• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • இப்படி தான்... புரிஞ்சுதா? குழந்தைக்கு தவழ கற்று கொடுத்த நாய் - வைரலாகும் வீடியோ!

இப்படி தான்... புரிஞ்சுதா? குழந்தைக்கு தவழ கற்று கொடுத்த நாய் - வைரலாகும் வீடியோ!

குழந்தைக்கு தவழ கற்று கொடுத்த நாய்

குழந்தைக்கு தவழ கற்று கொடுத்த நாய்

சோஷியல் மீடியாக்களில் பிரபலமாகி வரும் இந்த வீடியோஅந்த குழந்தைக்கும் - நாய்க்கும் இடையே உள்ள தனித்துவ உறவை காட்டுகிறது.

  • Share this:
செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பது நமது மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை குறைக்க உதவுவதோடு தனிமை உணர்வை போக்கி குதூகலமாக்குகிறது. எவ்வளவு பெரியவர்களாக நாம் இருந்தாலும் அவை நம்மோடு விளையாடும் போது நாமும் குழந்தையாகிறோம். செல்லப்பிராணிகள் வயதானவர்களுக்கு மதிப்புமிக்க தோழமையை வழங்குவதோடு, வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால் அவை குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வளர பெரிதும் உதவும்.

அவை குழந்தைகளுக்கு சுறுசுறுப்பாக இருக்க கற்று தருவதோடு அவர்களோடு நன்கு பழகி அவர்களின் விளையாட்டுத்தனத்தையும் ஊக்குவிக்கின்றன. கடவுளின் பல அழகான படைப்புகளில் நாய்களும் ஒன்றாக இருப்பதை யாரலும் மறுக்க முடியாது. செல்லப்பிராணிக்காக வளர்க்கப்படும் போது அது நமக்கு மிகவும் முக்கியமான அதே சமயம் பயனுள்ள ஜீவனாக நம்முடனே வாழ்கிறது.

குறிப்பாக குழந்தைகளுடன் நாய்கள் பழகும் விதம் மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வரும் ஒரு வீடியோ நம்மை மிகவும் பரவசப்படுத்துகிறது மற்றும் வியப்பை தருகிறது. நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நடக்க தெரியாத தவழ்வதன் துவக்க நிலையில் இருக்கும் ஒரு சிறு குழந்தைக்கு சிறிய நாய் ஒன்று தவழுவதற்கான வழிமுறைகளை கற்று கொடுப்பது காண்போருக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோஷியல் மீடியாக்களில் பிரபலமாகி வரும் இந்த வீடியோஅந்த குழந்தைக்கும் - நாய்க்கும் இடையே உள்ள தனித்துவ உறவை காட்டுகிறது. இந்த அட்டகாசமான வீடியோவை சுசாந்தா நந்தா (Susanta Nanda) என்ற இந்திய வன அதிகாரி தனது ட்விட்டரில் ஷேர் செய்து இருக்கிறார். "கற்பித்தல் என்பது இதயத்திலிருந்து வெளிவரக்கூடியது. இந்த குழந்தைக்கு எப்படி தவழ வேண்டும் என்ற கலையைக் கற்று கொடுக்கும் இந்த நாய் மிகவும் அழகாக இருக்கிறது" என்ற கேப்ஷனுடன் கீழ்காணும் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார் சுசாந்தா நந்தா.



18 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ கிளிப்பில் சிறிய பொமரேனியன் நாய் குழந்தைக்கு தவழுவது எப்படி என்பதை கற்று கொடுப்பதை காண முடிகிறது. வீடியோவில் காணப்படும் சிறு குழந்தைக்கு தவழ தெரியாததால், முதலில் அந்த நாய் குழந்தைக்கு எதிர் திசையில் படுத்து கொண்டு எப்படி தவழுவது என செய்து காட்டுகிறது.

நாய் செய்ய செய்ய குழந்தையும் அதை பார்த்து தவழ முயற்சிக்கிறது. தொடர்ந்து குழந்தையை தவழ ஊக்கப்படுத்தும் வகையில் அருகே சென்று அதன் கன்னத்தில் மெலிதான முத்தம் ஒன்றை கொடுக்கும் அந்த நாய், பின்னர் குழந்தைக்கு முன்னால் வந்து சைடில் படுத்தப்படி மீண்டும் தவழுவதற்கான பாடத்தை கற்பிக்கிறது.

Also read... Boss-க்கு தன் ராஜினாமாவை வித்தியாசமாக தெரிவித்த பெண் - வைரலாகும் போஸ்ட்!

ஆச்சர்யமாக குழந்தையும் அந்த நாயை பார்த்து கற்று கொண்டு லேசாக தவழ்ந்து முன்னோக்கி வருகிறது. விலங்குகள் தங்கள் மனித நண்பர்களுக்கு உதவ எப்போதும் தயாராக உள்ளன என்பதை வெளிக்காட்டும் இந்த வீடியோ 9,000-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் 2000-க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்று தொடர்ந்து வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: