும். இப்படியொரு சிறப்பான விஷயத்தை செய்து வரும் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் வியப்பான முயற்சியை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். மேற்கு வங்கத்தில் உள்ள ஹவ்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் சுரஞ்சன் கர்மகார். இவர் பல வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இவரின் தற்போதைய புதிய முயற்சி அவரின் வாடிக்கையார்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இவரை பற்றி சுரஞ்சன் ஆட்டோவில் பயணம் சென்ற சங்கலன் என்பவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "நான் இன்று மிக சுவாரசியமான ஒரு நபரை சந்தித்தேன். அவரின் எலக்ட்ரிக் ஆட்டோவில் ரங்கோலி மாலுக்கு செல்ல நானும் என் மனைவியும் ஏறினோம். சிறிது நிமிடத்திற்கு பிறகு ஆட்டோ ஓட்டுநரான சுரஞ்சன் எங்களிடம் திரும்பி, "நான் கேட்கும் 15 கேள்விகளுக்கு நீங்கள் சரியாக பதிலளித்தால் சவாரி செய்யும் பணத்தை நீங்கள் தர வேண்டாம்" என்று கூறினார். என் மனைவிக்கு இதை கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எனக்கு, இவர் சவாரி செய்ய கூடுதல் பணம் வாங்குவதற்காகவே இப்படி செய்கிறார் என்று தோன்றியது" என்று அந்த பதிவில் சங்கலன் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு தான் சரி உங்கள் கேள்விகளை கேளுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன். அவர் எங்களிடம் முதல் கேள்வியாக, "நமது தேசிய கீதத்தை எழுதியவர் யார்" என்று கேட்டார். அப்போது தான் நான் அவரை பற்றி அப்படி நினைத்தது தவறு என்று புரிந்து கொண்டேன். பிறகு அடுத்த கேள்வியாக, "மேற்கு வங்கத்தின் முதல் முதலமைச்சர் யார்" என்று கேள்வி எழுப்பினார். இதை கேட்டதும் எனக்கிருந்த 13 வருட கார்ப்பரேட் அனுபவத்தின் மூலம் பி.சி.ரே என்று பதில் கூறினேன்.

ஆனால் அந்த பதில் தவறானது. சரி, உண்மையிலேயே இவருக்கு பொது அறிவு அதிகம் இருக்கிறதா என்பதை அறிய நான் சில கேள்விகளை இவரிடம் கேட்டேன். நான் கேட்ட 2 கேள்விகளுக்கும் இவர் சரியாக பதிலளித்து, என்னை மிகவும் கவர்ந்து விட்டார். இந்த ஆட்டோ ஓட்டுநருக்கு ஸ்ரீதேவியின் பிறந்தநாள் முதல் உலகின் முதல் டெஸ்ட் டியூப் பேபி பிறந்தது வரை பல்வேறு துறைகள் சார்ந்த பொது அறிவு விசாலமாக இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

பிறகு தன்னை பற்றி இந்த ஆட்டோ ஓட்டுநர் கூற தொடங்கினார். "பள்ளியில் படிக்கும்போது வீட்டில் பணம் இல்லாததால் 6 ஆம் வகுப்பை வரை தான் படித்தேன். ஆனால் அதன் பிறகு தினமும் இரவு 2 மணி வரை அன்றாட விஷயங்களை பற்றி படிப்பேன்" என்று கூறினார். மேலும் லிலுவா புத்தக அமைப்பில் உறுப்பினராக உள்ளதாகவும் இவர் குறிப்பிட்டார்.

Also read... பட்ட பகலில் சைக்கிள் திருட்டு - வீடியோவை வைரலாக்கிய நெட்டிசன்கள்

நாங்கள் இறங்கும் இடத்தை அடைந்தவுடன், அவர் எங்களிடம் லேமினேட் செய்யப்பட்ட திப்பு சுல்தான் படத்தை காட்டி, "நான் சில முக்கிய நபரின் பிறந்தநாளை கொண்டாடி வருவேன். இன்று திப்பு சுல்தானின் பிறந்த நாள்" என்று கூறினார். மேலும் அங்கு ஸ்டீபன் ஹாக்கிங், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மனோகர் ஆயிச், கல்பனா சாவ்லா ஆகியோரின் படங்களும் இடம் பெற்றிருந்தது.

நீங்கள் என்னை பற்றி 'அத்புத் தோடோவாலா' (Adbhut Totowala) என்று கூகுளில் தேடி பார்க்கலாம். மேலும் நான் பிறப்பில் ஒரு இந்துவாக இருந்தாலும், அவ்வப்போது முஸ்லிம் தொப்பியை அணிவதுண்டு என்று கூறி அவரின் பையில் இருந்த தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு எங்களிடம் இருந்து விடை பெற்று கொண்டார். சங்கலன் தனது முகநூலில் இவற்றை பதிவிட்டதும் ஏரளமானோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள தொடங்கினர். சுரஞ்சனை போன்ற மனிதர்கள் உண்மையில் பொன்னானவர்கள் என்றே சொல்லலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: