ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்த வேலை நல்லா இருக்கே! McDonalds-இல் இலவசமாக சாப்பிட ரூ.1 லட்சம் சம்பளமாம்..

இந்த வேலை நல்லா இருக்கே! McDonalds-இல் இலவசமாக சாப்பிட ரூ.1 லட்சம் சம்பளமாம்..

காட்சி படம்

காட்சி படம்

Trending : மெக்டொனால்ட்ஸ், சப்வே மற்றும் கிரெக்ஸ் போன்ற துரித உணவு உணவகங்களில் 'டேக்அவே டெஸ்டராக' பணிபுரிய ஆட்களைத் தேடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பெரும்பாலான மக்கள் தங்கள் உழைப்பிற்கு தகுந்த சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும் கூட, அதை நோக்கிய பயணத்தில் நாள் முழுவதும் கடினமாக உழைக்கும் இந்த காலகட்டத்தில், ​​ஒரு ஆன்லைன் சந்தையானது "இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.. சரியான டுபாக்கூர் கம்பெனியா இருக்கும்" என்று நம்மை எல்லாம் யோசிக்க வைக்கும் அளவிலான ஒரு வேலையையும், அதற்கு நம்பமுடியாத ஒரு சம்பளத்தையும் வழங்குகிறது!

இந்த உலகத்தில் உண்மையிலேயே ட்ரீம் ஜாப் என்று ஒன்று இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் அந்த ஆன்லைன் நிறுவனத்தின் பெயர் மெட்டீரியல்ஸ்மார்க்கெட்.காம் (MaterialsMarket.com) ஆகும். இந்நிறுவனம் மெக்டொனால்ட்ஸ், சப்வே மற்றும் கிரெக்ஸ் போன்ற துரித உணவு உணவகங்களில் 'டேக்அவே டெஸ்டராக' பணிபுரிய ஆட்களைத் தேடுகிறது. வேல்ஸ் ஆன்லைன் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, குறிப்பிட்ட வேலைக்காக 1,000 பவுண்டுகள் அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.1 லட்சம் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது; இந்த வேலைக்காக ஆறு நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த குழு, வர்த்தகர்களுக்கான சிறந்த ஃபாஸ்ட் ஃபுட் விருப்பங்களைத் தீர்மானிக்க சந்தை அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளது.

டேக்அவே டெஸ்டராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும், குறிப்பிட்ட நபர் பல வகையான துரித உணவுகளை சாப்பிடும் வாய்ப்பைப் பெறுவார். இதில் மெக்டொனால்டின் லார்ஜ் பிக் மேக் மீல், கிரெக்ஸ் சாசேஜ் மற்றும் ஆம்லெட் பிரேக்ஃபாஸ்ட் பாகுட் மற்றும் சப்வே-யின் ஃபுட்லாங் மீட்பால் மரினாரா ஆகியவைகளும் அடங்கும்.

also read : இந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையை கண்டுப்பிடிக்கவே முடியாதாம்..

இருப்பினும், இந்த உணவுகளை சாப்பிடுவது மட்டுமே உங்கள் பொறுப்பு என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறான ஒரு எண்ணம் ஆகும். குறிப்பிட்ட உணவை உண்ட பிறகு, அதை ருசித்தவர், அதை விற்பனை செய்யும் சந்தைக்கு முக்கிய தகவலை வழங்க வேண்டும். இது, குறிப்பிட்ட உணவு ஒரு நபரை எவ்வளவு நேரம் நிறைவாக வைத்திருக்கும் என்பதை கண்காணிக்க மார்க்கெட் ப்ளேஸ்களுக்கு (சந்தைகளுக்கு) உதவும். கூடுதலாக, உணவு உட்கொள்பவர்களின் ஆற்றல் மட்டங்களை உயர்வாக வைத்திருப்பதில் ஒரு உணவு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தீர்மானிக்கவும் உதவும்.

அதே சமயம் உணவில் ஏதேனும் குறைகள் இருந்தால், உணவில் ஏதேனும் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டாலும் கூட டேக்அவே டெஸ்டர்கள் புகார் அளிக்க வேண்டும். இந்த ஒரு மாத கால வேலைக்காக ஒவ்வொரு டேக்அவே டெஸ்டர்களுக்கும் சுமார் ரூ.1 லட்சம் வழங்கப்படும். மேலும், அவர்கள் தினமும் உண்ணும் ஒவ்வொரு உணவுக்கும் கூட அவர்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை, அந்த செலவையும் மார்க்கெட் ப்ளேஸே ஏற்றுக்கொள்ளும்.

இப்படியாக ஒரு உணவை ருசிப்பவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவு மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டு, அது ஊட்டச்சத்து நிபுணரின் உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்படும். அந்த பகுப்பாய்வானது, உணவை உருவாக்குபவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், இந்த சமூகம் சாப்பிடுவதற்கான சிறந்த உணவு பற்றிய வழிகாட்டியை உருவாக்க பயன்படுத்தப்படும்.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending