• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 10 மாதங்களில் ரூ.20 லட்சம் சேர்த்த தம்பதி - எப்படி என அவர்களே கொடுத்த டிப்ஸ்!

10 மாதங்களில் ரூ.20 லட்சம் சேர்த்த தம்பதி - எப்படி என அவர்களே கொடுத்த டிப்ஸ்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கடந்த 10 மாதங்களில் அவர்கள் கடைபிடித்த இந்த கொள்கையால் இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாயை இருவரும் சேமித்துள்ளனர்.

  • Share this:
டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ள தம்பதி, தாங்கள் 10 மாதங்களில் 20 லட்சம் ரூபாய் சேர்த்தது எப்படி? என்ற டிப்ஸ்ஸையும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு சேமிப்பின் முக்கியத்துவத்தை பலரும் உணர்ந்திருக்கின்றனர். இதனால், சேமிப்பது எப்படி? எதில் முதலீடு செய்யலாம்? பாதுகாப்பான முதலீடுகளை தேர்ந்தெடுப்பது எப்படி? என்பது போன்ற விஷயங்களில் மக்களின் கவனம் அதிக அளவில் திரும்பியுள்ளது. சமூக வலைதளங்களிலும் பணத்தை முறையாக சேமிப்பது குறித்தான வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

அண்மையில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட தம்பதி, 10 மாதங்களில் 20 லட்சம் ரூபாய் சேமித்தாக தெரிவித்தனர். அதனை எப்படி சாத்தியப்படுத்தினோம்? என்ற டிப்ஸையும் அவர்கள் விளக்கினர்.

இந்த வீடியோ டிக்டாக் தளத்தில் வைரலானது. அவர்கள் கொடுத்த டிப்ஸ் உபயோகமானதாக இருந்ததால், பலரும் அந்த வீடியோவை மற்றவர்களுக்கு ஷேர் செய்தனர். அந்த வீடியோ வெளியிட்டவரின் பெயர் அப்பிடன்ஸ்மூர். அப்பி டன்ஸ்மூர் மற்றும் அவரது பார்ட்னர் இருவரும் அதிக பணத்தை கண்மூடித்தனமாக செலவு செய்யும் பழக்கமுடையவர்கள் என தெரிவித்துள்ளனர்.

துணிக்கடை மற்றும் காபி ஷாப் என எதுவாயினும், பிராண்டட் கடைகளுக்கு மட்டுமே செல்வது என இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் பிராண்டட் கடைகள் என்பது அதிக விலையைத் தவிர வேறொன்றுமில்லை, அது ஒரு மாயை என உணர்ந்ததாக தெரிவித்த தம்பதி, விலை குறைவான, குவாலிடியான பொருட்களை வாங்குவது என முடிவு செய்துள்ளனர்.

கடந்த 10 மாதங்களில் அவர்கள் கடைபிடித்த இந்த கொள்கையால் இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாயை இருவரும் சேமித்துள்ளனர். அவர்கள் கொடுத்துள்ள முதல் டிப்ஸ், மலிவான விலையில் தரமான பொருட்களை வாங்க முயற்சி செய்ய வேண்டும், பிராண்ட்டான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டுவிடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளனர். அடுத்ததாக, விலையுயர்ந்த கஃபேக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தும் அப்பி, உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் செலவிடுவது தேவையற்றது என விளக்கமளித்துள்ளார்.

Also read... சிறுவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவைப் பகிர்ந்த சச்சின் - ரன்வீர் சிங்கின் ரியாக்சன்!

வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் இந்த டிப்ஸை கட்டாயம் கடைபிடியுங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளார். ஒரு பொருளுக்காக நீங்கள் செலவு செய்யும் பணத்தையும், அதற்காக நீங்கள் உழைக்க வேண்டிய நேரத்தையும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். உதாரணமாக, நீங்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலையில் 500 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

கடையில் நீங்க வாங்க விரும்பும் பேக்கின் விலை 200 ரூபாய் என இருந்தால், அந்த பேக் வாங்குவதற்காக கிட்டத்தட்ட ஒரு நாளைய உழைப்பில் மூன்று மணி நேரம் உழைக்க வேண்டும். இதனை மனதில் கொண்டு, தேவையானது, விருப்பமானது என இரு பட்டியலிட்டு தேவையான பொருட்களை முதலில் வாங்குவதற்கு முயற்சி செய்யுங்கள் என ஆப்பி வலியுறுத்தியுள்ளார். ஆப்பி தம்பதியின் இந்த வீடியோ டிக்டாக்கில் ஒரு லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் ரசித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: